Published:Updated:

அண்ணன் மகள் மீது கடும் கொதிப்பில் சசிகலா: அப்படி என்ன செய்தார் கிருஷ்ணப்ரியா?

கிருஷ்ணப்ரியா

ஆதாரங்களையெல்லாம் சசிகலாவிடம், தினகரன் அடுக்கவே... கிருஷ்ணப்ரியா ஓரங்கட்டப்பட்டார். தற்போது சொத்து தொடர்பாக நடந்துவரும் பல சிக்கல்களுக்கும் காரணம் கிருஷ்ணப்ரியாதான் என்று கொந்தளிக்கிறது

அண்ணன் மகள் மீது கடும் கொதிப்பில் சசிகலா: அப்படி என்ன செய்தார் கிருஷ்ணப்ரியா?

ஆதாரங்களையெல்லாம் சசிகலாவிடம், தினகரன் அடுக்கவே... கிருஷ்ணப்ரியா ஓரங்கட்டப்பட்டார். தற்போது சொத்து தொடர்பாக நடந்துவரும் பல சிக்கல்களுக்கும் காரணம் கிருஷ்ணப்ரியாதான் என்று கொந்தளிக்கிறது

Published:Updated:
கிருஷ்ணப்ரியா

''தி.மு.க கூட்டணிக்குள்ளும் ஏதோ கலகமாமே?'' என்று கழுகாரிடம் கேட்டோம்.

''ஆமாம். 'காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய இடங்கள் போக, மீதமிருக்கும் தொகுதிகள் அத்தனையிலும் தி.மு.க-வே போட்டியிடலாம்' என்று பிரசாந்த் கிஷோர் டீம் ஐடியா கொடுத்திருந்தது. அதன்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு கூட்டணிக் கட்சிகளை இப்போதே தி.மு.க தரப்பில் நிர்பந்தித்திருக்கிறார்கள். ஆனால், 'தோழர்கள்' அதிருப்தி தெரிவித்து கொந்தளிக்கவே... தற்காலிகமாகத் திட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் மீண்டும் இந்தத் திட்டம் தூசிதட்டி எடுக்கப்படும் என்கிறார்கள்.''

''ஸ்டாலினைத் தொடர்புகொண்டு திருமாவளவன் பேசியதாகக் கூறுகிறார்களே... என்ன விஷயம்?''

''தி.மு.க-வுடன் பா.ம.க அணிசேரப்போவதாக வரும் செய்திகள் தொடர்பாக திருமா விவாதித்திருக்கிறார். அவரிடம், 'அப்படியோர் எண்ணமில்லை. மீண்டும் ஒரு முறை ஏமாறத் தயாரில்லை' என்று உறுதியளித்தாராம் ஸ்டாலின். அதேபோல, பா.ம.க நிர்வாகிகள் தரப்பிலும், 'தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டாம். நம்மைத் தோற்கடிக்கத்தான் பார்ப்பார்கள்' என்று தைலாபுரத்தில் புலம்பியிருக்கிறார்கள். பெரிய மருத்துவர் மனதில் என்ன கணக்கு இருக்கிறதோ!''

சசிகலா
சசிகலா

"ம்..."

''சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்ரியா மீது கடும் கொதிப்பில் இருக்கிறாராம் சசிகலா. 'தினகரனை ஓரம்கட்டும் நோக்கத்தில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டு உள்ளிட்ட பல விஷயங்களில் அதிகாரிகளிடம் போட்டுக்கொடுத்ததே கிருஷ்ணப்ரியாதான்; அதுவே தனக்கு ஆபத்தாகவும் திரும்பியுள்ளது' என்று சசிகலா கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகளுக்கு போனை போட்டு மிரட்டுவது, வீட்டுக்கு வரும் கட்சி நிர்வாகிகளிடம் ஜெயலலிதாவைப் போன்ற தோரணையில் மிரட்டி ஆட்டுவிப்பது என இவரது அட்டகாசம் அத்துமீறிப் போனதாம்.

இதுகுறித்த ஆதாரங்களையெல்லாம் சசிகலாவிடம், தினகரன் அடுக்கவே... கிருஷ்ணப்ரியா ஓரங்கட்டப்பட்டார். தற்போது சொத்து தொடர்பாக நடந்துவரும் பல சிக்கல்களுக்கும் காரணம் கிருஷ்ணப்ரியாதான் என்று கொந்தளிக்கிறது மன்னார்குடி வட்டாரம். சிறையிலிருந்து சசிகலா வெளியில் வந்ததும், கிருஷ்ணப்ரியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தரப்படும் என்கிறார்கள்..."

- கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட் உள்பட பல்வேறு உள்ளரசியல் தகவல்களையும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3cfiS9a > மிஸ்டர் கழுகு: ரெய்டு பயம்! - கஜானாவை மாற்றிய ஏழு அமைச்சர்கள்... https://bit.ly/3cfiS9a

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!