கடந்த சில வாரங்களாகவே பெரும் சுற்றுச்சூழல் பிரச்னையில் சிக்கித் தவிக்கிறது நம் தலைநகரான டெல்லி. `இந்தச் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட யார் காரணம்?’ என்று நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு சர்வே நடத்தினோம்.

டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுக்கு முக்கியமான காரணம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை செய்த வைக்கோலை எரித்ததுதான் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். அறுவடை செய்தபின், வைக்கோலை எரிப்பதால், பெரும் புகை கிளம்பி, பனிப் பொழிவுடன் சேர்ந்து, புகைமூட்டமாக மாறிவிடுகிறது. ஆனால், வெறும் 27% பேர்தான் `வைக்கோல் எரிப்பே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு முக்கியமான காரணம்’ என்று சர்வேயில் சொல்லியிருக் கிறார்கள்.

இந்த சர்வேயில் 35% பேர், `பஸ், கார் அதிகம் பயன்படுத்தப்படுவது’ என்றும், 37% பேர், `தொழிற்சாலைகளிலிருந்து கிளம்பும் புகையே காரணம்’ என்றும் சொல்லியிருக்கின்றனர்.

டெல்லியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம். இவற்றிலிருந்து கிளம்பும் புகை டெல்லி சுற்றுச்சூழல் பிரச்னைக்கு ஒரு முக்கிய காரணமே. டெல்லியில் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க அந்த மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இனிவரும் ஆண்டுகளிலாவது விவசாயிகள் வைக்கோல் எரிப்பதையும், தொழிற்சாலைகள் மூலம் ஏற்படும் பாதிப்பதையும் தவிர்த்தால் மட்டுமே சுற்றுச்சூழல் பிரச்னையிலிருந்து டெல்லி முழுமையாகத் தப்பிக்கும்!

-ஆகாஷ்