Published:Updated:

ஐ.டி துறையில் தொடரும் பணியிழப்புகள்... யாருக்கு அதிக பாதிப்பு?

ஐ.டி துறை
ஐ.டி துறை

கடந்த ஆண்டு இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளன.

ஆட்டோமொபைல் துறைக்கு அடுத்தாக, இளைஞர்கள் பணியாற்றும் ஐ.டி துறையிலும் பணிநீக்க நடவடிக்கைகள் அதிகமாக உள்ளன. இந்தத் துறையில், நடுத்தர மற்றும் மேல்மட்ட பதவிகளில் இருப்பவர்கள்தான் பெரும்பான்மையாகப் பணியிழப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த மட்டத்தில் இருக்கும் பணியாளர்கள் அதிக சம்பளம் பெறுபவர்களாகவும், அதற்கேற்ற திறனை வெளிப்படுத்த முடியாதவர்களாகவும் இருக்கும்போது, பணியிழப்புக்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டு இன்ஃபோசிஸ், காக்னிசன்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலைநீக்கம் செய்துள்ளன.

ஐ.டி துறையில் தொடரும் பணியிழப்புகள் குறித்து எழுத்தாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான ஷான் கருப்பசாமியிடம் கேட்டோம்.

ஐ.டி துறையில் தொடரும் பணியிழப்புகள்... யாருக்கு அதிக பாதிப்பு?

"ஐ.டி துறையில் வேலையிழப்பு, மூத்த பணியாளர்களுக்கு மட்டுமே ஏற்படுகிறது. இவர்களால் புது தொழில்நுட்பத்துக்கேற்ப செயல்பட முடியாதபட்சத்தில் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். அதே சமயத்தில் இளைஞர்களையும் குறைந்த பணி அனுபவம் உள்ளவர்களையும் ஐ.டி நிறுவனங்கள் பணியில் அமர்த்திக்கொண்டுதான் இருக்கின்றன. தொழில்நுட்ப மாற்றத்துக்கேற்ப பணியாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளாதபட்சத்தில் வேலையிழப்பிலிருந்து தப்ப இயலாது" என்றார்.

வேலையிழப்புகளுக்கு என்னென்ன பொதுவான காரணங்கள் இருக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் கேட்டபோது, "இந்தியாவில் வேலையிழப்பு என்பது மூன்று விதமாக உள்ளது. முதலாவதாக, வளர்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கேற்ப தங்களை மேம்படுத்திக்கொள்ளாத பணியாளர்கள் வேலையை இழக்கின்றனர். அடுத்து, தொழில் துறையில் ஏற்பட்ட ஆட்டோமேஷன் காரணமாக சில பணியாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இதற்கடுத்து, பொருளாதார மந்தநிலை காரணமாக வேலையிழப்பு ஏற்படுகிறது.

இப்படி வேலையிழந்தவர்கள் அடுத்த வேலையைத் தேடுவது என்பது, கடினமான ஒன்றுதான். இந்தச் சமயத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திலோ அல்லது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்திலோ பயிற்சி பெற்று, வேறு துறை சார்ந்த வேலைகளுக்குச் செல்வதே வேலையிழப்பிலிருந்து தப்பிக்க ஒரே வழி" என்றார்.

- படித்த இளைஞர்களுக்கு இந்தியாவில் வேலை கிடைப்பது என்பதே சவாலான விஷயமாக இருக்கும் நிலையில், வரலாறு காணாத வேலையிழப்பும் குடும்பஸ்தர்களை அச்சம்கொள்ளவைக்கிறது. இது தொடர்பான விரிவான அலசல் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > வரலாறு காணாத வேலையிழப்பில் சிக்கித் தவிக்கும் இந்தியா! https://www.vikatan.com/news/career/unemployment-issue-in-india

என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்?

ஜனவரி 31-ம் தேதி... ஒரே நாளில் இந்தியா முழுவதிலு மிருந்தும் 80,000-க்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற இருப்பது, பொதுத்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும்புயலைக் கிளப்பியுள்ளது. விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாயப் பணி ஓய்வை மத்திய அரசு திணிப்பதாக பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் கொந்தளிக்கின்றனர்.

பி.எஸ்.என்.எல்
பி.எஸ்.என்.எல்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தொடர் நஷ்டத்தில் இயங்கிவருவதால், அதன் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி 80,000-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும் 11,000 பேர் விருப்ப ஓய்வு பெற கடிதம் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. `50 வயதுக்கு மேற்பட்டவர்கள் விருப்ப ஓய்வு பெறலாம்’ என அறிவிக்கப்பட்டதையடுத்து, பலர் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். விண்ணப்பித்தவர்கள் ஜனவரி 31-ம் தேதியுடன் ஓய்வுபெற்றுவிட்டால், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும். அந்த நிறுவனம் மேலும் பின்னோக்கிச் செல்லும் என்று பலரும் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

- இது தொடர்பான முழுமையான செய்திக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க > ஜனவரி 31-ம் தேதிக்குப் பிறகு... என்னவாகும் பி.எஸ்.என்.எல் எதிர்காலம்? https://www.vikatan.com/news/general-news/after-january-31st-what-will-be-the-future-of-bsnl

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு