நுகர்வோர் அல்லது சில்லறைப் பணவீக்க விகிதம் (Consumer Inflation Index) கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.62 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. `இந்த விலை உயர்வுக்கு என்ன காரணம்?’ என்று ஒரு கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டு, அதற்கு மூன்று பதில்களைத் தந்திருந்தோம்.

இந்த சர்வேயில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், `அரசின் தவறான கொள்கைதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அரசின் எந்தத் தவறான கொள்கை முடிவால் விலைவாசி உயர்ந்தது என்பது குறித்து யாரும் விளக்கம் தரவில்லை.
ஏறக்குறைய 19% பேர், இடைத்தரகர் செய்யும் சதியால்தான் அத்தியாவசியமான பொருள்களின் உயர்ந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அத்தியாவசியமான பொருள்களைப் பதுக்குவது உட்பட இடைத்தரகர் செய்யும் சதிகளால்தான் சில பொருள்களின் விலை ஏகத்துக்கும் உயர்கிறது. இந்தப் பதுக்கலைத் தவிர்க்க அரசுத் தரப்பில் பெரிய அளவில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெறும் 9% பேர் மட்டுமே மழை, வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அண்மைக்காலமாக வெங்காயம் உட்பட பலவற்றின் விலை உயரக் காரணம், இந்தியா முழுக்கப் பெய்த மழையும், வெள்ளமும்தான். இந்த மழைக்காலம் முடிந்த பிறகாவது விலைவாசி குறையுமா?
- ஆகாஷ்