Published:Updated:

`விசா காலம் முடிந்தும் வேலூரில் தங்கியிருந்தது ஏன்?’ - நெதர்லாந்து பெண்ணிடம் விசாரணை

ஹென்னாமேரி
ஹென்னாமேரி

விசா காலம் முடிந்தும் தூதரகத்தைத் தொடர்புகொள்ளாமல், வேலூரில் இரண்டு ஆண்டுகளாகத் தங்கியிருந்த நெதர்லாந்து பெண்மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஹென்னாமேரி. வயது 44. இவர், 2019-ம் ஆண்டு, மே மாதத்தில், ஐந்து மாத கால விசா அனுமதியுடன் வேலூர் வந்திருக்கிறார். மாற்றுத்திறனாளிகள், மூளை வளர்ச்சி குன்றியவர்களின் விவரங்களைச் சேகரித்து உதவிகள் செய்ய தொண்டு நிறுவனம் தொடங்கவும் அவர் திட்டம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. விசா காலம் முடிந்தும் ஊர் திரும்பாத ஹென்னாமேரி தூதரகத்தை அணுகவில்லை.

வேலூர் ஆட்சியர் அலுவலகம்
வேலூர் ஆட்சியர் அலுவலகம்

கொரோனா பொதுமுடக்கம் முடியும் வரையிலும் காட்பாடி, காந்தி நகர் ஜெகநாதன் நகரிலுள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தாராம். இந்தநிலையில், அதிமுக மாணவரணி மாநிலத் துணைச் செயலாளர் எம்.டி.பாபுவின் உதவியுடன் வேலூர் ஆட்சியர் அலுவலகம் வந்த ஹென்னாமேரி, தன்னைச் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்திருக்கிறார்.

அதிகாரிகளிடம் அவர், ‘``கொரோனா பொதுமுடக்கம் காரணமாக சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டதால் சொந்த நாட்டுக்குத் தன்னால் திரும்ப முடியவில்லை. கையில் கொண்டுவந்த பணமும் செலவழிந்துவிட்டது. பணத் தேவைக்காக காந்திநகரிலுள்ள ஒரு வீட்டில் ஒரு முதியவருக்குப் பணிவிடை செய்துவந்தேன். அந்த முதியவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்’’ என்றார்.

ஹென்னாமேரி
ஹென்னாமேரி

இது குறித்து, ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், ‘``ஹென்னாமேரி விசா காலம் முடிந்தவுடனேயே அவர் தூதரகத்தை தொடர்புகொண்டிருக்கலாம். அவர் இங்கேயே தங்கியிருந்தது குறித்து விசாரணைக்கு உட்படுத்த டெல்லியிலுள்ள வெளியுறவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது நிலை குறித்து வெளியுறவுத்துறை இணையதளத்தில் விவரங்களை தெரிவிக்கவும் என ஹென்னாமேரிக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு