Published:Updated:

எமரால்டு கற்கள், கோடியில் விலை - ஹர்திக் பாண்டியாவின் வாட்ச்சில் அப்படி என்னதான் இருக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஹர்திக் பாண்டியாவின் வாட்ச்
ஹர்திக் பாண்டியாவின் வாட்ச்

இந்த நிறுவனத்தின் கிாரண்ட்மாஸ்டர் கைம் (Grandmaster Chime) என்ற மாடல் வாட்ச் தான் உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன கைக்கடிகாரமாக இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை முடிந்து வீரர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய வீரர்களும் நேற்று இந்தியா வந்தடைந்தனர். அப்போது ஹர்திக் பாண்டியாவிடம் (Hardik Pandya) கணக்கில் காட்டப்படாத இரண்டு விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் சுங்க வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. சமூக வலைதளங்களில் காட்டுத்தீயென பரவிய இந்த செய்திக்கு ஹர்திக் பாண்டியா விளக்கம் அளித்திருந்தார். சம்மந்தப்பட்ட வாட்ச்களின் விலை ரூ.5 கோடி என முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அதன் விலை 1.5 கோடி ரூபாய்தான் என விளக்கம் அளித்திருந்தார் ஹர்திக். ஏற்கனவே பயன்படுத்தி கொண்டிருந்த ஒருவரிடமிருந்து அந்த வாட்ச்சை இந்த விலைக்கு வாங்கியதாக ஹர்திக் கூற அதை உறுதிசெய்யும் முயற்சியில் இருக்கிறதாம் சுங்க வரித்துறை. இப்போது ஹர்திக் சமர்பித்திருக்கும் ரசீதுகளில் இருக்கும் சீரியல் எண்ணும் வாட்ச்சில் இருக்கும் சீரியல் எண்ணும் ஒத்துப்போகாததுதான் தற்போது பிரச்சனையாக இருக்கிறதாம்.

படேக் பிலிப்பி கைக்கடிகாரங்கள்
படேக் பிலிப்பி கைக்கடிகாரங்கள்
ஐந்து கோடியோ, ஒன்றரை கோடியோ... இந்த விலையில் வாட்ச்சா என ஷாக் ஆகிறீர்களா... எங்களுக்கும் அதே ஷாக்தான். அது என்ன வாட்ச், அதில் அப்படியென்ன என்ன ஸ்பெஷல் என்று தேடினோம்!

ஐபிஎல், டி20 உலகக்கோப்பை என கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக UAE-ல் இருக்கிறார் ஹர்திக் பாண்டியா. சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவுகள் அனைத்திலும் அவர் ஒரு வாட்ச் அணிந்திருக்கிறார். அதுதான் சுங்க வரித்துறை வசம் தற்போது இருப்பதாகக் கூறப்படுகிறது. அது பாடெக் பிலிப் (Patek Philippe) என்ற சுவிட்சர்லாந்து ஆடம்பர வாட்ச் நிறுவனம் தயாரித்தது. உலகில் மிகவும் விலையுயர்ந்தவை எனக் கூறப்படும் வாட்ச்கள் பட்டியலில் 8 வாட்ச்கள் இந்த பாடெக் பிலிப் நிறுவனத்துடையது. இந்த நிறுவனத்தின் கிராண்ட்மாஸ்டர் சைம் (Grandmaster Chime) என்ற மாடல் வாட்ச் தான் உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வாட்ச்சாக இருக்கிறது. அந்த சிறப்பு கிராண்ட்மாஸ்டர் சைம் வாட்ச் ஏலம் போனது 31.19 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு, அதாவது இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய்க்கு!

ரூ.5 கோடி வாட்ச் ?! விமான நிலையத்தில் நடந்தது என்ன... ஹர்திக் பாண்டியா விளக்கம்
ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தில் பாடெக் பிலிப் நாட்டிலோஸ் ப்ளாட்டினம் 5711 என்ற மாடல் வாட்ச்சை தான் அணிந்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா பதிவிட்ட கைக்கடிகாரத்தின் புகைப்படம்
ஹர்திக் பாண்டியா பதிவிட்ட கைக்கடிகாரத்தின் புகைப்படம்

இந்த வாட்ச் முழுவதும் பிளாட்டினத்தால் செய்யப்பட்டது. வெளிப்புறத்தில் 32 எமரால்டு கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி வாட்ச்சின் உள்ளே பொறிக்கப்பட்டுள்ள எண்களிலும் எமரால்டு கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாட்ச்சை நீங்கள் இந்தியாவிலிருந்தே ஆர்டர் செய்ய வேண்டும் என்றால் 6 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு