இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை இறக்கத்தை கடந்த 22-ம் தேதி அன்று கண்டது; அந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களைக் கதிகலங்க வைத்தது. இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் நல்ல நிதிநிலை முடிவுகளைச் சென்ற வாரம் அறிவித்திருந்த நிலையிலும் இன்ஃபோசிஸ் பங்கு விலை ஒரே நாளில் 16.2% இறங்க என்ன காரணம்?

என்ன புகார்?

‘‘இன்ஃபோசிஸ் நிர்வாகத்தில் சில தவறுகள் நடக்கின்றன. லாபத்தை அதிகரித்துக் காட்டுவதற்காகச் சில செலவுகளை குறைத்து கணக்கில் காட்டுவார்கள். பல்வேறுவிதங்களில் இன்ஃபோசிஸ் நிறுவனம் அது ஈட்டும் லாபத்தைவிடக் கூடுதலாகக் காட்டுகிறது. இதற்கான தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவுகள் எங்களிடம் இருக்கின்றன. இது குறித்து முதலில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு (போர்டுக்கு) செப்டம்பர் 20-ம் தேதி எழுதியிருக்கிறோம். அதற்கு பதிலோ, நடவடிக்கையோ இல்லை” என அமெரிக்க செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்கு (US Securities and Exchange Commission) மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள் சில விசில்புளோயர்கள். யார் இந்த விசில்புளோயர்கள்?

எத்திகல் எம்ப்ளாயிஸும் விசில்புளோயர்களும்

‘‘தகாத சம்பவங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கிவிட்டன. கணக்குவழக்குகளை மாற்றி எழுதுகிறார்கள்’’ என்றெல்லாம் புகார் கொடுப்பவர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்தான். அவர்களுடைய பெயர்களை அவர்கள் அந்த மின்னஞ்சலில் குறிபிடவில்லை. அவர்கள் ‘எத்திக்கல் எம்ப்ளாயிஸ்’ என்று குறிபிட்டிருக்கிறார்கள். ‘எத்திக்கல்’ என்றால் `நேர்மையான’ என்று அர்த்தம். நிறுவனத்தின் உள்ளே இப்படியெல்லாம் நடக்கிறது என்று தகவல் தெரிந்த எவரும் வெளியுலகுக்குத் தெரியப்படுத்துவதை `விசில்புளோயிங்’ என்பார்கள்.

முதலில் ஏ.டி.ஆர்

இப்போது இன்ஃபோசிஸ் பங்கு விலையில் புயலைக் கிளப்பியிருப்பதும் இப்படிப்பட்ட சில ‘விசில்புளோயிங்’ நபர்கள்தான். ஒரு பங்கில் முதலீடு செய்ய வேண்டுமென்றால், ‘கார்ப்பரேட் கவர்னன்ஸ்’ குறைசொல்ல முடியாதபடிக்கு இருக்க வேண்டும். இத்தனை நாளும் ‘குட் கவர்னன்ஸ்’ செய்துவந்த இன்ஃபோசிஸ் நிறுவனத்தின்மீது இன்று புகார் வந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. இதனால் கடந்த 21-10-19 அன்று, அமெரிக்கப் பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் பங்கு ஏ.டி.ஆரில் (ADR- அமெரிக்கன் டெப்பாசிட்டரி ரெசிப்ட்ஸ்) 15 சதவிகிதத்துக்கு மேல் விலை வீழ்ச்சியடைந்தது.

ஒரே நாளில் 16.2%

மகாராஷ்டிரா மாநிலத் தேர்தல் காரணமாக 21-10-19 அன்று இந்தியப் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. அடுத்த நாள் அதாவது, செவ்வாய் அன்று வர்த்தகம் தொடங்கியதும் பங்கு விலை சரசரவென விழுந்ததால், அந்தப் பங்கு வர்த்தகமாவது நிறுத்தப்பட்டது. ‘கூலீங் டைம்’ தந்து வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பித்ததும் மீண்டும் விற்றுத்தள்ளுவது தொடங்கியது. அன்றைய தினம் முழுக்கவுமே இன்ஃபோசிஸ் ஒரே இறங்கு முகத்தில் இருந்ததில், வர்த்தக முடிவில் 16.2% வரை இறக்கம் கண்டிருந்தது. அதாவது, ஒரே நாளில் அந்தப் பங்கின் விலை ரூ.767-லிருந்து ரூ.643-ஆகக் குறைந்தது. பங்கு விலை குறைந்ததால், அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.53,451 கோடி காணாமல்போனது.

யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்?

இந்தப் பங்கை யாரெல்லாம் வாங்கி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், பிரச்னை எவ்வளவு உக்கிரமானது என்று புரியும். கிட்டத்தட்ட 44% இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருக்கின்றன. மற்றுமொரு 33% பங்குகள் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களிடம் இருக்கின்றன. 10 சதவிகிதத்துக்கும் குறைவாக பொதுமக்களிடமும், சுமார் 13% பங்குகள் புரொமோட்டர்களிடமும் உள்ளன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இது போன்ற புகார்களை படு சீரியஸாக எடுத்துக்கொள்வார்கள். எனவே, இந்தப் புகார் வந்ததும் இன்ஃபோசிஸ் பங்கு ஏ.டி.ஆர்-களையும் பங்குகளையும் மடமடவென விற்கத் தொடங்கினார்கள்.

விளைவு, செவ்வாய் அன்று மட்டும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு ரூ.17,000 கோடி குறைந்திருக்கிறது. நம்மூர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு ரூ.6,700 கோடியை இழந்திருக்கிறது. எல்.ஐ.சி நிறுவனம் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு ரூ.3,500 கோடி குறைந்திருக்கிறது.

களத்தில் இறங்கிய நந்தன் நிலேகனி

அமெரிக்க மற்றும் இந்தியப் பங்குச் சந்தைகளில் இன்ஃபோசிஸ் பங்கு விலை இறங்கியதைத் தொடர்ந்து விளக்கம் தர வேண்டிய கட்டாயம் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனிக்கு. ‘‘இந்தப் புகார் தொடர்பாக எங்களுக்கு எந்த மின்னஞ்சலும் வரவில்லை. பேச்சு உரையாடல் பதிவும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை. என்றாலும், இந்தப் புகார் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் விசில்புளோவர் பாலிசி வைத்திருக்கிறோம். அதன்படி, இந்த விசாரணையை ஆடிட் கமிட்டி நடத்தும். ஆடிட் கமிட்டி எர்னெஸ்ட்&எங் என்ற இன்டிபென்டன்ட் இன்டர்னல் ஆடிட்டர்களைக் கலந்தாலோசித்தும், தனிப்பட்ட ஒரு சட்ட நிறுவனத்தை விசாரணைக்கு அமர்த்தியும் விசாரணையை முடிப்பார்கள்’’ எனப் பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டு வாரியமான செபிக்கும் பங்குச் சந்தைகளுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார் நந்தன் நிலேகனி.

இப்போது இதையெல்லாம் செய்யும் இவர், செப்டம்பரில் அப்படி ஒரு மெயில் வந்ததும், `இப்படி வந்திருக்கிறது. விசாரிக்கப்போகிறோம்’ என்று அவராக முன்வந்து வெளியுலகத்துக்கு தெரிவித்திருந்தாரானால், இவ்வளவு கலகமும் நடந்திருக்காது. ‘ஆஹா, இதை வெளியே சொல்லும் அளவுக்கு நேர்மையான நிறுவனம் இது!’ என்று இந்த நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை அதிகரித்திருக்கும். நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்கள்.

விலையேற்றம் தொடருமா?

நந்தனின் விளக்கத்தைத் தொடர்ந்து புதனன்று இன்ஃபோசிஸின் பங்கு விலை கொஞ்சம் உயர்ந்தது, வியாழன்று மீண்டும் இறங்கத் தொடங்கியது. இப்போதைக்கு முதலீட்டாளர்கள் முன்னிருக்கும் மிகப் பெரிய கேள்வி, `இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை இன்னும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா?’ என்பதுதான். இந்தக் கேள்விக்கான பதில், விசில்புளோயர்கள் எழுப்பியிருக்கும் புகார், என்னென்ன விளைவுகளை இனிவரும் நாள்களில் ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. இந்த நிறுவனத்தில் இனி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்தே முதலீடு செய்வது பற்றி முடிவெடுக்க வேண்டும்.