ஆர்.மோகனப் பிரபு C.F.A

கடந்த வாரம் தாய்லாந்து தலைநகரான பாங்காக்கில் ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (RCEP–Regional Comprehensive Economic Partnership) நம் நாடு ஒப்புதல் கையொப்பமிடாமலேயே வெளியேறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளாமல், கையொப்பமிட மறுத்ததற்கு என்ன காரணம் என்பதே இன்றைக்குப் பலரும் கேட்கும் கேள்வி.

ஆசியான் நாடுகள் கூட்டம்

தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் உச்சி மாநாடு நடந்தது. இதில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது. இந்தியா, சீனா, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் 10 ஆசியான் (ASEAN) அமைப்பு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தகம் அமையும் பட்சத்தில், சீனப் பொருள்கள் இந்தியச் சந்தைகளை ஆக்கிரமித்துவிடும் என்பதை உள்ளூர் அரசியல் கட்சிகள், தொழில் வர்த்தக மற்றும் விவசாய அமைப்புகள் கடுமையாக எச்சரித்தன. `ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிடக் கூடாது’ என்று மத்திய அரசை இந்த நிறுவனங்கள் கடுமையாக எச்சரிக்கவே செய்தன.

இந்த மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, `இந்த ஒப்பந்தம் இந்தியாவின் வர்த்தக நலனுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டார். `இந்தத் ‘தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில்’ இந்தியா கையொப்பமிடாது’ என்றும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தியாவைத் தவிர, மீதமுள்ள 15 நாடுகளும் தடையற்ற வர்த்தகத்தில் கையொப்பமிட முடிவு செய்தன; `இந்தியாவுக்கான கதவு திறந்தே இருக்கும்’ என்றும் அறிவித்தன.

மோடி அரசின் இந்தக் கொள்கை முடிவை தேசிய அரசியல் கட்சிகளும், உள்ளூர் தொழில், வர்த்தக, விவசாய அமைப்புகளும் ஒருமித்த குரலில் வரவேற்றிருக்கின்றன. ஒட்டுமொத்த உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை மற்றும் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலான பொருளாதாரத்தை உள்ளடக்கிய ஆர்.சி.இ.பி நாடுகள் கூட்டமைப்பின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் நம் நாடு இணைவதிலுள்ள சாதக, பாதகங்கள் பற்றிப் பார்ப்போம்.

ஏற்கெனவே சீனப் பொருள்கள் இறக்குமதியால் உள்ளூர்த் தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், சீனாவுடனான தடையற்ற வர்த்தகம் உள்ளூர் தொழில் நிறுவனங்களை நசிவடைய வைத்துவிடும் என்ற அச்சம் இந்தியாவில் பரவலாக இருக்கிறது.

16 நாடுகள் இணைந்த ஆர்.சி.இ.பி

கடந்த 2012-ம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டில், ஆர்.சி.இ.பி கூட்டமைப்புக்கான கருத்தாக்கம் முதன்முதலாக உருவானது. தென்கிழக்காசியக் கூட்டமைப்பிலுள்ள புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, பர்மா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, லாவோஸ், மலேசியா, வியட்நாம் ஆகிய பத்து நாடுகளுடன் ஆசியான் கூட்டமைப்புடன் ஏற்கெனவே தனித்தனியே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, தென் கொரியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய ஆறு நாடுகளையும் இணைத்து ஒற்றை வர்த்தக மண்டலத்தை அமைப்பதே ஆர்.சி.இ.பி அமைப்பின் நோக்கம். அதாவது, உற்பத்திப் பொருள்கள் மற்றும் சேவைகள் ஆகியவை இந்த 16 நாடுகளுக்குள் எந்தத் தடையுமின்றி வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் வழிவகுக்கும்.

`உலகின் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேலாக, 340 கோடி மக்கள்தொகை மற்றும் 21 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட 16 நாடுகள் இணைந்து செயல்படும்பட்சத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதார மண்டலமாக ஆர்.சி.இ.பி உருவாகும்’ என்று நம்பப்பட்டது.

