Published:Updated:

“கிளாமர் ரோலில் நடிக்கிறீங்களா?” - பெண்களை வீழ்த்திய ‘வில்லங்க’ விக்ரம்

 விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம்

‘நீதானே என் மனைவி... உன்னிடம்தான் என்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். உனக்கு துரோகம் செய்துவிட்டு செக்ஸுக்காக நான் யாரிடமும் பழக மாட்டேன்

“கிளாமர் ரோலில் நடிக்கிறீங்களா?” - பெண்களை வீழ்த்திய ‘வில்லங்க’ விக்ரம்

‘நீதானே என் மனைவி... உன்னிடம்தான் என்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். உனக்கு துரோகம் செய்துவிட்டு செக்ஸுக்காக நான் யாரிடமும் பழக மாட்டேன்

Published:Updated:
 விக்ரம்
பிரீமியம் ஸ்டோரி
விக்ரம்

`தமிழ் வெப் சீரீஸ்ல கிளாமர் ரோல் இருக்கு, நீங்க நடிக்கிறீங்களா?’ என மாடலிங் மற்றும் நடிகை வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கும் இளம்பெண்களுக்கு மெசெஜ் அனுப்பி அவர்களைத் தன்னுடைய வலையில் வீழ்த்துவதே விக்ரமின் ஸ்டைல்” என்கிறார் அவரால் பாதிக்கப்பட்ட ‘டப்பிங் ஆர்ட்டிஸ்ட்’ ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கொடுத்த புகாரால் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் விக்ரம்!

வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ரம்யாவைச் சந்தித்துப் பேசினோம். ``எனக்குத் திருமணமாகி, விவாகரத்தும் ஆகிவிட்டது. நானும், சென்னை திருநின்றவூரைச் சேர்ந்த விக்ரமும் வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்ஸ். ஒரு டப்பிங் புராஜெக்ட் தொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் எனக்கு விக்ரம் அறிமுகமாகினான். போனில் எனக்குக் காதல் கவிதைகளை அனுப்பத் தொடங்கினான். ‘ஏன் இப்படி அனுப்புகிறாய்?’ என்று கேட்டதற்கு, ‘இதெல்லாம் என்னுடைய எக்ஸ் லவ்வருக்கு நான் எழுதியது’ என்றான்.

“கிளாமர் ரோலில் நடிக்கிறீங்களா?” - பெண்களை வீழ்த்திய ‘வில்லங்க’ விக்ரம்

அதையெல்லாம் படிக்கும்போது விக்ரம் மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. மேலும் அவன் என்னுடன் பழகும்போது, `செக்ஸில் எனக்கு அதிக ஆர்வம் இல்லை. பெண்கள் கண்ணியமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்வான். இந்தச் சூழலில்தான் கடந்த 2021, பிப்ரவரி 14-ம் தேதி, ‘வேலன்டைன்ஸ் டே’ அன்று லைவ் வீடியோவில் என்னிடம் தன் காதலைச் சொன்னான். அதன் பிறகு நானும் அவனைக் காதலிக்கத் தொடங்கினேன். என்னுடைய கடந்த கால வாழ்க்கையெல்லாம் விக்ரமுக்குத் தெரியும். அவன் குடும்பத்தினரிடம் என்னைத் தோழி என்று அறிமுகப்படுத்தினான். இந்தச் சமயத்தில்தான் ஹைதராபாத்துக்குச் சுற்றுலா சென்றோம். அப்போது சர்வீஸ் அப்பார்ட் மென்ட்டில் தங்கினோம். அங்குள்ள சிவன் கோயிலில் எனக்குத் தாலி கட்டி, மெட்டி அணிவித்தான் விக்ரம். நானும் அவனும் கணவன் மனைவியாக வாழத் தொடங்கினோம். அதற்கு விக்ரம் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், குடும்பத்தைப் பிரிந்து என்னுடன் வந்துவிட்டான்.

“கிளாமர் ரோலில் நடிக்கிறீங்களா?” - பெண்களை வீழ்த்திய ‘வில்லங்க’ விக்ரம்

திருமணம் செய்வதற்கு முன்புவரை நல்லவன்போல தன்னைக் காண்பித்துக் கொண்ட விக்ரம், படுக்கையறையில் எனக்கு சொல்ல முடியாத பாலியல் டார்ச்சர்களைக் கொடுக்கத் தொடங்கினான். ஆபாச வீடியோக்களைக் காண்பித்து அதேபோல செய்ய வேண்டுமென்று கட்டாயப்படுத்தினான். அப்போதெல்லாம், ‘நீதானே என் மனைவி... உன்னிடம்தான் என்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். உனக்கு துரோகம் செய்துவிட்டு செக்ஸுக்காக நான் யாரிடமும் பழக மாட்டேன்” என்று பேசி, என்னை மூளைச்சலவை செய்தான். விக்ரமின் ஆசை, எல்லை மீறத் தொடங்கியபோது அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். அதனால் என்னைப் படுக்கையறையிலேயே அடித்தான். மென்ட்டல் டார்ச்சரும் கொடுத்தான். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தச் சமயத்தில்தான், விக்ரம் பயன்படுத்திவந்த ஸ்மார்ட்போனைத் திறந்து பார்த்தேன், தன் அனுபவங்களை எல்லாம் ஆபாசக் கதைகளாக எழுதிவைத்திருந்தான். ஒருமுறை என்னுடைய லேப்டாப்பை அவன் பயன்படுத்திக்கொண்டிருந்த சமயம், அவன் இமெயிலில் ஒரு பெண்ணுடன் விக்ரம் செக்ஸில் ஈடுபடும் வீடியோ வைத்திருந்ததைப் பார்த்துவிட்டேன். அதையெல்லாம் பார்த்த பிறகுதான் விக்ரமின் சுயரூபம் எனக்குத் தெரிந்தது. இதுபற்றியெல்லாம் கேள்வி கேட்டதோடு, அவனது தவறான போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் என்னைப் பிரிந்து சென்றுவிட்டான்.

அடுத்தடுத்து அவனின் சோஷியல் மீடியாக்களில் மாடலிங், நடிக்க வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கும் இளம்பெண்களுக்கு ‘வெப் சீரீஸ்களில் கிளாமர் ரோல் இருக்கிறது, நடிக்கிறீர்களா?’ எனவும் ஆசைவார்த்தை காட்டி மெசேஜ்களை அனுப்பிவைத்திருந்தான். அதில் ஒரு மாடலிடம், ‘பாத்ரூமில் குளிக்கும் சீன் இருக்கிறது நடிக்கிறீர்களா?’ என்றும் கேட்டிருக் கிறான். இன்னும் சிலவற்றை இங்கே என்னால் சொல்ல முடியாது. என்னைவிட்டுப் பிரிந்து சென்ற விக்ரம், கடந்த ஜூன் 16-ம் தேதி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப்போகும் தகவல் கிடைத்தது. அதை போலீஸாரிடம் சொன்ன பிறகுதான் அவனைக் கைதுசெய் துள்ளனர். என்னுடைய ஆபாச வீடியோக்கள் விக்ரமிடம் இருக்கின்றனவா என்று தெரிய வில்லை. `கால் பாயாக நடிக்கவும் ஆள் தேவை’ என்றும் அவன் விளம்பரம் செய்திருந்தான். ஆண்கள் எத்தனை பேர் ஏமாந்தார்களோ தெரியவில்லை” என்றார் சோகத்தோடு.

“கிளாமர் ரோலில் நடிக்கிறீங்களா?” - பெண்களை வீழ்த்திய ‘வில்லங்க’ விக்ரம்

வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவிடம் பேசினோம். ``விக்ரம் மீது நம்பிக்கை மோசடி, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், பெண் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். விக்ரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகார், ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. விக்ரமுக்கு ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்திருக்கிறது. அதன் பிறகுதான் இவருடன் பழகியிருக்கிறான். இருவரையும் பிரிந்த விக்ரம், இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றபோதுதான் அவனைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார்.

விக்ரம் தரப்பில் நம்மிடம் பேசிய அவரின் குடும்பத்தினர், ``செய்திகளில் வருவதைப்போல விக்ரம் மோசமானவன் இல்லை. தவறான நட்பால் தடம் மாறி இன்று சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறான். சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism