Published:Updated:

தனிப்படைக்கே தண்ணிகாட்டிய வெள்ளைச் சட்டை கொள்ளைக் கும்பல்!

கொள்ளைக் கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளைக் கும்பல்

சில பெண்களும் நிர்வாணமா நின்னுக்கிட்டு போலீஸை ஊருக்குள்ளே வர விடாம தடுப்பாங்க.

தனிப்படைக்கே தண்ணிகாட்டிய வெள்ளைச் சட்டை கொள்ளைக் கும்பல்!

சில பெண்களும் நிர்வாணமா நின்னுக்கிட்டு போலீஸை ஊருக்குள்ளே வர விடாம தடுப்பாங்க.

Published:Updated:
கொள்ளைக் கும்பல்
பிரீமியம் ஸ்டோரி
கொள்ளைக் கும்பல்

தஞ்சையில், ஏழு கிலோ தங்க நகையைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பித்துச் சென்ற வட மாநில கொள்ளைக் கும்பலில் நான்கு பேரைக் கொத்தாக அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது தனிப்படை போலீஸ். வித்தியாசமான இந்த கொள்ளைக் கும்பலும், இவர்களைப் பிடிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் சென்ற தனிப்படைப் போலீஸாரின் சாகசங்களும் சுவாரஸ்யமானவை.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த மே மாதம் 31-ம் தேதி இரவு சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி மணியிடமிருந்து, ஏழு கிலோ தங்க நகையை அரசியல்வாதிகள்போல வெள்ளைச் சட்டை அணிந்த கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றது. ‘வெள்ளைச் சட்டை’ அடையாளத்தை மட்டுமே கொண்டு துப்பு துலக்கிய தனிப்படை போலீஸாரிடம் பேசினோம்.

“மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சில குறிப்பிட்ட இனத்தவர்கள் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். வெள்ளை முழுக்கைச் சட்டை, பேன்ட் அணிந்து டிப்டாப்பாக வெள்ளை நிற கார்களில் கிளம்பிச் சென்று கொள்ளையடிப்பார்கள். கொள்ளையடித்த நகையை உடனே விற்காமல், தங்கள் சொந்த ஊருக்கே எடுத்துச் சென்று தங்களது வீட்டு சுவருக்குள் வைத்துப் பூசி மறைத்துவிடுவார்கள். சில மாதங்கள் கழித்த பிறகே, நகைகளை வெளியே எடுத்து விற்பார்கள்.

தனிப்படைக்கே தண்ணிகாட்டிய வெள்ளைச் சட்டை கொள்ளைக் கும்பல்!

தஞ்சாவூரில் கொள்ளையடித்துச் சென்ற கும்பல், இப்படி மகாராஷ்டிராவிலுள்ள பர்லோனி கிராமத்தில் பதுங்கியிருப்பதை உறுதி செய்துகொண்ட நாங்கள், அவர்களைப் பிடித்துவர மகாராஷ்டிரா போலீஸாரிடம் உதவி கேட்டோம். ஆனால், ‘அவங்க ரொம்பவே ரிஸ்க்கான ஆளுங்க சார்.... போலீஸை ஊருக்குள்ளேயே விட மாட்டாங்க. ஒருமுறை நாங்க பிடிக்கப் போனப்ப... அவங்களே குழந்தையை சுவத்துல அடிச்சுக் கொன்னுட்டு, போலீஸ் கொன்னுட்டதா சொன்ன கொடூரன்கள். சில பெண்களும் நிர்வாணமா நின்னுக்கிட்டு போலீஸை ஊருக்குள்ளே வர விடாம தடுப்பாங்க. ஒருமுறை எங்களையே தாக்கினதோட, போலீஸ் வேன், காரையும் தீ வெச்சு எரிச்சுட்டாங்க’ என்று சொல்லி உதவ மறுத்துவிட்டனர்” என்றனர்.

தனிப்படைக்கே தண்ணிகாட்டிய வெள்ளைச் சட்டை கொள்ளைக் கும்பல்!

தனிப்படைக்குத் தலைமை ஏற்றுள்ள ஏடி.எஸ்.பி ஜெயச்சந்திரனிடம் பேசியபோது, ‘‘எங்களுக்கே தண்ணி காட்டியது அந்தக் கொள்ளைக் கும்பல். கடைசியில், பர்லோனி கிராமத்தில் பதுங்கியிருந்த தானாஜி பாபு சுக்லி, பாண்டுரங் பாபு துகில் உள்ளிட்ட நான்கு பேரைக் கைதுசெய்தபோது, ஊர் மக்கள் எங்களையும் துரத்திவந்து தாக்கினர். ஆனாலும் குற்றவாளிகளைத் தப்பவிடாமல், எங்களது தோளில் தூக்கிச் சுமந்தவாறே ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து காரில் ஏறித் தப்பித்தோம். இன்னும் 12 பேரைக் கைதுசெய்வதற்காக மகாராஷ்டிராவில் தனிப்படை போலீஸார் முகாமிட்டுள்ளனர். விரைவில் அவர்களையும் கைதுசெய்து, கொள்ளையடித்த நகைகளையும் பறிமுதல் செய்வோம்’’ என்றார் உறுதியோடு.

சபாஷ்!