Published:Updated:

`வீ-ட்ரான்ஸ்ஃபர் இணையதளத்துக்குத் தடை!’ -இந்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி

இணையதளங்களுக்கான தடை என்பது இந்தியாவில் புதிதான ஒன்றல்ல. கடந்த 2014ல் கூகுள் டாக்ஸ், ராபிட் சேர் (rapidshare), சென்ட் ஸ்பேஸ் (send space) என 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டன.

இந்திய தொலைத்தொடர்புத் துறை we transfer.com என்ற இணையதளத்திற்குத் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, இந்தியாவில் இணைய சேவை வழங்குபவர்களுக்கு மூன்று நோட்டீஸ்களையும் அனுப்பியுள்ளது. முதல் இரண்டு நோட்டீஸ்களில் குறிப்பிட்ட இரண்டு யூஆர் எல்லை மட்டும் தடை செய்யுமாறு கூறியுள்ளது. ஆனால், மூன்றாவது நோட்டீஸில் வீ ட்ரான்ஸ்ஃபர் இணையதளத்தையே முழுமையாகத் தடை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

தேசிய நலன் மற்றும் பொதுநலன் கருதி இந்த இணையதளம் தடை செய்யப்படுவதாக தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், அரசாங்கம் இதை தடை செய்வதற்கான காரணத்தை இன்னும் முழுமையாகத் தெரிவிக்கவில்லை. தற்போது வரை பெரும்பாலான இணைய சேவை வழங்குநர்கள் (ISP) தங்களது வாடிக்கையாளர்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளன.

இணையதளம்
இணையதளம்
வீ ட்ரான்ஸ்ஃபர் என்பது 2009 -ம் ஆண்டு நெதர்லாந்தில் தொடங்கப்பட்ட ஃபைல் ஷேரிங் சேவையை வழங்கும் இணையதளமாகும். இதை உலகம் முழுவதும் 50 மில்லியனுக்கும் மேற்பட்டோர் ஒரு மாதத்தில் பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் 1.5 பில்லியன் அளவிற்கான கோப்புகள் மாதந்தோறும் பகிரப்படுகின்றன.

இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இரண்டு ஜிபி வரை இருக்கும் கோப்புகளை எளிதில் அடுத்தவரின் மின்னஞ்சல் முகவரிக்கு நம்மால் அனுப்பிவிட முடியும். கோப்புகளை அனுப்புவதற்கென தனியே பணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், 2 ஜிபி-க்கு மேல் இருக்கும் கோப்புகளை கட்டணம் செலுத்தி அனுப்ப முடியும். இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே மக்கள் பணிபுரிவதால், இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இப்படிப்பட்ட காரணங்களால் இந்தியாவில் இது பிரபலமடைந்து வந்தது. ஆனால், இந்தத் தடையினால் இந்தியாவில் பலர் இதைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இன்னும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்யும் சூழல்தான் நிலவுகிறது.

`வீ-ட்ரான்ஸ்ஃபர் இணையதளத்துக்குத் தடை!’ -இந்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி

இணையதளங்களுக்கான தடை என்பது இந்தியாவில் புதிதான ஒன்றல்ல. கடந்த 2014ல் கூகுள் டாக்ஸ், ராபிட் சேர்(rapidshare), சென்ட் ஸ்பேஸ் (send space) என 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டன. இப்போது, வீ டிரான்ஸ்ஃபர் மூலம் ஆபாசப் படங்களும் பகிரப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பதால் தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த இணையதளம் மூலம் ஆபாசப் படங்களைப் பகிர்பவர்கள் பயனாளர்களே அன்றி இணையதளம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் தடை செய்யப்பட்ட இணையதளங்களும் ஆபாசக் காட்சிகள், வன்முறைக் காட்சிகளைப் பகிர்தல் மற்றும் திருட்டுத் தனமாக கோப்புகள் பகிரப்படுதல் ஆகிய காரணங்களால்தான் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு