Published:Updated:

கொடநாடு வழக்கு: கோட்டைவிடுகிறதா காவல்துறை?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முக்கியத் துறைகளில் அதிகாரிகளை மாற்றிய தி.மு.க அரசு, கொடநாடு வழக்கு விசாரணை அதிகாரிகளை மட்டும் மாற்ற வில்லை.

கொடநாடு வழக்கு: கோட்டைவிடுகிறதா காவல்துறை?

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முக்கியத் துறைகளில் அதிகாரிகளை மாற்றிய தி.மு.க அரசு, கொடநாடு வழக்கு விசாரணை அதிகாரிகளை மட்டும் மாற்ற வில்லை.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி

‘புதிய அதிகாரிகளை நியமித்து இரட்டிப்பு வேகத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறோம்... குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது’ என்றெல்லாம் ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கப்பட்ட கொடநாடு வழக்கு, கிணற்றில் போட்ட கல்லாகக் கிடக்கிறது.

அ.தி.மு.க ஆட்சியில் முடியவிருந்த வழக்கை, தி.மு.க அரசு தூசுதட்டி விசாரிக்கத் தொடங்கி இந்த ஆகஸ்ட்டுடன் ஓராண்டாகிவிட்டது. சசிகலா முதல் சஜ்ஜீவன் வரை கிட்டத்தட்ட 250-க்கும் அதிக மானோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, விசாரணைக்கான கால அவகாசத்தை நீட்டித்துக் கொடுக்குமாறு மட்டுமே காவல்துறை தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. மற்றபடி வழக்கு விசாரணையின் சிறிய முன்னேற்றத்தைக்கூட நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கவில்லை.

கொடநாடு வழக்கு: கோட்டைவிடுகிறதா காவல்துறை?

இது குறித்து நம்மிடம் பேசிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான முனிரத்தினம், “இந்த வழக்கு எந்த திசையில் போய்க்கொண்டிருக்கிறது என்பது விசாரணை அதிகாரிகளுக்கே தெரியவில்லை. கிளை வழக்குகளையும் முறையாக விசாரிக்கவில்லை” என்றார் வருத்தத்துடன்.

அ.தி.மு.க முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதே, ‘கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்துக்கு எடப்பாடி தான் காரணம். அதற்குப் போதிய ஆதாரம் இருக்கிறது’ என்று வெளிப்படையாகச் சொன்னார் பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல். அவரிடம் தற்போதுவரை விசாரிக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த புதிதில், ‘இந்த வழக்கில் என்னைச் சிக்கவைக்கப் பார்க்கிறார்கள்’ என்று சட்டமன்றத்தில் பதறினார் எடப்பாடி. ஆனால், இப்போது அவருக்கு எந்த பயமும் இல்லை. தி.மு.க - அ.தி.மு.க-வுக்குள் ரகசிய உடன்பாடு ஏற்பட்டுவிட்டதுபோல் தோன்று கிறது” என்றார்.

முனிரத்தினம்
முனிரத்தினம்
கே.சி.பழனிச்சாமி
கே.சி.பழனிச்சாமி
சுதாகர்
சுதாகர்

இந்த வழக்கை நன்கறிந்த சிலர் கூறுகையில், “ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முக்கியத் துறைகளில் அதிகாரிகளை மாற்றிய தி.மு.க அரசு, கொடநாடு வழக்கு விசாரணை அதிகாரிகளை மட்டும் மாற்ற வில்லை. இப்போதும் அ.தி.மு.க வி.வி.ஐ.பி-களுக்குத் தகவல் கொடுக்கும் அதிகாரிகள் அங்கு இருக்கின்றனர். ஓராண்டு விசாரணையில் நடந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்றால், கனகராஜின் சகோதரர்களான தனபால் மற்றும் ரமேஷ் கைதுசெய்யப்பட்டதுதான். ஆனால், அவர்களும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். கோவை அ.தி.மு.க வி.ஐ.பி., சம்பவம் நடந்தபோது உயரதிகாரியாக இருந்து பிறகு விருப்ப ஓய்வுபெற்றுச் சென்ற போலீஸ் அதிகாரி, அ.தி.மு.க பிரமுகர் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தால்தான் வழக்கு உண்மையை நோக்கி நகரும்” என்றனர்.

இது குறித்து விளக்கம் கேட்க மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகரைத் தொடர்பு கொண்டோம். “விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அது குறித்து எதுவும் பேச முடியாது. அது விசாரணையை பாதிக்கும்” என்றார்.

அடடே..!