Published:Updated:

Unlock 2.0 - தயாராகும் எடப்பாடி.. தளர்வுக்கு தயங்கும் அதிகாரிகள்!

 எடப்பாடி..
எடப்பாடி..

மாவட்டரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தில் முடிவெடுத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மார்ச் 24-ம் தேதி மாலை 6 மணிக்கு அமலான ஊரடங்கு, ஜூலை 31-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இடையில் சில தளர்வுகள், சில கட்டுப்பாடுகள் என ஏற்ற இறக்கத்துடன் தமிழகம் பயணித்தாலும், இன்னும் முழு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முடியவில்லை.

எல்லாத் தொழில்களும் இழப்பைச் சந்தித்துள்ளன. முடி திருத்தகத்தில் ஆரம்பித்து கார் தொழிற்சாலை வரை ஊரடங்கின் கெடுபிடியால் வருமானத்தை இழந்து தவிப்பவர்கள் ஏராளம். பேராசிரியர்களாகப் பணிபுரிந்தவர்களையெல்லாம் முறுக்கு சுட்டு விற்கும் நிலைக்கு கொரோனா கொண்டுவந்துவிட்டது.

''இந்த ஊரடங்கால் பொதுமக்களும் வியாபாரிகளும்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கறிக்கடைகளிலும் மீன் கடைகளிலும் கூட்டம் கூடுவதாகக் குற்றம்சாட்டுகிறார்கள். கூட்டம் கூட வைப்பது யார்... அரசாங்கம்தானே? `எல்லா நாள்களிலும் தேவையான பொருள்கள் கிடைக்கும்' என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி, போதிய சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவற்றைக் கட்டாயம் பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தினால், இந்தப் பதற்றம் ஏன் வரப்போகிறது?

நாமக்கல்லிருந்து கோழி கொண்டுவர அனுமதித்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றால், இது என்ன பித்தலாட்டம்?

கூட்டுறவு வங்கிகளில் கடன் தரத் தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். இதுவரை எத்தனை பேருக்குக் கொடுத்துள்ளனர்?

Unlock 2.0 - தயாராகும் எடப்பாடி.. தளர்வுக்கு தயங்கும் அதிகாரிகள்!

வெறும் அறிவிப்பு இனிப்புகளை நாக்கில் தடவுவது எந்தப் பலனும் அளிக்காது. பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்கினால் மட்டுமே நிலைமை சீராகும். மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு வரத் தயாராகிவிட்டார்கள். அவர்களைப் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்துவதுதான் அரசின் பணி. இனிமேலும் பூட்டிவைத்தால் தொழிலும் மக்களும்தான் நசுங்குவார்கள்'' என்கிறார் தமிழ்நாடு வியாபாரிகள் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன்.

ஏற்கெனவே அதலபாதாளத்திலிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் கொரோனாவால் ஏகப்பட்ட நிதி இழப்பைச் சந்தித்துள்ளது. `பாதுகாப்பான பொதுப் போக்குவரத்துக்கு அனுமதித்தால் மட்டுமே இயல்புநிலை திரும்பும்' என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.

`ஊரடங்கை மேலும் தளர்த்த வேண்டும்' என்று பலதரப்பிலும் அரசுக்குக் கோரிக்கைகள் வைக்கப்பட்டாலும், தளர்வை அனுமதிக்க சுகாதாரத்துறையினர் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கத் தயக்கம் காட்டுகிறார்கள்.

''இப்போது சில தளர்வுகள் இருக்கும்போதே முழுமையாக கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாதபோது முழுத் தளர்வு என்பதை இப்போது அறிவிக்க வேண்டாம். தமிழகத்தில் கிட்டத்தட்ட சமூகப் பரவல் கட்டத்தில் கொரோனா இருக்கிறது" என்று அரசிடம் சொல்லியிருக்கிறார்கள். சென்னையில் ஓரளவு கட்டுப்பாடு வந்துவிட்டாலும், பிற மாவட்டங்களில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

`இப்போதுள்ள ஊரடங்கை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்' என்பது அதிகாரிகளின் கருத்தாக இருக்கிறது. மாவட்டரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு தளர்வுகள் குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகத்தில் முடிவெடுத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடியை பொறுத்தவரையில், இனிமேலும் கொரோனாவை காரணம் காட்டித் தொழில்களைக் கட்டுப்படுத்தினால் எல்லோரும் கற்காலத்துக்குச் சென்றுவிட நேரிடும் எனக் கருதுகிறாராம். எனவே, முடங்கியிருக்கும் தமிழகத்தை மீண்டும் இயக்கிட, சில தைரிய முடிவுகளை எடுக்கத் தயாராகிறார் எடப்பாடி.

> மாநிலத்தின் நிதி நிலைமை, அரசியல் காரணங்களை ஒட்டிய எடப்பாடியின் எண்ணம்தான் என்ன?

தொழில் நசுங்கிவிடும் | வாடகை நெருக்கடி | ஸ்கூல் ஃபீஸுக்கு என்ன வழி? | தியேட்டர்களின் நிலை என்ன? | சினிமா ஷூட்டிங் சாத்தியமா? பொதுப் போக்குவரத்து சாத்தியமா? | அமைப்புகளும் சங்கங்களும் சொல்வது என்ன? | தலைமைச் செயலாளரின் பதில் என்ன?

- இப்படி அனைத்து கோணத்திலும் அலசும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/2CrooIh >

ஆகஸ்ட் 1... திறந்திடு சீஸேம்! - எடப்பாடி தயார்... மக்கள் தயாரா? https://bit.ly/2CrooIh

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

Unlock 2.0 - தயாராகும் எடப்பாடி.. தளர்வுக்கு தயங்கும் அதிகாரிகள்!
அடுத்த கட்டுரைக்கு