Published:Updated:

சென்னையில் கட்டுக்குள் வந்துவிட்டதா கொரோனா? - உண்மை நிலவரம்

தத்தளிக்கும் தமிழகம்!
தத்தளிக்கும் தமிழகம்!

கொரோனா ''பரிசோதனைகள் குறைந்ததே பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்ததற்குக் காரணம் என்பதும், பரிசோதனைகள் குறைய, டெக்னீஷியன்களின் வேலைப்பளு உள்ளிட்ட பலவும் காரணம் என்பதுமே உண்மை'' என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

'கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்பது அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும்' என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நமக்கெல்லாம் கண்ணுக்குத் தெரிந்த கடவுள்கள் மருத்துவர்கள்தான். ஆனால், அந்தக் கடவுள்களுக்கும் இது சோதனைக் காலம்போல.

'கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை `மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் படுக்கை வசதி இல்லை' என்ற குற்றச்சாட்டைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். இனிவரும் நாள்களில், `மருத்துவமனைகளே இல்லை' என்ற நிலையும் வரலாம்!' - இப்படிச் சொல்பவர் சாமானியர் இல்லை... ஒரு மருத்துவர்.

மருத்துவமனைகள் மூடும் நிலை...

ஒருகட்டத்தில் கொரோனா இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட அதே கோவையில், இன்று அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் அடுத்தடுத்து மருத்துவமனைகளை மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கோவையில் மட்டுமல்ல, சென்னையிலும் பிரபலமான விஜயா மருத்துவமனை மூடப்பட்டிருக்கிறது.

சில நாள்களுக்கு முன்னர் சென்னை விஜயா மருத்துவமனையின் இயக்குநரும், நாகி ரெட்டியின் பேரனுமான சரத் ரெட்டி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அடுத்த சில நாள்களில் அந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், விஜயா மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பிரதான பகுதிகளில் மருத்துவமனைகள் மூடப்படும் நிலை தொடர்கிறது.

”அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும் அரசின் விதிமுறைப்படி தினமும் 10 முறைகள் சுத்தப்படுத்துவது, சுவர், கைப்பிடிகள் உள்ளிட்ட பகுதிகளை கிருமிநாசினி வைத்துத் துடைப்பது போன்றவை நடக்கின்றன. இரண்டு வாயில்கள் இருந்தும், அரசு சொல்வது போன்ற தூய்மைப் பணிகளைப் பின்பற்றியும், முகக்கவசமும் கையுறைகளும் அணிந்திருந்தும் புறநோயாளிகளைப் பார்க்கும் மருத்துவமனைகளை மொத்தமாக மூடச் சொல்வது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி'' என்கிறார் ஒரு மருத்துவர்.

`தனியார் மருத்துவமனைகளுக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசாங்கம், அரசு மருத்துவமனைகளை மட்டும் கண்டுகொள்வதில்லை' என்பதே பல தனியார் மருத்துவர்களின் குற்றச்சாட்டாகவும் இருக்கிறது.

சென்னையில் நடப்பது என்ன?

சென்னையில் தினமும் தொடர்ந்து 2,000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக அது குறைந்துவருகிறது. இதையடுத்து, 'சென்னையில் கொரோனா கட்டுக்குள் வந்துவிட்டது' என்று அறிவித்தார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

ஆனால், ''பரிசோதனைகள் குறைந்ததே பாதிப்பாளர்களின் எண்ணிக்கையும் குறைந்ததற்குக் காரணம் என்பதும், பரிசோதனைகள் குறைய, டெக்னீஷியன்களின் வேலைப்பளு உள்ளிட்ட பலவும் காரணம் என்பதுமே உண்மை'' என்கிறார்கள் மருத்துவச் செயற்பாட்டாளர்கள்.

`தொற்று ஏற்பட்ட மருத்துவமனையில் கணிசமான எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனைக்கு அனுப்பப்படும்போது, அரசு பரிசோதனை மையங்களில் அவர்களுக்கு மொத்தமாகப் பரிசோதனை செய்வதில்லை; குழுக்களாகப் பிரித்தே செய்யப்படுகிறது' என்றும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் டெஸ்ட் எடுக்கப்படாத அந்த நபர்களுக்கு கொரோனா இருக்கும்பட்சத்தில், அடுத்தடுத்த நாள்களில் எத்தனை பேருக்குத் தொற்றைப் பரப்புவார்களோ?

> எங்கே செல்லும் இந்தப் பாதை?

> கோவை மருத்துவர் பகிரும் `பகீர்' தகவல்கள்...

> மருத்துவர்களின் ஐந்து கோரிக்கைகள்!

> மனிதத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட பீதி!

> தனியார் மருத்துவமனைகளை மூடச் சொல்வது சரியா?

> மருத்துவர்களின் மன அழுத்தத்துக்கு என்ன தீர்வு?

> கொரோனா தடுப்பூசி... ''அவசரம் காட்டினால் ஆபத்து!''

- கொரோனா நிலவரம் தொடர்பாக அதிரவைக்கும் உண்மை நிலையை முழுமையாக அறிய இங்கே க்ளிக் செய்க... > "எனக்கு அழிவே கிடையாது!” - கொக்கரிக்கும் கொரோனா... தத்தளிக்கும் தமிழகம்! https://bit.ly/38ElV8I

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

“எனக்கு அழிவே கிடையாது!”

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு