பத்து மாதங்களுக்கு முன்பு, அந்தமான் வடக்கு சென்டினல் தீவின் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அத்துமீறிச் சென்ற 26 வயது அமெரிக்க மத போதகர் ஜான் ஆலன் சாவ், அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து கொல்லப்பட்ட சம்பவம் நினைவிருக்கலாம். அவரின் உடலைக்கூட கண்டுபிடிக்க முடியாததால், அவரின் மரணம் ஒரு புதிராகவே இருந்துவந்தது. இறப்பதற்கு முன்னர் தீவில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து ஜான் எழுதி வைத்திருந்த டைரி குறிப்புகளை தற்போது ஆய்வுசெய்ததில் பல புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

‘வடக்கு சென்டினல் தீவின் பழங்குடிகள்: ஒரு அமெரிக்க போதகரைக் கொன்ற சூழலும், அந்தமான் தீவின் பழங்குடியினரின் எதிர்த்தாக்குதல்களும்’ என்ற தலைப்பில், இந்திய மானுடவியல் சர்வே கழகத்தின் ஜர்னலில் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரை ஜானின் மரணம் குறித்து ஆழமாக ஆராய்ந்துள்ளது. ‘அங்கே எப்படி சென்றார், யார் உதவினார்கள், உடலைக்கூட மீட்க முடியாதது ஏன்?’ என அனைத்தையும் அலசுகிறது அந்த ஆய்வுக் கட்டுரை.

கடந்த 2018, நவம்பர் 16-ம் தேதி காலை, வடக்கு சென்டினல் தீவுக்குள் செல்வதற்கு முன், தன்னைப் படகில் அழைத்துவந்த மீனவர்களிடம் ஜான் அளித்த 13 பக்க டைரி குறிப்புகள்தான் அந்தக் கட்டுரையின் அடிப்படை ஆதாரம். நவம்பர் 14-ம் தேதி இரவு முதல் 16-ம் தேதி காலை வரை தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை டைரியில் விவரித்துள்ளார்.

‘சென்டினல் தீவுக்குச் செல்வது சட்ட விரோதம். உயிருக்கு ஆபத்து’ என்பது ஜானுக்கு நன்றாகத் தெரிந்திருக் கிறது. ஆனாலும், ஆர்வத்தில் சென்றிருக் கிறார். கடலோரக் காவல்படையின் கண்ணில் படக்கூடாது என்பதற்காக, இரவு நேரத்தில் மீனவர்கள் உதவியுடன் தடைசெய்யப் பட்ட பகுதிக்கு ஜான் படகில் சென்றிருக்கிறார். நவம்பர் 14-ம் தேதி இரவு எட்டு மணிக்குக் கிளம்பி பத்தரை மணியளவில் தீவை நெருங்கியுள்ளார் ஜான். இரவில் பழங் குடியினரின் வீடுகளைப் பார்த்ததையும், சில இடங்களில் தீ எரிந்ததையும் பதிவுசெய்துள்ளார்.

‘மறுநாள் காலை கரையை நோக்கி ஒரு சிறிய படகில் சென்றேன். கடற்கரையில் ஆள் நடமாட்டம் இருந்தது. இரண்டு ஆண்கள் என்னை நோக்கி ஆவேசமாக ஓடிவந்தனர். அவர்கள் கையில் வில் அம்புகள் இருந்தன. ‘என் பெயர் ஜான். உங்களுக்குப் பரிசாக மீன் கொண்டுவந்திருக்கிறேன்’ என நான் கத்தினேன். மீன்களை எடுத்து அவர்களை நோக்கி வீசினேன். இருந்தும் அவர்கள் என்னை நோக்கி முன்னேறியதால், நான் படகிலிருந்து குதித்து நடுக்கடலை நோக்கி நீந்தத் தொடங்கினேன். சிறிது நேரத்தில், மீன்களை எடுத்துக்கொண்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

மீண்டும் நான் படகில் ஏறி மெதுவாக கரையை நெருங்கியபோது, சிலர் என்னைப் பார்த்து கத்தினர். விரைந்து வந்த ஒருவன் என் படகைப் பறித்துக் கொண்டான். சற்று தூரத்தில் ஒரு கும்பல் கையில் அம்புடன் நின்றுகொண்டிருந்தது. தாக்கவேண்டாம் என கையசைத்தேன்.

ஆனால், முதலில் என்மீது அம்பை எய்தது 10 வயது சிறுவன். நான் மார்போடு அணைத்துக்கொண்டிருந்த பைபிளில் அம்பு தைத்தது. உடனடியாகப் பின்வாங்கி, நடுக்கடலை நோக்கி நீந்தத் தொடங்கினேன். அதேசமயம், என் மிஷனிலிருந்து பின்வாங்கவும் விரும்பவில்லை. நவம்பர் 16-ம் தேதி காலை மீண்டும் அந்தத் தீவை நோக்கி நான் செல்கிறேன். இது எனது கடைசி குறிப்பாக இருக்காது என்று நம்புகிறேன்’ என்ற வரிகளுடன் ஜானின் டைரிக்குறிப்பு முடிவடைகிறது.

தன்னை அழைத்துச் சென்ற மீனவர்களிடம் இந்த டைரிக் குறிப்புகளைக் கொடுத்துவிட்டு, தீவுக்குள் சென்றுள்ளார் ஜான். அதற்குப் பிறகு, ஜானை யாரும் பார்க்கவில்லை. ‘தீவுக்குச் செல்லும் ஒருசிலர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டு உடனடியாக திரும்பிவிடுவர். ஆனால், ஒருநாள் முழுவதும் ஜான் அந்தத் தீவில் இருந்துள்ளார். பழங்குடிகளை மிக அருகில் எதிர்கொண்டிருக் கிறார்’ என்கிறார் ஆய்வுக்கட்டுரை எழுதிய மௌலானா அபுல் கலாம் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார்.

‘‘ஜானுக்கு முன் பலர் அந்தத் தீவில் ரத்தம் சிந்தியுள்ளனர். 1896-ல் மூன்று குற்றவாளிகள் அந்தமானிலிருந்து மூங்கில் படகில் தப்பியபோது, இருவர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். ஒருவர் அம்பு தாக்கி இறந்துள்ளார். 2006-ல் இரு மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வான் வழியாக தேடியபோதும் ஜானின் உடல் கிடைக்கவில்லை. உடலைப் புதைத்ததற்கான சுவடுகூட இல்லை. பழங்குடிகளை நோய்கள் தாக்கக்கூடும் என்பதால், தீவுக்குள் சென்று உடலைத் தேடும் முயற்சி கைவிடப்பட்டது’’ என்கிறார் செந்தில்.

பழங்குடிகள், யாரையும் உடனே தாக்குவதில்லை. தங்கள் எல்லைக்குள் அத்துமீறி நுழைபவர்களை முதலில் எச்சரிக்கிறார்கள். எச்சரிக்கையை மதிக்காதவர்களை மட்டுமே கொல்கிறார்கள்.