Published:Updated:

குப்பை என்பது குப்பை மட்டுமல்ல!

பிரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
பிரியதர்ஷினி

முதலில் ஒவ்வொரு வீட்டிலும் சேருகின்ற குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் ஒதுக்குவகைக் குப்பை என்று மூன்றுவகையில் பிரித்துத் தரச்சொல்லிக் கேட்கிறோம்.

குப்பை என்பது குப்பை மட்டுமல்ல!

முதலில் ஒவ்வொரு வீட்டிலும் சேருகின்ற குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் ஒதுக்குவகைக் குப்பை என்று மூன்றுவகையில் பிரித்துத் தரச்சொல்லிக் கேட்கிறோம்.

Published:Updated:
பிரியதர்ஷினி
பிரீமியம் ஸ்டோரி
பிரியதர்ஷினி

அகன்று சிரிக்கும் கண்ணாடிக் கட்டடங்களும் உயர்ந்து வியக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளும் நம்மை வழிநெடுகத் தொடரும் சென்னை ராஜீவ் காந்தி சாலை. அத்தனை ஜனமும் தங்களுக்குரிய பணியிடங்களுக்கு விரைந்துக் கொண்டிருக்கும் ஒரு பரபரப்பான காலைப்பொழுதில் தனியார் வேன் ஒன்று ஒவ்வொரு குடியிருப்பாகச் சென்று குப்பைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தது. மாநகராட்சி சார்பாக மட்டுமே செய்யப்படும் இப்பணியை மேற்கொள்ளும் இவர்கள் யார் என்று விசாரித்தபோதுதான், திடக்கழிவு மேலாண்மை நிறுவனமான Wastewinn Foundation பற்றித் தெரியவந்தது. Social entrepreneur-ஆக இயங்கி வரும் அதன் நிறுவனரான பிரியதர்ஷினியைச் சந்தித்து அவர்கள் செய்துவரும் பணிகளைப் பற்றிப் பேசினேன்.

குப்பை என்பது குப்பை மட்டுமல்ல!

“சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் நான் உறுப்பினராக இருந்தபோது அந்த அமைப்பு சார்பாகப் பல்வேறு தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட சில கடற்கரை ஓரங்களைத் தேர்ந்தெடுத்து அங்குள்ள குப்பைகளை அகற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படி நாங்கள் சுத்தம் செய்துவிட்டுப் போன இடம் ஒரே வாரத்தில் பழையமாதிரி குப்பையாகிவிடும். இது நாங்கள் செய்யும் வேலையை அர்த்தமில்லாமல் ஆக்கியதால் என்ன செய்யலாம் என்று யோசித்தோம். முதலில் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் சேரும் குப்பைகள் அருகிலுள்ள நொச்சிக் குப்பம் சுற்றுவட்டாரத்தில் இருந்து வருகிறது என்பதை அறிந்துகொண்டு இதுகுறித்த விழிப்புணர்வை அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தும் முயற்சிகள் சிலவற்றைச் செய்தோம். மேலும், அப்பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை மாநகராட்சியின் துணையோடு உரமாக மாற்றும் பணிகளை மேற்கொண்டோம். இப்பணிகளைச் சில ஊடகங்களின் வாயிலாக அறிந்துகொண்ட சில அப்பார்ட்மென்ட்வாசிகள் அவர்களின் குப்பைகளையும் இதுபோல அகற்றுமாறு எங்களிடம் கேட்டனர். ஆனால் தன்னார்வலர்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்தப் பெரிய பணியைச் செய்வது சாத்தியமில்லை. எனவே இதை ஒரு ‘பிசினஸ் மாடலாக’ மாற்றினோம். அப்படி 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் இந்த Wastewinn Foundation.

குப்பை என்பது குப்பை மட்டுமல்ல!

முதலில் ஒவ்வொரு வீட்டிலும் சேருகின்ற குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் ஒதுக்குவகைக் குப்பை என்று மூன்றுவகையில் பிரித்துத் தரச்சொல்லிக் கேட்கிறோம். இப்படிச் சேகரிக்கப்பட்டதில் மக்கும் குப்பை சோழிங்கநல்லூரில் உள்ள எங்களின் உரம் தயாரிக்கும் இடத்திற்குச் செல்லும். பிளாஸ்டிக் குப்பைகளாகச் சேகரிக்கப்படும் 35 சதவிகிதத்தில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சிசெய்திட முயற்சிசெய்வோம். அதையும் மீறி மிஞ்சும் சின்னச் சின்ன பிளாஸ்டிக் கவர்கள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்குச் சென்றுவிடும். மீதமுள்ள 5 சதவிகிதம் மட்டுமே பூமிக்குச் செல்கிறது. சானிட்டரி பேட்ஸ் போன்ற ஒதுக்குவகைக் குப்பைகளை அரசாங்கம் தனியே எடுத்துக்கொண்டாலும் அதற்கென்று Incineration யூனிட் எங்களிடம் உள்ளது” என்று விளக்குகிறார்.

ஒரே ஒரு மீன்பாடி வண்டியுடன் தொடங்கப்பட்ட Wastewinn நிறுவனத்தில் இன்று 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பிரியதர்ஷினியின் கீழ் வேலை செய்கிறார்கள். சுமார் 7, 8 டன் மக்கும் குப்பை, 15 டன் மக்காத குப்பை தினமும் சேகரிப்பட்டு இந்நிறுவனத்தால் அன்றன்றைக்கே பாகுபடுத்தி மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்கான சர்வீஸ் சார்ஜாக குறைந்த அளவிலான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதுதவிர எடைக்குப் போடுவதிலிருந்து வரும் மொத்தத் தொகையும் வேலை செய்யும் பணியாளர்களின் குடும்பங்களுக்கே கொடுக்கப்படுகிறது.

பிரியதர்ஷினி
பிரியதர்ஷினி

‘இது வெறும் குப்பைதானே’ என்று நினைக்காமல், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்கவேண்டும்.