Published:Updated:

பயனற்ற ஆழ்துளைக் கிணற்றிலும் நீரை வரவழைக்கும் நுட்பங்கள்!

ஆலோசனை
பிரீமியம் ஸ்டோரி
ஆலோசனை

ஆலோசனை

பயனற்ற ஆழ்துளைக் கிணற்றிலும் நீரை வரவழைக்கும் நுட்பங்கள்!

ஆலோசனை

Published:Updated:
ஆலோசனை
பிரீமியம் ஸ்டோரி
ஆலோசனை

ழ்துளைக் கிணறுகள்தான் தமிழகத்தின் இன்றைய முக்கிய செய்தியாக இருக்கின்றன. பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் குழந்தைகளைக் காவுவாங்கும் சம்பவம் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனாலும், பலரும் ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிப்பதில் போதுமான விழிப்புணர்வில்லாமல் இருக்கிறார்கள். சுஜித் மரணம் ஏற்படுத்திய சோகம் காரணமாக, `பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மூட வேண்டும்’ என்று அரசு வேகம் காட்டிவருகிறது. பலரும் குழாய்க்கு மூடிபோட்டு வருகிறார்கள். ஆனால், செலவு செய்து அமைத்த ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதால் எந்தப் பயனும் இல்லை. அதே நேரம், அவற்றை மழைநீர்ச் சேமிப்புக் குழியாக மாற்றினால் நிலத்தடி நீர் உயர்வதோடு, அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதற்குக்கூட வாய்ப்பிருக்கிறது.

ஆழ்துளைக் கிணற்றில் நீரை வரவழைப்பதற்கான அமைப்பு
ஆழ்துளைக் கிணற்றில் நீரை வரவழைப்பதற்கான அமைப்பு

`பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும்’ அல்லது `மழைநீர்ச் சேகரிப்புக் குழியாக மாற்ற வேண்டும்’ என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், அதை எப்படிச் செயல்படுத்துவது என யோசிக்கிறீர்களா? உங்களுக்காகவே சில ஆலோசனைகளைச் சொல்கிறார் நீர் மேலாண்மை வல்லுநர் பிரிட்டோ ராஜ்.

‘‘தமிழகத்தில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக ஆழ்துளைக் கிணறுகள் (போர்வெல்) அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன. நிலத்தடி நீரும் ஆழத்துக்குச் சென்றுவிட்டது. அதனால் பல ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவை பயன்பாடில்லாமல் இருக்கின்றன. பெரும்பாலும் பயன்பாட்டில் இல்லாதவற்றை முறையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து மூடுவதில்லை. இதனால் கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுவரை 13 குழந்தைகள் கிணற்றில் விழுந்திருக்கின்றன. ஆனாலும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகள் இன்னமும் மூடப்படாமல் இருப்பதுதான் வேதனை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயனற்ற ஆழ்துளைக் கிணற்றிலும் நீரை வரவழைக்கும் நுட்பங்கள்!

ஆழ்துளைக் கிணற்றை நிரந்தரமாக மூடுவதற்கு, அதற்குள் அடி ஆழத்திலிருந்து மேல் பகுதி வரை மண்ணைக்கொண்டு நிரப்பி மூட வேண்டும். சிலர், பேருக்குக் கொஞ்சம் மண்ணைப் போட்டு மூடிவிட்டுப் போகிறார்கள். மழை பெய்யும்போது, அதில் சிறிய துளை ஏற்பட்டால் போதும்; அந்த மண் முழுவதும் கரைந்து மீண்டும் துளையுள்ளதாக மாறிவிடும். `சரி, அதற்காகக் கிணறு முழுவதையும் மூடும் அளவுக்கு மண்ணுக்கு எங்கே போவது, அதற்கு அதிக செலவாகுமே...’ என நினைப்பவர்கள், மேல் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி கான்கிரீட் தளம் அமைத்து, அலுமினியத் தகடுவைத்து மூடி, பூட்டுப் போட்டுவிடலாம். `அதற்கும் செலவாகும்’ என நினைப்பவர்கள் ஆழ்துளைக் கிணற்றுக்கு மேல் கடப்பா கல், பலகை, கல் தகடு, பெரிய பாறைக் கல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைவைத்து மூடலாம். போர்வெல்லை யாரும் நெருங்காத வகையில் வேலி அமைத்து, குழாயை மூடியால் மூடிவிட வேண்டும். பக்கவாட்டில் 3 அடிக்கு 3 அடி தோண்டி அதில் ஹாலோ பிளாக் அல்லது செங்கல் வைத்துக் கட்டி, அதில் அலுமினியத் தகடுவைத்து மூடி போட்டுவிடலாம். குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலுள்ள பயன்பாடற்ற ஆழ்துளைக் கிணறுகளில் இதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

