Published:Updated:

சிறப்பான சீரணி மிட்டாய்! - பாரம்பர்யம் பேசும் விருதுநகர் ஸ்பெஷல்

சீரணி மிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
சீரணி மிட்டாய்

படம்: அரவிந்த்குமார்.வே

சிறப்பான சீரணி மிட்டாய்! - பாரம்பர்யம் பேசும் விருதுநகர் ஸ்பெஷல்

படம்: அரவிந்த்குமார்.வே

Published:Updated:
சீரணி மிட்டாய்
பிரீமியம் ஸ்டோரி
சீரணி மிட்டாய்

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் கிராமத்தில் இருக்கிறது அந்த மிட்டாய்க்கடை. கடையிலிருந்து வீசும் கருப்பட்டியின் வாசமே அதற்கான விளம்பரம். அடுக்கடுக்காக எட்டு போன்ற வடிவத்தில் சுட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பட்டி, வெல்ல சீரணி மிட்டாய்களை சூடாக வாங்கிச் சாப்பிட மக்கள் கூட்டம் காத்திருக்கிறது. சீராக அடுக்கி வைக்கப்பட்டதால் சீரணி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். பாகு வழியும் மிட்டாய்களை பார்சல் செய்து கொண்டே பேச ஆரம்பித் தனர் கடையின் உரிமை யாளர்கள் விஜயலதா - செல்வ மாரியப்பன் தம்பதி.

சிறப்பான சீரணி மிட்டாய்! - பாரம்பர்யம் பேசும் விருதுநகர் ஸ்பெஷல்

``எத்தனையோவிதமான இனிப்பு வகைகள் வந்தாலும், நம்முடைய பாரம்பர்யமான இனிப்புகளோட சுவைக்கு எதுவும் ஈடாகாது. மதுரை ஜிகர்தண்டா, திருநெல்வேலி அல்வா மாதிரி விருதுநகர்ல சீரணி மிட்டாய் ரொம்ப பிரபலம். பாலவநத்தம் ஏரியா வுல சீரணி மிட்டாய்க் கடையை எங்க தாத்தாதான் முதல்ல ஆரம்பிச்சார். அவர்கிட்டருந்து கத்துக்கிட்டு அம்மா பண்ண ஆரம்பிச்சாங்க. அம்மா கிட்டருந்து நான் கத்துக்கிட்டேன்.

இந்தக் கடையை ஆரம்பிச்சு 80 வருஷங் களாகுது. அப்போலேருந்து இப்போவரை ஒரே மாதிரியான சுவையையும், தரத்தையும் மெயின்டெயின் பண்றோம். இந்த ஏரியாவை சுத்தி இப்போ நிறைய மிட்டாய்க்கடைகள் வந்துட்டாலும், எங்க வாடிக்கையாளர்கள் குறையவே இல்லை’’ என்கிறார் செல்வ மாரியப்பன். மிட்டாய் செய்யும் விதத்தை பகிர்ந்தபடி பேச ஆரம்பித்தார் விஜயலதா.

சிறப்பான சீரணி மிட்டாய்! - பாரம்பர்யம் பேசும் விருதுநகர் ஸ்பெஷல்

``கல்யாணமான புதுசுல, கணவருக்கு உதவியா பார்சல் கட்டுறது, கணக்கு வழக்கு பார்க்குறதுன்னு சின்ன சின்ன வேலைகள் பண்ணிட்டு இருந்தேன். அவர் ஒரு நாள் வெளியூர் போனாகூட அன்னிக்கு வியா பாரத்தை நிறுத்தி வைக்க வேண்டியிருந்துச்சு. அதனால நானும் மிட்டாய் செய்யக் கத்துக்கிட்டேன்.

முதல் நாளே பச்சரிசியை ஊற வெச்சு தோசை மாவு பதத்துக்கு அரைச்சு, லேசா புளிக்க வெச்சுருவோம். மறுநாள் காலையில ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து என்ற கணக்குல உளுந்தை ஒரு மணிநேரம் ஊறவெச்சு, அரைச்சு, அரிசி மாவோட கலப்போம். கொதிக்கிற எண்ணெயில மாவைப் பிழிஞ்சு, வேக வெச்சு எடுத்து கருப்பட்டி அல்லது வெல்லப்பாகுல ஊறவெச்சு எடுத்தா சீரணி மிட்டாய் ரெடி.

சிறப்பான சீரணி மிட்டாய்! - பாரம்பர்யம் பேசும் விருதுநகர் ஸ்பெஷல்

ஆரம்பத்துல கருப்பட்டில மட்டும்தான் செஞ்சுட்டு இருந்தோம். கருப்பட்டி விலை கட்டுப்படி ஆகல. அதனால் வெல்லத்துலயும், சர்க்கரையிலயும் பண்ண ஆரம்பிச்சோம்.

மிட்டாய் சுட்ட மூணு மணி நேரத்துல வித்துரும். நாங்க ரெண்டு பேரும் பெருசா படிக்கல. அதனால ஆன்லைன்ல விற்குறது பத்தியெல்லாம் எங்களுக்குத் தெரியாது.

சிறப்பான சீரணி மிட்டாய்! - பாரம்பர்யம் பேசும் விருதுநகர் ஸ்பெஷல்

சுவைக்காகவோ, மக்களை ஈர்க்கிறதுக் காகவோ மிட்டாய்ல செயற்கையா எதையும் நாங்க கலக்கிறது கிடையாது. இதுவரை எங்கக் கடைக்கு நாங்க எந்த விளம்பரமும் பண்ணதில்லை. தரமும், சுவையும் நல்லா இருந்தா மக்களே விளம்பரம் பண்ணுவாங்க. அதுக்கு எங்கக் கடைதான் உதாரணம்”

- தித்திப்பு புன்னகையுடன் விடை கொடுக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism