Published:Updated:

எஃப்.சி... வாகனத்துக்கு மட்டுமல்ல... இனி ஆண்களுக்கும் தேவை!

திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
திருமணம்

சமீபகாலமாக, பெண்கள் இது போன்ற பிரச்னைகளைச் சந்திப்பது அதிகரித்துவருகிறது. என்னிடமே இதுவரை 10 வழக்குகள் வந்துவிட்டன.

எஃப்.சி... வாகனத்துக்கு மட்டுமல்ல... இனி ஆண்களுக்கும் தேவை!

சமீபகாலமாக, பெண்கள் இது போன்ற பிரச்னைகளைச் சந்திப்பது அதிகரித்துவருகிறது. என்னிடமே இதுவரை 10 வழக்குகள் வந்துவிட்டன.

Published:Updated:
திருமணம்
பிரீமியம் ஸ்டோரி
திருமணம்

மேட்ரிமோனியல் தளத்தின் மூலம் அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்த பின்னர், அந்த மாப்பிள்ளை தன்பாலின ஈர்ப்பாளர் என்று தெரிந்தால் பெண்ணின் நிலைமை என்னவாகும்? அப்படித்தான் சென்னையில் ஒரு சம்பவம் நடந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதை முன்வைத்து, இனி இது போன்ற நிலை ஏற்படக் கூடாது என்பதற்காக, திருமணத்துக்கு முன்பு மணமகன் தனது உடல்நிலை குறித்த ‘ஃபிட்னெஸ்’ சான்றிதழ் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வலியுறுத்தி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

ஹாஜா மொய்தீன் கிஸ்தி
ஹாஜா மொய்தீன் கிஸ்தி

முதலில் அமெரிக்க மாப்பிள்ளை சம்பவத்தைப் பார்ப்போம். சென்னையைச் சேர்ந்த ஒருவர் தன் மகளுக்கு அமெரிக்காவில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் விஜய் பிரசாத் என்பவரை மாப்பிள்ளை பார்த்துள்ளார். இரு தரப்புக்கும் பிடித்துப்போகவே... 2021, செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் திருமணம் நடத்தி முடித்தார்கள். அதன் பின்பு நடந்ததை மணமகளின் நெருங்கிய உறவினர் ஒருவர் நம்மிடம் விவரித்தார்...

“பெண் பார்த்ததிலிருந்து திருமணம் வரை சுமார் ஒன்பது மாத இடைவெளியில் விஜய் பிரசாத், மணப்பெண்ணிடம் சரியாகப் பேசக்கூட இல்லை. சரி... மாப்பிள்ளை ரிசர்வ்டு டைப் என்று நினைத்துவிட்டோம். ஆனால், திருமணம் முடிந்த அன்று இரவு முதலிரவு அறைக்குச் சென்றபோதுதான், விஜய் பிரசாத்தின் சுயரூபம் தெரிந்து மணப்பெண் நொறுங்கிப்போனார்... ‘எனக்குத் தாம்பத்தியத்தில் விருப்பமில்லை’ என்று கூறியவர், முறையற்ற பாலியல் உறவுக்கும் வற்புறுத்தியிருக்கிறார். தேனிலவுக்கு அழைத்துச் சென்ற இடத்திலும் இதேநிலைதான்... விடுமுறை முடிந்து, தம்பதியர் அமெரிக்கா சென்ற பிறகுதான் விஜய் பிரசாத்தும், அவரின் நண்பர் மனோஜும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் என்கிற அதிர்ச்சித் தகவல் மணப்பெண்ணுக்குத் தெரியவந்தது.

இது குறித்து மணப்பெண் தன் பெற்றோருக்குத் தெரிவிக்கவே, அவர்கள் பெண்ணை அமெரிக்காவிலிருந்து அழைத்துவந்துவிட்டார்கள். இது குறித்து விஜய் பிரசாத் மற்றும் அவரின் பெற்றோர்மீது சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சம்பவம்தான்... வெளியில் தெரியாமல் இதுபோல நிறைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. பெண் வீட்டாரின் கெளரவம் கருதி இந்த விவகாரம் வெளியே வருவதில்லை. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மணப்பெண் தரப்பு வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி இது தொடர்பாக பொதுநல வழக்கைத் தாக்கல் செய்யவிருக்கிறார்” என்று சொல்லி முடித்தார்.

வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தியிடம் பேசினோம். “சமீபகாலமாக, பெண்கள் இது போன்ற பிரச்னைகளைச் சந்திப்பது அதிகரித்துவருகிறது. என்னிடமே இதுவரை 10 வழக்குகள் வந்துவிட்டன. குடிப்பழக்கம், போதைப்பொருள்களுக்கு அடிமையாகும் ஆண்கள்,ஆண்மைத்தன்மையை இழந்துவிடுகிறார்கள். ஆனால், இந்த உண்மையை மறைத்து, திருமணத்தைச் செய்துகொள்கிறார்கள். அறிவியல்ரீதியாக ஆண்மைத்தன்மை இழந்த மற்றும் தன்பாலின ஈர்ப்புக்கொண்ட ஆண்களுக்கு, பெண்களிடம் செக்ஸ் வைத்துக்கொள்ளப் பிடிக்காது.

எஃப்.சி... வாகனத்துக்கு மட்டுமல்ல... இனி ஆண்களுக்கும் தேவை!

இந்த வழக்கில் விஜய் பிரசாத் மீது அமெரிக்க காவல்துறையில் மணப்பெண் புகார் அளித்ததை அடுத்து, டெக்சாஸ் மாகாண டெலாவேர் குடும்ப நல நீதிமன்றம், ‘விஜய் பிரசாத் ஒருபோதும் அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்யக் கூடாது; மாதம்தோறும் ஆயிரம் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பு அளித்திருக்கிறது. அதுபோக, இந்தியாவில் தேசிய மகளிர் ஆணையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், ‘இந்த வழக்கைத் தீர விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று ஆணையம் தமிழக டி.ஜி.பி-க்கு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த வழக்கை முன்னுதாரணமாக வைத்து, திருமணத்துக்கு முன்பாக ஆண்கள் ‘செக்ஸுவல் ஃபிட்னெஸ்’ சான்றிதழை, தகுதியான மருத்துவரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யவிருக்கிறேன். வெளிநாடுகளில் ‘ஹெச்.ஐ.வி இல்லை’ என்பதற்கான சான்றிதழ் வைத்திருந்தால்தான் திருமணமே நடக்கும். இந்தக் காலகட்டத்துக்கு அது மட்டுமே போதாது; ‘செக்ஸுவல் ஃபிட்னெஸ்’ சான்றிதழும் அவசியம். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளும் திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்” என்றவரிடம், “இதே பிரச்னை பெண்களுக்கும் பொருந்தும்தானே... ஆண்கள் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது?” என்று கேட்டோம். “உண்மைதான்... பெண்களிலும் தன்பாலின ஈர்ப்புக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஆணுக்குத் திருமணம் செய்துவைத்தால், ஈர்ப்பு இருக்காதே தவிர தாம்பத்யத்தில் ஈடுபட்டால் குழந்தைப்பேற்றை அது தடுக்காது. அதேசமயம், ஆண்கள் பாதிப்படைவது பற்றியும் சட்டரீதியாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

பாலியல் தயக்கங்களை உடைத்து வெளிப்படையாக உரையாடவேண்டிய அதிமுக்கியப் பிரச்னை இது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism