Artashat – ஆர்டஷாட்

ஆர்மீனியாவின் அராக்ஸ் நதி தான் அராரட் என்ற நிலப்பகுதியைச் செழிப்பாக்குகிறது. இங்குதான் ஆர்டஷாட் நகரும் விராட் கோரும் உள்ளன. என்ன ஸ்பெஷல் இங்கே?

`ஆர்மீனியாவின் பழம்' என அறியப் படுபவை திராட்சையும் மாதுளையும். இந்த திராட்சைதான் மது தயாரிப்பில் இந்த தேசத்தை முன்னணி ஆக்கியுள்ளது. திராட்சைத் தோட்டங்கள் அதிகமுள்ள பகுதி இது. அதனால் ஒயின் தொழிற்சாலைகளும் நிறையவே உள்ளன. சாலையோரங்களிலேயே புதிய பாட்டிலில் பழைய ஒயின் வாங்கலாம். இங்கு ஆப்ரிகாட் பழங்கள் மற்றொரு சிறப்பு.

செர்ரி, ஆப்ரிகாட், மல்பெர்ரி மரங்கள் ஏராளம். நம் வாழை, நெல், தென்னை, மா போல அங்கு இவை.

ஆப்ரிகாட் மரத் தோட்டங்களின் நடுவில் நாம் பயணிக்கலாம். இந்தத் தோட்டங்களில் காவலுக்கு நாய்களைப் பயன்படுத்துகின்றனர்.

பேன்ட் சர்ட்டில் பணி செய்யும் விவசாயிகள் இன்முகத்துடன் நம்மை வேண்டிய அளவு பறித்துக்கொள்ள பர்மிஷன் கொடுக்கிறார்கள். ரொம்ப நல்லவங்க!

வறண்ட பிரவுன் மலைகள் சாலையின் இருபுறமும் உள்ளன. வெயிலும் கொளுத்துகிறது. செம ஹாட் மச்சி!

மவுன்ட் அராரட்

இதுதான் அதிக சோகத்தை ஆர்மீனியர் களுக்கு அள்ளித்தரும் தெற்குப்பகுதி. காரணம் துருக்கி! ஆர்மீனியர்களுக்கு நம் இமயமலைபோல அராரட் மலைதான் தேசிய அடையாளம்; புனிதச் சின்னமும்கூட. ஆனால், அது இப்போது துருக்கி வசம்.

மிகப்பெரும் இந்தச் சோகம் நிகழ்ந்தது 1920-ம் ஆண்டில் நடந்த துருக்கி - ஆர்மீனிய யுத்தத்தில்.

எனினும் இதன் சிகரங்களைப் பார்க்கவே கொள்ளை அழகு. பனிபடர்ந்த மேகங்கள் அமர்ந்த இந்த மலை ஒட்டமான் - பெர்ஷியன் எல்லைக்கோடாகவும், இரான் குர்தீஷ் மக்களின் போர்களுக்குக் காரணமாகவும் இருந்திருக்கின்றன. இந்தப் பண்டைய ஆர்மீனிய பெயர் மாஸிஸ்.

ஒருமுறை துருக்கி - ஆர்மீனிய அரசு அதிகாரிகளுக்கிடையேயான பேச்சு வார்த்தையில், `நாங்கள் கைப்பற்றிய அராரட் மலையை உங்கள் கொடியின் சின்னமாக எப்படி நீங்கள் வைத்திருக்கலாம்?’ என துருக்கி அரசின் உயரதிகாரி கேட்க... அதற்கு ஆர்மீனிய தரப்பு அதிகாரி, `நீங்களும்தான் உங்கள் கொடியில் வைத்துள்ளீர்கள், அதை யாராவது கேட்டோமா...’ என்று பொருத்தமான பதில் கொடுத்தாராம். இதைப் பெருமையாக பேசிக் கொள்கின்றனர் ஆர்மீனியர்கள்.

Khor virap

இது துருக்கியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில், அராரட் மலைப்பகுதி பின்னணியில் அமைய, சிறிய மலைப்பகுதி யிலுள்ள கிறிஸ்தவ புனித இடம் - மொனஸ்ட்ரி.

ஒரு நாட்டை, குறிப்பாக கலாசார அடையாளங்களை அழிப்பது எதிரி நாடுகளின் நோக்கமாக இருக்கும். அப்படி இந்தப் பகுதிகளில் இருந்த ஆர்மீனிய அரச குடும்பத்தினரின் கல்லறைகள் சிதைக்கப்பட்டு, அவர்களின் சிலுவை + திராட்சைக் கொடிகள் இணைந்த சின்னங்கள் இரானியரால் உடைக்கப்பட்டன.

இப்போது அவற்றில் சில மீட்கப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளன.

அவற்றை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி நடந்தும், சிலபல படிகள் ஏறியும் சென்றால் சிறிய மலை... இல்லை குன்று என்றே சொல்லலாம். அதன் மேலே மிகப்பெரிய சர்ச். இங்கு வாழ்ந்த கிரிகோரி என்ற புனிதரால், அவர் மூலம் உலகிலேயே முதல் கிறிஸ்தவ நாடாக ஆர்மீனியா பிரகடனப்படுத்தப்பட்டது. இது நடந்தது கி.பி 301-ல். இதற்குப் பின்னே சுவையான ஒரு சம்பவம் உண்டு. இயற்கையை, சூரியனை கடவுளாகக்கொண்டு கிரேக்க, ரோமானியர் கொண்டாடிய மதம் பெகன் (Paganism). இதுவே ஆர்மீனியாவில் பல காலம் பின்பற்றப்பட்டது.

டிரிடேட்ஸ் III என்பவர் பெகன் மதத்தைத் தழுவியிருந்த மன்னர். அவர் அர்டாஷட் என்ற இந்த நிலப்பரப்பை ஆண்டுவந்தபோது, உதவியாளராக இருந்தவர் பெர்ஷிய நாட்டைச்சேர்ந்த க்ரிகர் லுஸாவோரிச்.

இவர் கிறிஸ்தவ மதத்தை அங்கு போதித்த தால் வெகுண்ட ராஜா அவரை மலையில் ஓர் அடர்ந்த குழியில் தள்ளி, கைகால்களைக் கட்டி, கூடவே விஷ ஜந்துகளையும் இறக்கி விட்டிருக்கிறார். அது 20 மீட்டர் நீளமும் நாலரை மீட்டர் அகலமும்கொண்டது. இது கொடிய தண்டனையாகத் தரப்பட்டிருக்கிறது அந்நாளில்.

பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்த்தால் அவர் உயிரோடு வெளியே வந்திருக்கிறார். வந்தவர் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட மன்னனையும் தனது பிரார்த்தனை மூலம் குணப்படுத்த, மன்னன் மனம் மாற, அவருக்கு ஞானஸ்தானம் தந்து கிறிஸ்தவராக்கிவிட முழு ஆர்மீனியாவும் கிறிஸ்தவத்தை ஏற்ற நாடாக முதன்முதலில் அறிவித்திருக்கிறது. அந்தக் குழி இருந்த இடம்தான் இந்த கோர் விராட்!

முன்பு ஜெயிலாக இருந்த இடம் இந்த கிறிஸ்தவ கிரிகோரி துறவியால் புனித இடமாக வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டது. அங்கேயே தங்கி மதத்தைப் பரப்பும் பணிகளில் மதத்துறவிகள் ஈடுபட்டனர். இந்தக் கட்டடக்கலையைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளுடன் உள்நாட்டு மக்களும் புனிதப் பயணமாக வருகின்றனர்.

இங்குள்ள ரொட்டி சுடும் குழிகூட

ஒரு சுவாரஸ்யமே... அது பற்றி அடுத்த இதழில்!