ஒழுங்குமுறை ஆணையங்கள் அவ்வப்போது அபராதம் விதித்து வருகின்றன. வங்கி தொடர்பான விதிமீறல் களுக்கு ரிசர்வ் வங்கியும், காப்பீடு தொடர்பான விதிமீறல்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ-வும், பங்குச் சந்தை தொடர்பாக விதிமீறலுக்கு செபியும் அபராதம் விதித்து வருகிறது.

சமீபத்தில் பங்குச் சந்தை முதலீட் டாளர்களுக்கு பெரிய செய்தியே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் அதன் தலைவர் முகேஷ் அம்பானிக்கும் அபராதம் விதித்ததுதான். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.25 கோடியும், முகேஷ் அம்பானிக்கு ரூ. 15 கோடியும் செபி அபராதம் விதித்திருக்கிறது.

ஏன் இந்த அபராதம்..?

2007-ம் ஆண்டு நடந்த செயலுக் காகத் தற்போது அபராதம் விதிக்கப் பட்டிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத் தின் துணை நிறுவனமாக அப்போது இருந்த ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் பங்குகள் விற்பனையில், நிறுவனத்துக்கு மட்டும் தெரிந்த தகவலை வைத்து அதிகப்படியான லாபம் சம்பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு.

மார்ச் 2007-ம் ஆண்டு ரிலையன்ஸ் குழுமம் நிதி திரட்டுவதற்காகத் திட்டமிட்டது. இதன் தொடர்ச்சியாக ஆர்.பி.எல் குழுமத்தின் 5% பங்குகளை விற்க முடிவெடுத்தது. பின்னாளில் (2009-ம் ஆண்டு) இந்த ஆர்.பி.எல் நிறுவனம் ரிலையன்ஸுடன் இணைக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆர்.பி.எல் பங்குகளை ரிலையன்ஸ் விற்கத் திட்டமிட்டது. ஆனால், மறுபுறம் எஃப் அண்ட் ஓ பிரிவில் ஆர்.பி.எல் பங்குகளில் ஷார்ட் பொசிஷனை அதிகம் புக் செய்தது. இதற்காக 12 ஏஜென்ட்டுகளை நியமனம் செய்தது.

ஆர்.பி.எல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் பங்குகளை விற்க முடிவு மேற் கொண்டால், ஆர்.பி.எல் பங்குகள் சரியும் என்பது சந்தையில் உள்ள அனைவருக்கும் தெரியும். விற்கும் போது கிடைக்கும் பணம் மட்டுமன்றி, அந்தப் பங்குகள் விலை சரிவடையும் போதும் அதில் லாபம் பார்க்க ரிலையன்ஸ் திட்டமிட்டிருக்கிறது என்பதுதான் செபியின் தீர்ப்பாக இருக்கிறது.

மேலும், நவம்பர் 29-ம் தேதி (2007-ம் ஆண்டு) நவம்பர் மாத எஃப் அண்ட் ஓ-வுக்காக இறுதி வர்த்தக நாள் (Expiry day). அன்றைய நாளில் கடைசி அரைமணி நேரத்தில் நடக்கும் வர்த்தகத்தின் சராசரி விலைதான் அந்த கான்ட்ராக்டின் செட்டில்மென்ட் விலையாக நிர்ணயம் செய்யப்படும். அதனால் கடைசி 10 நிமிடத்தில் பெரிய எண்ணிக்கையிலான பங்குகள் (1.95 கோடி பங்குகள், கேஷ் மார்க்கெட்டில்) விற்கப்படுகிறது. இதனால் நவம்பர் மாத கான்ட்ராக்ட் விலையில் மேலும் சரிவு ஏற்படுகிறது. இது முறையற்ற நடவடிக்கை என செபி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

‘எங்களிடம் அப்போது ஆர்.பி.எல் பங்குகள் பெருமளவுக்கு இருந்தது. அதனால் இது ஒரு ஹெட்ஜிங் நடவடிக்கை’ என்னும் ரிலையன்ஸ் வாதத்தை செபி ஏற்கவில்லை.

தவிர, ‘ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் தினசரி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அதனால் இந்த நடவடிக்கைக்கு அவரும் பொறுப்பு. தெரியாமல் நடந்துவிட்டது எனக் கூற முடியாது’ என்றும் செபி தன்னுடைய 95 பக்க அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் சில நூறு கோடி ரூபாய் அளவுக்கு முறையற்ற லாபம் கிடைத்திருக்கும் என செபி கணித்திருக்கிறது. இந்த முறையற்ற லாபம் மீண்டும் ரிலை யன்ஸ் நிறுவனத்துக்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சிதைப்பது மட்டு மல்லாமல் பங்குச் சந்தையின் நேர்மையை சந்தேகத்துகுரியதாக்கி விடும் என்பதால், இந்த நடவடிக்கை அவசியமானது.

2017-ம் ஆண்டு இந்த வழக்கில் செபி தீர்ப்பு வழங்கியது. இதில் தமக்குத் தெரிந்த தகவலை வைத்து லாபம் சம்பாதித்த 447 கோடி ரூபாய் மற்றும் 12% வட்டியும் (2007-ம் ஆண்டிலிருந்து) சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என உத்தர விட்டிருந்தது.

சுமார் 1,000 கோடிக்கு மேல் இந்தத் தொகை இருக்கும். மேலும், ஓர் ஆண்டுக்கு டெரிவேட்டிவ் சந்தையில் ஈடுபடக் கூடாது என தடையும் விதிக்கப்பட்டது.

ஆனால், செபியின் இந்த உத்தரவை எதிர்த்து ரிலையன்ஸ் நிறுவனம் பங்குச் சந்தை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் (Securities Appellate Tribunal) மேல் முறையீடு செய்தது. ஆனால், தீர்ப்பாயம் இந்த மனுவை கடந்த நவம்பரில் (2020) ரத்து செய்து விட்டது. மேலும், இந்தத் தொகையை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது. இதனால் உச்ச நீதிமன்றம் செல்ல முடிவெடுத்திருக் கிறது ரிலையன்ஸ்.

வெளிப்படைத்தன்மை மற்றும் முதலீட்டாளரின் நம்பிக்கையை உயர்த்தும் நடவடிக்கையில் செபி ஈடுபட்டு வருகிறது. சந்தை மதிப்பு அடிப்படையில் முதல் இடத்தில் இருக்கும் ரிலையன்ஸுக்கு அபராதம் விதித்திருப்பதன் மூலம் முறை கேடுகளில் ஈடுபடும் மற்றவர்களுக்கு மறைமுக எச்சரிக்கையை விடுத் திருக்கிறது என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறு முதலீட்டாளர்களின் நலனுக்கு பாதகம் ஏற்படும் வகையில் யார் நடந்துகொண்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என செபி செயல்படுவது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம் ஆகும்!