Published:Updated:

`அயோத்தி ராமர் கோயில்!’ - நன்கொடை அளிக்கும் ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர்

ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.51,000 நன்கொடை அளிப்பதாக உத்தரப்பிரதேச ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் வசீம் ரிஸ்வி அறிவித்துள்ளார்.

அயோத்தி
அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. பல ஆண்டுகளாக நிலவி வந்த அயோத்திப் பிரச்னைக்கு உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த உத்தரவில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். முஸ்லிம்கள் வழிபடுவதற்கு மாற்று இடமாக அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும். 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குக் கடும் கண்டனத்தை நீதிமன்றம் பதிவுசெய்தது. பாபர் மசூதி இருந்த பகுதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது செல்லாது எனவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
விகடன்

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் உத்தரப்பிரதேச அரசு தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. ராமர் கோயில் கட்டுவதற்காக, ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர் வசீம் ரிஸ்வி 51,000 ஆயிரம் ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளார். இதைத் தனது பட நிறுவனமான வசீம் ரிஸ்வி ஃபிலிம்ஸ் சார்பில் வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 'கோயில் கட்டப்படும்போது, ஷியா வக்ஃப் வாரியம் கட்டுமானத்துக்கு உதவும் என்றும், அயோத்தியில் ராமர் கோயிலை எழுப்புவது என்பது ராம பக்தர்களுக்கு பெருமைக்குரியது' என்றும் கூறியுள்ளார்.