 பிரிட்டோ ராஜ்
பிரிட்டோ ராஜ்

என்னைப் பொறுத்தவரை, பயனற்ற ஆழ்துளைக் கிணறு என்று எதுவுமே இல்லை. தற்போது பயன்பாடில்லாமல் இருப்பவற்றைப் பயனுக்குக் கொண்டு வரலாம். அதை மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியாக மாற்றிக்கொள்ளலாம். இன்றைக்கு நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு ஆழ்துளைக் கிணறுகளைப் பயனுள்ளவையாக மாற்றிக்கொள்வதுதான் சிறந்தது. கேசிங் பைப் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர்ச் சேமிப்புக் குழிகளாக மாற்றலாம். குழாயைச் சுற்றி, 10 அடி நீளம், 10 அடி அகலம், ஆறடி ஆழத்தில் ஒரு குழியெடுக்க வேண்டும். 10 அடி எடுக்க வாய்ப்பில்லையென நினைப்பவர்கள், ஆறடி நீள, அகல ஆழத்தில் குழியெடுக்க வேண்டும். குழியெடுத்த பிறகு குழாய் வெளியே தெரியும். அதில் 12 மி.மீ இரும்புக் கம்பியைச் சூடு செய்து, பிளாஸ்டிக் குழாயில் ஆங்காங்கு துளையிட வேண்டும். 30-40 துளைகள் வரை இடலாம். பிறகு இரண்டடி அகலத்தில் நைலான் கொசுவலை மூலம் குழாயைச் சுற்றி மூட வேண்டும். வலை கீழே விழாமல் இருக்க கீழ், நடு, மேல் பகுதிகளில் கட்டுக்கம்பி போட்டுக் கட்டிவிட வேண்டும். குழியின் தரைப்பகுதியில் கேசிங் குழாயும், மண்ணும் சந்திக்கும் இடத்தில் அங்கு கிடக்கும் சிறு சிறு கற்கள், கொஞ்சம் மணல், சிமென்ட் கலந்து குழாயைச் சுற்றிப் பூசிவிட வேண்டும். மூன்று அடி நீள அகலம், அரையடி உயரம் இருப்பதுபோல் பூசினால் போதும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
1. குழாயைச் சுற்றி ஆறடி நீள, அகல ஆழத்தில் குழியெடுக்க வேண்டும்.
1. குழாயைச் சுற்றி ஆறடி நீள, அகல ஆழத்தில் குழியெடுக்க வேண்டும்.

அதன் பிறகு, காட்டில் கிடைக்கும் கற்கள், கிணறு வெட்டும்போது கிடைக்கும் உடை கற்கள் ஆகியவற்றைவைத்து மூன்றடி ஆழத்தை நிரப்ப வேண்டும். அதற்கு மேல் இரண்டு அடி உயரத்துக்கு ஒன்றரை மில்லிமீட்டர் அளவு கொண்ட ஜல்லி மூலம் மூட வேண்டும். உடை கற்கள் கிடைக்காவிட்டால், ஐந்தடி உயரமும் ஒன்றரை மில்லிமீட்டர் அளவும்கொண்ட ஜல்லிக்கற்களைக் கொண்டு நிரப்பலாம். அதற்கு மேல் முக்கால் அடிக்கு ஹாலோபிளாக் அல்லது செங்கல் மூலமாக ஒரு சுவர் கட்ட வேண்டும். மழை பெய்யும்போது, தண்ணீர் அந்தக் குழிக்கு வரும் பகுதியில் சுவரில் ‘ப’ வடிவில் ஒரு இடைவெளி இருப்பதுபோல் கட்ட வேண்டும். வரும் மழைநீர், சுவரில் மோதி நின்று, ‘ப’ வடிவ வாய் வழியாக, குழிக்குள் போவது போல் அமைக்க வேண்டும். இப்படிச் செய்தால் மழைநீர் ஆழ்துளைக் குழாய் மூலமாக நிலத்தடிக்குச் சென்று சேகரமாகும்.

2. குழாயில் துளையிட வேண்டும்.
2. குழாயில் துளையிட வேண்டும்.

பல இடங்களில் தண்ணீர் இல்லையென்றவுடன் கேசிங் குழாயை உருவியிருப்பார்கள் சிலர். அந்த இடங்களிலும் மழைநீரைச் சேமிக்கலாம். எத்தனை அடி விட்டத்தில் போர்வெல் அமைத்திருக்கிறோமோ அதைவிட ஒரு அடி குறைவான விட்டமுள்ள பிளாஸ்டிக் குழாயை வாங்கிக்கொள்ள வேண்டும். குழாயின் உயரம் எட்டடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும். கீழேயிருந்து இரண்டு அடி உயரத்தில் இரண்டு பக்கமும் துளையிட்டு, 12 மி.மீ இரும்புக் கம்பியை உள்ளே நுழைக்க வேண்டும். ஒருபுறம் நுழைத்து, மறுபுறம் வெளியே வருமாறு கம்பியை நுழைக்க வேண்டும். கம்பியின் உயரம் நான்கடி இருக்கலாம். இப்போது கம்பி சொருகப்பட்ட குழாயை, குழிக்குள் இறக்க வேண்டும். இரண்டடி மட்டும் உள்ளே போகும். கம்பி இருக்கும் இடம் தரைமீது நிற்கும். இப்போது கீழே குழாயுள்ள இரண்டடி ஆழத்துக்கு ஏற்கெனவே சொன்னதுபோல், 10 அடி நீள, அகலத்தில் குழியெடுக்க வேண்டும். மீண்டும் குழாயைக் குழிக்குள் செலுத்தினால் மேலும் இரண்டடி ஆழம் போகும். மீண்டும் சுற்றியும் குழியெடுக்க வேண்டும். இப்படி மூன்று முறை செய்தால் ஆறடி உயரத்துக்கான குழி கிடைத்துவிடும். இப்போது ஏற்கெனவே சொன்னதுபோல், ஐந்தடி உயரத்துக்கு ஜல்லிக்கற்களைக் கொட்டி மூட வேண்டும். அதற்கு மேல் முக்கால் அடிக்குச் சுவர் எழுப்பிக்கொள்ள வேண்டும்.

3. கொசுவலை மூலம் குழாயைச் சுற்றிக் கட்ட வேண்டும்.
3. கொசுவலை மூலம் குழாயைச் சுற்றிக் கட்ட வேண்டும்.

இப்படிச் செய்த பிறகு, மழை பெய்யும்போது தண்ணீர் குழிக்குள் போகும். அப்படிப் போகும்போது குழிக்குள்ளே பக்கவாட்டிலிருக்கும் ஊற்றுகளின் அடைப்பு திறந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படி ஊற்றுத் திறந்துகொண்டால் புது போர்வெல் நமக்குக் கிடைக்கும். ஏற்கெனவே ஒரு போர்வெல் பயன்பாட்டில் இருக்கிறது. தற்போது மழைநீர்ச் சேகரிப்பு போர்வெல்லிலும் தண்ணீர் வருகிறது என்னும்போது இரண்டு போர்வெல்களையும் இயக்கும் கம்ப்ரஷர்கள் கிடைக்கின்றன. அதன் மூலமாக இரண்டு ஆழ்துளைக் கிணற்றின் தண்ணீரையும் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் நான்கு ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் நீரை இறைக்கும் அமைப்புகள் கிடைக்கின்றன.

4. கீழ்ப் பகுதியில் குழாய் தரைப்பகுதி மண் சந்திக்கும் இடத்தில் மூன்றடி நீள, அகலம். அரையடி உயரத்தில் பூச வேண்டும்.
4. கீழ்ப் பகுதியில் குழாய் தரைப்பகுதி மண் சந்திக்கும் இடத்தில் மூன்றடி நீள, அகலம். அரையடி உயரத்தில் பூச வேண்டும்.

`பயனற்ற ஆழ்துளைக் கிணறு’ என்று சொல்ல வேண்டாம். `செறிவூட்டப்படாத ஆழ்துளைக் கிணறு’ என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். மேற்சொன்ன முறையில் ஆழ்துளைக் கிணற்றைச் செறிவூட்ட அதிகபட்சம் 20,000 ரூபாய் செலவாகும். அதுவும் ஜல்லிக்கற்கள் இருந்தால் இன்னும் செலவு குறையும்.

5. குழிக்குள் ஐந்தடி உயரத்துக்கு ஒன்றரை மி.மீ ஜல்லியைக் கொட்ட வேண்டும். அதற்கு மேல் செங்கல் அல்லது ஹாலோ பிளாக் மூலம் சுவர் எழுப்ப வேண்டும்.
5. குழிக்குள் ஐந்தடி உயரத்துக்கு ஒன்றரை மி.மீ ஜல்லியைக் கொட்ட வேண்டும். அதற்கு மேல் செங்கல் அல்லது ஹாலோ பிளாக் மூலம் சுவர் எழுப்ப வேண்டும்.

எனவே, இந்த முறையில் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இருக்கும்.படி செய்யலாம். இதைச் செய்தால் நீங்கள் ஆழ்துளைக் கிணற்றை அமைத்த பலன் கிடைத்துவிடும். இதனை உடனடியாகச் செய்ய வேண்டும். அரசாங்கம் செய்யும் என எதிர்பார்க்காமல் நாமாகச் செய்ய வேண்டும். இதைச் செலவு என நினைக்காமல் நீர்ச் சேமிப்பு என நினைத்துச் செய்ய வேண்டும். இதனால் நிலத்தடி நீர் இப்போது இருப்பதைவிடச் சற்றுக் கூடுதலாகும்.

6. தண்ணீர் குழிக்குள் வரும் வழியில் `ப’ வடிவில் இடைவெளி இருக்க வேண்டும்.
6. தண்ணீர் குழிக்குள் வரும் வழியில் `ப’ வடிவில் இடைவெளி இருக்க வேண்டும்.

இனிமேல் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைப்பவர்கள், தண்ணீர் கிடைக்கவில்லை என கேசிங் குழாயை எடுக்காதீர்கள். அது அப்படியே இருக்கட்டும். அதை வைத்து மழைநீரைச் சேமிக்கலாம். எனவே, பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை உடனடியாக மழைநீர்ச் சேமிப்பு அமைப்பாக மாற்ற முயலுங்கள்.

தொடர்புக்கு, பிரிட்டோ ராஜ், செல்போன்: 99444 50552.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism