Published:Updated:

சித்திரம் அழிந்ததடி!

சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா

சித்ராவின் மரணம் போலவே டிவி ஏரியாவில் இதற்கு முன்னரும் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

சித்திரம் அழிந்ததடி!

சித்ராவின் மரணம் போலவே டிவி ஏரியாவில் இதற்கு முன்னரும் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

Published:Updated:
சித்ரா
பிரீமியம் ஸ்டோரி
சித்ரா
பார்வையாளர் வரிசையில் ஒருவராக, `நம்ம முகத்தை அஞ்சு செகண்டாவது காட்டிட மாட்டாங்களா’ என்கிற பேரார்வத்துடன் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அமர்ந்திருந்த சித்ரா, அடுத்த பத்து வருடங்களில் அதே சேனலில் பிரைம் டைம் ஹிட் சீரியலின் ஹீரோயின்.

‘இந்த உயரத்துக்கு வர்ற வழியில நான் பட்ட சிரமங்களைத் திரும்பிப் பார்த்தா கண்ணுல தண்ணி வந்திடும்’ என இவ்வாண்டு புத்தாண்டு தினத்தில் விகடனிடம் பேசியிருந்தார்.

ஹீரோயின்கள் என்றாலே கர்நாடகா, கேரளா எனத் தேடிக்கொண்டிருந்த சின்னத்திரையில் சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட சென்னைப் பெண் சித்ரா ஜெயித்த கட்டுரை வெளிவரும் முன்பாக, காலம் அவருக்கு அஞ்சலிக் கட்டுரை எழுத வைத்துவிட்டது.

சித்ரா
சித்ரா

இருபத்தெட்டே வயதில், திருமண நிச்சயதார்த்தம் ஊரறிய நடந்து முடிந்திருந்த நிலையில் நிகழ்ந்திருக்கும் சித்ராவின் திடீர் மரணம், தமிழ்த் தொலைக்காட்சி ரசிகர்கள் தாண்டி பலதரப்பட்ட மக்களையும் அதிர வைத்துள்ளது.

இறந்த அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மார்ச்சுவரியில் 24 மணி நேரத்துக்கும் மேலாகக் கிடத்தப்பட்டிருந்த சமயத்தில், வெளியில் ஆண், பெண், வயதானவர்கள், இளைஞர்கள் என அவ்வளவு கூட்டம். அத்தனை பேரும் சித்ரா ஹீரோயினாக நடித்து வந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலைத் தவறாமல் பார்த்து வருகிறவர்களாம்.

‘போலீஸ்கிட்ட சொல்லுங்க, ஒரேயொரு தடவை அவங்க முகத்தைப் பார்த்துட்டுப் போயிடுறோம். இனி முல்லையை (பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சித்ராவின் கதாபாத்திரம்) எங்க போய்ப் பார்ப்போம்’ என அரும்பாக்கத்திலிருந்து வந்திருந்த அந்த நடுத்தர வயதுப் பெண்மணி அழுதபடியே நம்மிடம் கோரிக்கை வைத்தார்.

சித்ரா, ஹேமந்த் ரவி
சித்ரா, ஹேமந்த் ரவி

சித்ராவின் இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த ஒரு காவல்துறை அதிகாரியோ, ‘எங்க வீட்டுலயும் இந்த சீரியலைப் பார்ப்பாங்க சார். என் சர்வீஸ்ல டிவி நடிகை ஒருத்தர் மரணத்துக்காக மக்கள் இப்படி அழுது இதுவரை பார்த்ததே இல்லை’ என்றார்.

‘`துறுதுறுன்னு இருக்கிற பொண்ணுங்க. யார்கிட்டயும் கோபப்பட்டுப் பேச மாட்டாங்க. அவங்களோட தமிழ் நல்லா இருக்கும். திறமையால் படிப்படியா வளர்ந்து வந்தாங்க. எந்த ஒரு விஷயத்துலயும் ஆர்வம் அதிகம். ஒரு சீரியல்ல சிலம்பாட்டக்காரர் மகளா நடிக்கணும்கிறதுக்காக நிஜமாகவே சிலம்பம் கத்துக்கிட்டாங்க. அதேபோல தைரியமான பொண்ணும்கூட. அவங்களோட மரணம் தற்கொலைன்னு மருத்துவப் பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி போலீஸ் சொல்றதை ஏத்துக்கவே முடியலை. சீரியல்ல எப்படி உயரத்துக்கு வந்தாங்களோ அதேபோல சினிமாவுலயும் வரணும்னு நினைச்சவங்க அவங்க’’ என்கிறார் சித்ராவுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள நடிகர் ஒருவர்.

மக்கள் தொலைக்காட்சியில் தன் சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கியவர், சன், ஜெயா, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், விஜய் டிவி என அனைத்து முன்னணி சேனல்களிலும் பணிபுரிந்துவிட்டார்.

நிகழ்ச்சித் தொகுப்பு, நெடுந்தொடர், விளம்பரப் படங்கள் என எல்லா ஏரியாவிலும் பரபரப்பாக இருந்தவர், கடந்த மே மாதம் தன் பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போதுகூட, ‘திருமணம் எப்போது?’ என்ற கேள்விக்கு `ஒரு வருஷம் போகட்டும்’ எனச் சொன்னார்.

சித்ரா
சித்ரா

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே என்ன, ஏன் நடந்ததெனத் தெரியவில்லை, அவரது வாழ்வில் எல்லாமே வேகவேகமாக நடந்தது.ஹேமந்த் ரவியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள் சித்ராவிடம் பேசியிருந்தோம்.

வேடிக்கையாகச் சொன்னாரா தெரியவில்லை, இப்படிச் சொன்னார்... ‘‘இதெல்லாம் நடக்கும்னு நினைச்சுப் பார்க்கலை. எங்களுடைய முதல் சந்திப்புலயே அவர் வேற ஒரு பொண்ணைப் பத்தி என்கிட்ட பேசினார். ‘அந்தப் பொண்ணை எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்க முடிஞ்சா நாலு நல்ல வார்த்தை என்னைப் பத்தி அந்தப் பொண்ணுகிட்ட சொல்ல முடியுமா’ன்னுதான் கேட்டார். அடுத்த சில மாசத்துல பார்த்தா எங்களுக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு.’’

‘ஹேமந்த் ரவி என்பவர் யார்? அவர் எப்படி சித்ராவுக்கு அறிமுகமானார்? நிச்சயம் முடிந்த நிலையில் ரகசியமாக இவர்களின் பதிவுத் திருமணம் நடந்தது ஏன்?

இப்படிப் பேசியிருந்தவர், விகடனுக்காகவே பிரத்யேகமாக ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை முன்கூட்டியே நடத்தி அந்தப் புகைப்படங்களையும் தந்தார். பத்திரிகையில் சித்ராவின் கடைசிப் பேட்டி, செப்டம்பர் 16, 2020 ஆனந்த விகடன் இதழில் வெளியாகியிருந்த அந்தப் பேட்டிதான்.

பிரச்னைகள் ஏதுமின்றி நல்லபடியாகவே போய்க்கொண்டிருந்த சித்ராவின் வாழ்க்கை இந்த நிச்சயதார்த்தத்துக்குப் பிறகுதான் மாறத் தொடங்கியது என்பது மட்டும் தெரிகிறது.

சித்ராவுடன் நிச்சயிக்கப்பட்டு பொதுவெளியில் முகம் தெரியத் தொடங்கிய பிறகே ஹேமந்த் குறித்தும் தாறுமாறான தகவல்கள்.

‘ஹேமந்த் ரவி என்பவர் யார்? அவர் எப்படி சித்ராவுக்கு அறிமுகமானார்? நிச்சயம் முடிந்த நிலையில், திருமணத் தேதி வரை காத்திருக்காமல் ரகசியமாக இவர்களின் பதிவுத் திருமணம் நடந்தது ஏன்? சித்ராவின் மரணம் நிகழ்ந்த அந்தக் கடைசி நாளில் என்ன நடந்தது? இறந்த பின் அவரது மரணம் குறித்து சந்தேகங்கள் கிளம்புவது ஏன்?’ இப்படி நிறைய கேள்விகள் இப்போது எழுப்பப்படுகின்றன.

சித்ராவின் மரணம் கொலையா தற்கொலையா, தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை காவல்துறைதான் கண்டுபிடிக்க வேண்டும்.

சித்ராவின் மரணம் போலவே டிவி ஏரியாவில் இதற்கு முன்னரும் பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. வாய்ப்புகள் இல்லாதது போன்ற தொழில் ரீதியான காரணத்தாலோ, காதல் தோல்வி என்கிற ரீதியில் தனிப்பட்ட காரணத்தாலோ நடந்துள்ளன.

சீரியல் ஹிட் ஆவதே ஒரு சிலருக்குத்தான். அந்த ஒளிவெள்ளம்கூட அந்த சீரியல் ஒளிபரப்பாகி வரும் வரைதான். அந்தச் சமயங்களில் பகட்டான வாழ்க்கைக்குப் பழகி விட்டவர்கள், பிறகு வருமானத்துக்கு வழி இல்லாமல திணறிப்போகிறார்கள்.

மார்க்கெட் இருக்கிற வரையில் சம்பாதித்த பணத்துடன், மனத்துக்குப் பிடித்த ஒருவரைக் கைப்பிடித்துத் திருமண வாழ்வில் நுழைந்தால், முக்கால்வாசி நடிகைகளின் அந்தத் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதில்லை.

சித்ராவின் வாழ்க்கையும் அதுபோலவே அமைந்து முடிந்துவிட்டதா?