ஆர்.சி.இ.பி நாடுகள், கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்காக, கடந்த ஆறு ஆண்டுகளில் உறுப்பு நாடுகளுக்கிடையே பலகட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

`உலகின் உற்பத்தி கேந்திரமான சீனாவுடன் தடையற்ற ஒப்பந்தம் அமையும்பட்சத்தில், ஆர்.சி.இ.பி கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போக்குவரத்து ஒருதலைச் சார்பாக அமைந்துவிடும்’ என்ற அச்சம் பலருக்கும் இருந்தாலும், `ஒரு மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இருக்கும் இந்தியா இந்தக் கூட்டமைப்பில் இணைந்தால், ஒருவித வர்த்தகச் சமநிலை ஏற்படும்’ என்றும் நம்பப்பட்டது.

தற்போது ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட மறுத்துவிட்டாலும், மீதமுள்ள 15 நாடுகள் ஒப்பந்த முன்வரைவை ஏற்றுக்கொண்டதுடன், `அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் கையொப்பமாகும்’ என்றும் அறிவித்துள்ளன. `இந்தியாவுக்காக கூட்டமைப்பின் கதவுகள் திறந்தே இருக்கும்’ என்றும் அறிவித்திருக்கின்றன.

இந்தியாவின் தயக்கத்துக்கான காரணங்கள்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்தில் சீனாவின் கையே ஓங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் மலிவு விலைப் பொருள்களுடன் இந்தியச் சந்தையை முற்றுகையிட்ட சீனா, பிறகு அதீதத் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் இந்தியாவின் மின்னணுச் சந்தையைக் கைப்பற்றியது. இந்தியாவின் இறக்குமதியில் பெட்ரோலியப் பொருள்களுக்கு அடுத்தபடியான இடத்தை மின்னணுச் சாதனங்கள் பிடித்துவிடவே, சீனாவுடனான நமது வர்த்தகப் பற்றாக்குறை 58 பில்லியன் டாலரை எட்டியது. இது இந்திய மதிப்பில் ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல்.

ஆர்.சி.இ.பி ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் பட்சத்தில், இந்த அமைப்பில் உறுப்புநாடாக இருக்கும் சீனாவுக்கு இந்தியச் சந்தைகள் முழுமையாகத் திறந்துவிடப்பட வேண்டும். ஏற்கெனவே சீனப் பொருள்கள் இறக்குமதியால் உள்ளூர்த் தொழில் நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், சீனாவுடனான தடையற்ற வர்த்தகம் உள்ளூர் தொழில் நிறுவனங்களை நசிவடைய வைத்துவிடும் என்ற அச்சம் இந்தியாவில் பரவலாக இருக்கிறது.

சர்வதேச அரங்கில் அரசின் துணையின்றி இந்திய நிறுவனங்கள் சுயமாகப் போட்டியிடும் வகையில், அவர்களின் போட்டித்திறனை மேம்படுத்த உதவும் சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

இதேபோல, `பால் பொருள்கள் உற்பத்தியில் முதன்மையான இடத்திலுள்ள நியூசிலாந்துடன் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ளும்பட்சத்தில் இந்தியாவின் பால் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்’ என்று அமுல் போன்ற நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.

எனவே, ஒரு நாட்டிலிருந்து மேற்கொள்ளப்படும் வரையறையற்ற இறக்குமதியைத் தவிர்ப்பதற்காக இறக்குமதி ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது, உரிய வர்த்தகத் தடைகளை மேற்கொள்ளும் வகையில் ‘ஆட்டோ– டிரிக்கர்’ எனப்படும் வர்த்தகப் பாதுகாப்பு முறையை இந்தியா முன்மொழிந்தது. ஆனால், ஆர்.சி.இ.பி கூட்டமைப்பின் இதர நாடுகள் இந்தியாவின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது துரதிருஷ்டவசமானது.

இந்தியர்களுக்கான வேலைவாய்ப்பு

`ஆர்.சி.இ.பி கூட்டமைப்பு நாடுகளுக்கிடையே உற்பத்திப் பொருள்கள், சேவைகள்போலவே ஊழியர்களும் தங்குதடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும்’ என்ற இந்தியாவின் மற்றொரு கோரிக்கையும் ஆர்.சி.இ.பி நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை மிகுந்திருக்கும் தற்போதைய நிலையில், நம் மனிதவளத்தை உட்புக அனுமதிக்காமல், இந்தியாவை வெறுமனே ஒரு நுகர்பொருள் சந்தையாக மட்டுமே அணுகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே இந்தியாவின் தற்போதைய வாதம்.

இறக்குமதி வரிகளைத் தவிர்ப்பதற்காகத் தனது உற்பத்திப் பொருள்களை சிறிய நாடுகளின் வாயிலாக ஏற்றுமதி செய்யும் சீனாவின் மற்றொரு வணிகத் தந்திரத்தைத் தடுப்பதற்காக, ‘பொருள்கள் உற்பத்தியாகும் நாட்டின் அடிப்படையிலேயே வணிகக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்’ எனும் இந்தியாவின் முன்மொழிவையும் ஆர்.சி.இ.பி கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை.

`பேச்சுவார்த்தை தொடங்கிய 2013-ம் ஆண்டில் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரிகள்தான் ஆர்.சி.இ.பி வர்த்தகக் கூட்டமைப்பின் அடிப்படையாக இருக்க வேண்டும்’ என்ற பிற நாடுகளின் முன்மொழிவும் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமைந்துவிட்டது. காரணம், 2014-ம் ஆண்டுக்குப் பிறகுதான் உள்ளூர்த் தொழில்துறையின் நலனைக் காப்பதற்காக பல்வேறு இறக்குமதி வரிகள் விதிக்கப் பட்டிருக்கின்றன. ஒப்பந்த அடிப்படை ஆண்டு 2014-ம் ஆண்டுக்கு முன்னதாக அமையும்பட்சத்தில், இறக்குமதி வரியை நாம் வெகுவாகக் குறைக்க வேண்டியிருக்கும்.

போட்டியிடும் திறனை வளர்ப்போம்!

` ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டிருக்கும் உள்ளூர்த் தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஆர்.சி.இ.பி கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட மாட்டோம்’ என்ற மத்திய அரசின் முடிவு எதிர்க்கட்சிகள் உட்படப் பலராலும் வரவேற்கப்படுகிறது.

`ஆர்.சி.இ.பி நாடுகள் இந்தியாவின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், அவர்களுடன் பேச்சுவார்த்தை புதுப்பிக்கப்படும்’ என்று வர்த்தக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். சர்வதேச வர்த்தகத்தில் நமக்குச் சாதகமான சூழல் மேலோங்கியிருக்கும் மேலை நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

`அதீத வர்த்தகப் பாதுகாப்பு, உள்நாட்டு நிறுவனங்களின் போட்டியிடும் திறனைப் பாதிக்கும்; தயாரிப்பு செலவினக் கட்டுப்பாட்டையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது’ எனச் சில பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

`சர்வதேச அளவிலான போட்டி, உள்ளூர் நிறுவனங்களின் திறனை மேம்படுத்தும்; நூதன முயற்சிகளை ஊக்கப்படுத்தும்’ என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். `நீண்டகால நோக்கில் சர்வதேசப் போட்டி என்பது தவிர்க்க முடியாத ஒன்றே’ எனவும் வாதிடுகின்றனர்.

சர்வதேச அரங்கில் அரசின் துணையின்றி இந்திய நிறுவனங்கள் சுயமாகப் போட்டியிடும் வகையில், அவர்களின் போட்டித்திறனை மேம்படுத்த உதவும் சீர்திருத்தங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். உலக அளவில் நம் போட்டித்திறனை வளர்த்துக்கொள்ளாவிட்டால், உலக வளர்ச்சியிலிருந்து நாம் தனித்துவிடப் படுவோம் என்பதையும் நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

(இந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துகள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகளே.)