Published:Updated:

ஆண்களா, பெண்களா... யாருக்கு அதிகம் மனவலிமை..?

யாருக்கு அதிகம் மனவலிமை..?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கு அதிகம் மனவலிமை..?

ஒரு பிரச்னையை எதிர் கொள்ளும்போது, அதை எப்படியும் சரிசெய்துவிடலாம், பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஆண்களைவிட பெண்களுக்கே விரைவாகப் பிறக்கும்.

ஆண்களா, பெண்களா... யாருக்கு அதிகம் மனவலிமை..?

ஒரு பிரச்னையை எதிர் கொள்ளும்போது, அதை எப்படியும் சரிசெய்துவிடலாம், பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஆண்களைவிட பெண்களுக்கே விரைவாகப் பிறக்கும்.

Published:Updated:
யாருக்கு அதிகம் மனவலிமை..?
பிரீமியம் ஸ்டோரி
யாருக்கு அதிகம் மனவலிமை..?

சூப்பர்`மேன்’, பேட்`மேன்’, ஸ்பைடர்`மேன்’களை சூப்பர்`ஹீரோ’வாக வடிக்கும் உலகம் இது. இன்னொரு பக்கம், ‘பெண்கள் வீக்கர் செக்ஸ்’ என்ற கற்பிதத்தை சொல்லிக்கொண்டே இருக்கும். உண்மையில், நோய்களை எதிர்கொண்டு அதிக நாள் வாழ்வதில் (Longivity) பெண்களுக்கே முதலிடம், ஆண்களுக்கு இரண்டாம் இடம் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல, ஆண்களைவிட பெண்கள் மனதளவில் வலிமையானவர்கள் என்பதையும், ஒவ்வொரு கால கட்டத்திலும் உலகம் முழுக்கப் பல்வேறு ஆய்வுகள் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கின்றன.

அந்த ஆய்வுகளுக்கு உதாரண மாக நாம் அரசியல், விளையாட்டு என துறை ரீதியாக பெண் வெற்றி யாளர்களை துணைக்கு அழைக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ‘ஸ்ட்ராங் வுமன்’ இருக்கிறார். அது நீங்கள்தான்!

மதுரையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ஆஷா, தினசரி வாழ்வில், வாழ்க்கை ஓட்டத்தில் பெண்கள் ஆண்களைவிட எந்தளவுக்கு மன திடத்துடன் இருக்கிறார்கள் என்பது பற்றி பகிர்கிறார்.

ஆஷா
ஆஷா

வலிதாங்கி

பெண்களின் உடற்கூறிலேயே வலியைத் தாங்கக்கூடிய சக்தி அதிகமாக இருக்கிறது என்கின்றன ஆய்வுகள். பிரசவ வலி உச்சபட்ச உதாரணம். பெண்களுக்கு காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டால், அவர்களால் அதை யும் எதிர்கொண்டு வீட்டு வேலை, குழந்தைகள் என தங்களது பிற கடமைகளையும் கவனிக்க முடியும்.

ஆனால் ஆண்கள் நோய்வாய்ப் பட்டால், தங்கள் உடல் வலியைப் பற்றி மட்டுமே பிரதானமாக யோசிப்பார்கள். மேலும், அது போன்ற சூழல்களில் பெண்களை அதிகம் சார்ந்திருப்பார்கள்.

`மல்டி டாஸ்க்கிங்'...

பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதில் திறன்மிக்கவர்கள். ஒரே நேரத்தில் மூன்று அடுப்புகளில் மூன்று வகை சமையல் செய்துகொண்டே வாஷிங் மெஷினில் துணி போடுவது, அலுவலகம், வீடு, குழந்தைகள் என அனைத் தையும் கையாள்வது, அலுவல் ரீதியாக ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை நிதானத்துடன் மேற்கொள்வது என `மல்டி டாஸ்க்கிங்'கில் எல்லா ஏரியாவிலும் பெண் களால் ஈடுகொடுக்க முடியும்.

ஆண்கள் வெளி வேலைகளைச் சிறப்பாகச் செய்தாலும் வீட்டு வேலைகளிலும் அதே அளவு பங்களிப்பைத் தருவதில் அவர்களுக்குத் தடுமாற்றம் இருக்கும்.

துணிவே துணை!

ஒரு பிரச்னையை எதிர் கொள்ளும்போது, அதை எப்படியும் சரிசெய்துவிடலாம், பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை ஆண்களைவிட பெண்களுக்கே விரைவாகப் பிறக்கும். ஒரு பிரச்னையை லாஜிக்கலாக அணுகுவதில் அவர்களுக்குத் தடுமாற்றம் இருந்தாலும், அதை எதிர்கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு நிறைய இருக்கும்.

ஆண்கள் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் முதலில் கலங்கி நிற்பார்கள்; பெண்கள் மன உறுதியுடன் அதை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.

பேரன்டிங் எனும் பெரும் பொறுப்பு

பெண்களின் மனவலிமை முழுமையாக வெளிப்படும் செயல், குழந்தை வளர்ப்பு. ஆரோக்கியம், பழக்கவழக்கங்கள், கல்வி எனப் பல கூறுகளிலும் கவனம் கொடுத்துப் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பில், அம்மாக்கள் எந்தப் புள்ளியிலும் தளர்வடைவதே இல்லை. குறிப்பாக, விவாகரத்தின்போது அந்தக் கடினமான சூழலில்கூட குழந்தைகளைப் பொறுப்பேற்றுக்கொள்வதில் அம்மாக்களே தீவிரம் உடையவர்கள்.

ஆண்களா, பெண்களா... யாருக்கு அதிகம் மனவலிமை..?

தாங்கித் தாண்டும் தோல்விகள்

மனவலிகளைத் தாங்கி, அவற்றைத் தாண்டிச் செல்வதிலும் பெண்கள் சிறந்தவர்கள். உதாரணமாக, காதல் தோல்வி போன்ற ரிலேஷன்ஷிப் பிரச்னைகளில் பெண்கள் நிதர்சனத்தை ஏற்றுக் கடப்பார்கள். ஆண்கள், உடைந்துபோன புள்ளியிலேயே நிற்பார்கள். அதற்கான ஏற்புத்தன்மை ஏற்பட அவர்களுக்குக் காலம் ஆகும். கவுன்சலிங்குக்கு வருபவர்களில் இதுபோன்ற ஆண்களை அதிகம் பார்க்க முடியும்.

அதேபோல, வயதான காலத்தில் ஆண் துணையை இழந்த பெண் ணால் தன்னைத் தொடர்ந்து பார்த்துக்கொள்ள முடியும். அதுவே, ஆயுள் முழுக்க பெண் ணையே சார்ந்திருக்கும் வாழ்வை வாழும் ஆண்களுக்கு, தன் துணையை இழந்ததுக்குப் பின்னான வாழ்வு சிக்கலானதாக ஆகிவிடும்.

இங்கு ஒவ்வொரு தனி மனிதருமே ஒவ்வொரு மாதிரி. எனவே, மேற்கூறிய அனைத்துக் கூறுகளும் எல்லா ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொருந்திப் போகும் என்பதில்லை. ஆனால், உலகப் பெண்கள் அனைவருமே ஒரு சமூகமாக, மனவலிமை மிக்க மனுஷிகள் என்ற வகையில் இவற் றுடன் பொருத்திப் போகிறவர்கள் என்பதை மறுக்க இயலாது.

குட்டி யானை, தன் கால்களில் இடப்படும் சங்கிலிக்கு வளர்ந்த பின்னும் கட்டுப்பட்டு இருப்பதைப் போலத்தான், இந்த ஆணாதிக்க சமுதாயம் காலம் காலமாகப் பெண்களை ‘வீக்கர் செக்ஸ்’ என்று கூறிவருவதும். இந்தப் பெண்கள் தினத்தில் நாம் உணர வேண்டிய, சக பெண்களுக்கு உணர்த்த வேண்டிய முதல் முக்கிய விஷயம் இது...

நான் உறுதியானவள், வலிமை மிக்கவள்!

சிமோனா
சிமோனா

மன உறுதி மந்திரங்கள்!

மன உறுதியை உறுதிப்படுத்திக்கொள்ள, அதிகரிக்க பெண்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொள்ள வேண்டிய மந்திரங்கள் இவை என்கிறார், மதுரையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் சிமோனா.

* உங்கள் மேல் அக்கறை கொண்டவர்களின் ஆரோக்கியமான விமர்சனங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. ஆனால், தன்னம்பிக்கையை சிதைக்கும்படியான வார்த் தைகள் உங்கள் சுயமதிப்பை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

* துணிச்சல், `ஆட்டிட்யூட்', கனிவு போன்ற உங்களின் பலங்களை பலவீனங்களாகப் பேசுபவர்களை புறந்தள்ளுங்கள்.

* மற்றவர்களை `கம்ஃபர்ட் ஸோனி'ல் வைத்திருக்க உங்கள் எல்லைகளைச் சுருக்கிக்கொள்ளாதீர்கள்.

* அமைதியான, அடக்கமான, அழகான என சமூகம் ‘நல்ல’ பெண்களுக்கு வகுத்து வைத்துள்ள வரையறைகளில் பொருந்திப்போகத் தேவையில்லை என்பதை உணருங்கள்.

* மனவலிமை தொற்றக்கூடியது; உடன் பயணிக்கும் பெண்களிடமிருந்து அதை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.a

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism