Published:Updated:

உங்களின் புத்தாண்டு ரெசல்யூஷனில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று இதுதான்: நியூஸ்லெட்டர்

The Subject Line (TSL)
News
The Subject Line (TSL)

இந்த 2022-ல் உங்க ரெசல்யூஷனில் இருக்க வேண்டிய, உங்க அன்றாடத்தின் பகுதியாக வேண்டிய, ஒரு நல்ல விஷயத்தை மட்டும் இங்க பரிந்துரைக்க விரும்புறேன். அது நியூஸ்லெட்டர்.

பெரும் போராட்டத்தையும், நீண்ட பயணங்களையும் தாண்டி, இதோ... 2021-ம் ஆண்டின் இறுதிக்கு வந்துட்டோம்.

`பழையன கழிதலும், புதியன புகுதலும்' போகிக்கு சொல்லப்பட்டதுதான்னாலும்கூட, மனதளவில் அதைப் புத்தாண்டிலிருந்தே தொடங்குறதுதான் நம்ம வழக்கம். தேவையில்லாத சில பழக்கங்களைவிட நினைப்போம்; புதுசா சில நல்ல பழக்கங்களை ரெசல்யூஷனா எடுத்து, நம் தினசரியில் சேர்ப்போம். அப்படி இந்த 2022-ல் உங்க ரெசல்யூஷனில் இருக்க வேண்டிய, உங்க அன்றாடத்தின் பகுதியாக வேண்டிய, ஒரு நல்ல விஷயத்தை மட்டும் இங்க பரிந்துரைக்க விரும்புறேன்.

அது நியூஸ்லெட்டர் படிப்பது.

இது எப்படி நல்ல பழக்கமாகும், இதற்கும் ரெசல்யூஷனுக்கு என்ன சம்பந்தம்னு உங்களுக்குள் கேள்விகள் எழலாம்; சொல்றேன்.

இந்த 2021-ம் ஆண்டு ஊடகவியல் (Jounalism) தொடர்பாக நடந்த முக்கியமான விஷயங்களில் ஒன்று, இரு ஊடகவியலாளர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த டிமிட்ரி முரடோவ் ஆகிய இரண்டு பேர்தான் அவங்க. இதற்கு முன்னாடி இப்படி பத்திரிகையாளர்களுக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது எப்போ தெரியுமா? 1936-ல். ஜெர்மனின் நாஜிக்களுக்கு எதிரான உண்மைகளை வெளிக்கொணர்ந்த தற்காக, கார்ல் வோன் ஒஸிட்ஸ்கி என்பவருக்கு அப்போ வழங்கப்பட்டது. இப்போ, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யாவில் கருத்து சுதந்திரத்துக்காகப் போராடிவரும் இந்த இருவருக்கும் வழங்கப்பட்டிருக்கு. இதை இங்க குறிப்பிட ஒரு முக்கியமான காரணம் இருக்கு.

உங்களின் புத்தாண்டு ரெசல்யூஷனில் இருக்க வேண்டிய முக்கியமான ஒன்று இதுதான்: நியூஸ்லெட்டர்

இந்த நோபல் பரிசை பெற்றுக்கொண்டு, மரியா ரெஸ்ஸா ஆற்றிய உரை மிக முக்கியமானது.

உலகம் முழுக்க எப்படி கார்ப்பரேட் டெக் நிறுவனங்கள், லாபத்துக்காக மக்களை உளவு பார்க்கின்றன, அவர்களிடம் வெறுப்பைத் தூண்டுகின்றன, பொய்களையே படிக்க / பார்க்க ஊக்குவிக்கின்றன என்பதை அந்த உரையில் குறிப்பிட்ட மரியா, இன்னும் ஓர் எச்சரிக்கையையும் விடுத்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``Without facts, you can’t have truth. Without truth, you can’t have trust. Without trust, we have no shared reality, no democracy, and it becomes impossible to deal with our world’s existential problems: climate, coronavirus, the battle for truth."

அதாவது, உண்மைகளுக்குப் பதில், நாம் பொய்களையே தினமும் படித்து, பார்த்து, பகிர்ந்து வந்தால், நாளை நம் உலகின் மிக முக்கியமான பிரச்னைகளுக்குக்கூட நம்மால் ஒன்றாகப் போராட முடியாது. மாறாக, அந்தப் பொய்களை நிஜமென நம்பி, அனைவரும் தனித்தனி மாய யதார்த்தங்களில் (Alternative Realities) உலாவுவோம். பொய்களுக்கான மாயக்குமிழிகளில் (Filter Bubbles) சிக்கித்தவிப்போம். இதில் எங்கே நாம் ஒன்றுகூடுவது? எங்கே நாம் இணைந்து போராடுவது? அதனால்தான், ஜனநாயகத்தையும் உலகையும் காக்க, நிஜ தகவல்களையும் (Facts), உண்மையையும் (Truth) நாம் காப்பாற்ற வேண்டும் என்றார் மரியா. அந்த லட்சியத்துக்கான அங்கீகாரங்களில் ஒன்றுதான் அவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசும்கூட.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இப்போ, அப்படியே நம் தினசரி வாழ்க்கைக்கு வருவோம்.

இன்றைக்கு நாம் தினசரி செய்தி படிக்கும் பழக்கங்களில் எவ்வளவு மாற்றங்கள்? செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையதளங்கள் எனக் கடந்து வந்த இந்தப் பயணம் இன்று சமூக ஊடகங்களில் வந்து நிற்கிறது. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் படிக்க வேண்டும் என்பதையெல்லாம் யார் முடிவு செய்கிறார்கள்?

எப்படியேனும் உங்களை சமூக வலைதளங்களிலேயே அதிக நேரம் செலவழிக்க வைத்து, நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க நினைக்கும் அல்காரிதங்களே முடிவு செய்கின்றன. நீங்கள் பார்ப்பது உண்மையா, பொய்யா? அதற்கு கவலையில்லை. நீங்கள் பார்ப்பது நல்லதா, கெட்டதா? அக்கறைப்பட அதற்கு அவசியமும் இல்லை.

விளைவு... ஒவ்வொருநாளும் பிறழ்தகவல்களாலும், கவனம் ஈர்க்கும் Content-களாலும் நம்மை மாயக்குமிழிக்குள்ளேயே சுற்றவைத்துக் கொண்டிருக்கின்றன. எது உண்மை, எது பொய் எனத் தெரியாமல் நம்மை குழப்பிக்கொண்டிருக்கின்றன. தேவையற்ற அதீத தகவல்களை நம் மீது திணித்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்னையால் நீங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

Representational Image
Representational Image
Photo by Craig Adderley from Pexels

இந்தப் புத்தாண்டுக்கு எத்தனையோ ரெசல்யூஷனை எடுத்திருப்பீர்கள்; அதில் ஒன்றாக இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடுவதையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி, நாம் தினசரி படிக்கும் பார்க்கும் விஷயங்களை ஆரோக்கியமானதாக வைத்துக்கொள்வதை Information Diet என்றே அழைக்கிறார்கள். இந்த டயட்டை நீங்களும் இனி பின்பற்றலாம். இது என்ன டயட்?

- தினசரி நமக்கு தேவைப்படும் தகவல்களை ஊர்ஜிதமான மூலங்களிலிலிருந்தே பெறுவது;

- தேவையற்ற தகவல்கள் எவ்வளவு குவிந்தாலும், அவற்றை நுகர்வதைத் தடுப்பது.

இந்த இரண்டும்தான் இதன் முக்கிய அம்சங்கள். இதற்காக தினசரி செய்தித்தாள்கள், வார பத்திரிகைகள், செய்தி இணையதளங்கள், Apps என எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம். அதில், ஒன்றுதான் நான் மேலே சொன்ன நியூஸ்லெட்டர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது எப்படி எனக்கு உதவும் எனக் கேட்குறீங்களா?

இதற்குப் பதிலாக, அண்மையில் வெளியான சில நியூஸ்லெட்டர் எடிஷன்களை இங்கு குறிப்பிடுவதே சரியாக இருக்கும்.

1. 👩🏻‍💻 பெண்ணின் திருமண வயதை ஏன் உயர்த்துகிறது அரசு?

2. 🔭 `விடியல்' ரகசியம் சொல்லுமா ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்?

3. கர்நாடகாவின் மதமாற்று தடைச்சட்டம் சரியானதா?

4. Omicron: சில முன்னெச்சரிக்கைகளும் சில நற்செய்திகளும்!

5. மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜனவரி 1-க்குப் பிறகு என்னாகும்?

6. மூன்றாவது டோஸூக்கு என்ன தடுப்பூசி?

7. 🦠 ஓமிக்ரான்: What We Know So Far?

பிற எடிஷன்களுக்கு இங்கே க்ளிக் செய்க

தினசரி காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துவிடும் இந்த The Subject Line (TSL) நியூஸ்லெட்டர். அதிகபட்சம் 5 நிமிஷம்தான். அதற்குள்ளாகவே, நீங்க அன்றைய தினத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் அனைத்தையும், எளிய மொழியில், சுருக்கமாக, அதே சமயம் தேவையான அனைத்து கோணங்களுடனும் படிச்சுடலாம். தினமும் காலை 5 நிமிடத்தில் ஒரு செய்தித்தாளைப் படித்து முடிப்பது போல உணரலாம். அதற்கு மேலே இருக்கும் எடிஷன்களே சாட்சி.

எல்லா தகவல்களும் ஊர்ஜிதமான செய்திகளாகவே இருக்கும். அதனால் தினமும் காலையில் முக்கியமான எந்த செய்தியையும் மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கலாம்; கூடவே, அந்த செய்தியின் முக்கியமான கோணத்தையும் எளிமையா புரிஞ்சுக்கலாம். எந்த அல்காரிதங்களின் விளையாட்டும் இல்லாமல், நேரடியாக உங்களைத் தேடிவந்து, உங்களுக்கு தேவையான செய்திகளை சரியாகத் தருவது மட்டும்தான் இதன் நோக்கம்.

இந்த TSL எடிஷனை நீங்கள் பெற செய்ய வேண்டியதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். கீழ இருக்கும், பாக்ஸ்ல உங்கள் இ-மெயில் ஐ.டி-யைக் கொடுங்க. கொடுத்ததும் உடனே உங்க இ-மெயில் இன்பாக்ஸை செக் பண்ணுங்க; அவ்ளோதான்! தினமும் காலைல TSL-ஐ இலவசமா படிக்கலாம்.

இந்தப் புத்தாண்டிலிருந்து உங்க Information Diet-ஐ மாற்றியமைங்க; அதில் TSL-ஐயும் சேர்த்திடுங்க!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 🎉🎊