Published:Updated:

குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்க கருவிகளே இல்லையா?

மீட்பு நடவடிக்கை
பிரீமியம் ஸ்டோரி
மீட்பு நடவடிக்கை

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது, இந்தியாவின் சாபக்கேடு. விண்கலத்தைத் தயாரிக்கும் விஞ்ஞானிகள் நிறைந்த நாட்டில், குழிக்குள் விழும் குழந்தைகளை மீட்க இயந்திரங்கள் இல்லை என்பதுதான் வெட்கக்கேடு!

குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்க கருவிகளே இல்லையா?

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது, இந்தியாவின் சாபக்கேடு. விண்கலத்தைத் தயாரிக்கும் விஞ்ஞானிகள் நிறைந்த நாட்டில், குழிக்குள் விழும் குழந்தைகளை மீட்க இயந்திரங்கள் இல்லை என்பதுதான் வெட்கக்கேடு!

Published:Updated:
மீட்பு நடவடிக்கை
பிரீமியம் ஸ்டோரி
மீட்பு நடவடிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ளது நடுகாட்டுப்பட்டி கிராமம். அங்கு வேளாங்கன்னி என்பவருக்கு, சொந்தமாக ஆழ்துளைக் கிணறு இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, போர்வெல் அமைப்பதற்காக 500 அடியில் ஆழத்தில் குழி தோண்டப்பட்டது. அதை மூடி வைத்திருந்தனர். மழை, வெயில் காரணமாக அதன் மூடி இத்துபோய்விட்டது. அங்கு சோளப்பயிர்கள் முளைத்திருக்கின்றன. அதற்கு அருகில் வேளாங்கன்னியின் தம்பி பிரிட்டோ ஆரோக்கியராஜ், கலா மேரி தம்பதியர் வசிக்கிறார்கள். இவர்களின் இரண்டு வயதான குழந்தை, அக்டோபர் 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு வீட்டு அருகே விளையாடிக் கொண்டி ருந்தது. அப்போதுதான், இத்துப்போயிருந்த ஆழ்துளைக் கிணற்றின் குழியில் எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டது.

கலா மேரி
கலா மேரி

குழந்தையை மீட்க வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு இருந்தாலும், அதற்கான முறையான திட்டமோ, பிரத்யேகமான கருவிகளோ அப்போது இல்லை. குழிக்குள் கேமராவைச் செலுத்தி ஆராய்ந்தனர். 26 அடியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தை, கைகளை அசைத்தபடி தப்பிக்க பிடிமானத்தைத் தேடியது. அந்தப் பிஞ்சுக் கரங்களின் உயிர்ப்போராட்டக் காட்சி, மக்களின் நெஞ்சையே அறுத்தது. மொத்த மக்களும் தவிப்பில் ஆழ்ந்தனர்.

குழிக்கு பக்கவாட்டில் ஜே.சி.பி மூலம் குழி தோண்டும் பணி தொடங்கியது. 16 அடி தோண்டிய நிலையில் பார்த்தால் பாறை! அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. தொடர்ந்து குழிக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் திருச்சியைச் சேர்ந்த டேனியல் என்பவர், தான் கொண்டுவந்த கருவி மூலமாக மீட்பு நடவடிக் கையில் இறங்கினார். மதுரையைச் சேர்ந்த மணிகண்டனும் இன்னொரு கருவியுடன் வந்து சேர்ந்தார். இருவரும் குழந்தையை மீட்க கடுமையாக முயற்சி செய்தார்கள். அதற்கு முன்பாக பைப்புக்குள் கயிற்றைச் செலுத்தி, குழந்தையின் கையில் முடிச்சிட்டனர் தீயணைப்பு வீரர்கள். அந்த முடிச்சு, குழந்தை மேலும் ஆழத்துக்குச் செல்லாமல் தடுத்தது.

அதே நேரம் மணிகண்டன் செலுத்திய கருவியால் குழந்தையைப் பிடித்து இழுக்க முற்பட்டனர். குழிக்குள் இடைவெளி போதாததால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. டேனியல், மணிகண்டன் இருவரது முயற்சிகளும் தோல்வியடைந்தன. தொடர்ந்து பல்லடத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தன் குழுவினருடன் மீட்பு நடவடிக்கையில் இறங்கினார். அவருக்கும் தோல்வி. அந்த நிலையில் மீண்டும் ஜே.சி.பி மூலம் குழியெடுக்கும் பணியை முடுக்கிவிட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மீட்பு நடவடிக்கை
மீட்பு நடவடிக்கை

நாமக்கல்லைச் சேர்ந்த வெங்கடேசன் குழுவினர், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள், சென்னையைச் சேர்ந்த ஸ்டன்ட் நடிகர்கள் என பலரும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினார்கள். அனைவரும் தாமாக முன்வந்தவர்கள். அக்டோபர் 25-ம் தேதி இரவு 11 மணி வரை குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதிகாலை 4 மணி வரை குழந்தையின் சுவாசச் சத்தமும் கேட்டது. அதற்குப் பிறகு எந்தச் சத்தமும் அசைவும் இல்லாமல்போனது.

``தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு காலை 7.30 மணிக்குள் வந்துவிடுவார்கள்’’ என்றார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால், மதியம் 12 மணி வரை அவர்கள் வரவே இல்லை. அரசு, போர்க்கால அடிப்படையில் கவனம் செலுத்தி யிருந்தால், பேரிடர் மீட்புக் குழுவினர் முன்னரே குழந்தையை மீட்டிருக்க வாய்ப்பிருக்கிறது.

சம்பவ இடத்துக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்து இரவு பகலாக அங்கேயே இருந்தார். ஒவ்வொரு குழுவினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதும், ஆலோசனைகளை கொடுத்துக் கொண்டே இருந்தார். இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க நவீன கருவி ஒன்று இல்லையே என்ற ஆதங்கத்தை, அமைச்சர் விஜயபாஸ்கரே பலமுறை வேதனையுடன் உச்சரித்தார்.

இந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரை குழந்தையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருந்தன. பிரார்த்திப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

இனிமேலாவது ஆழ்துளைக்காகத் தோண்டக்கூடிய குழிகளை முறையாக மூடி, உயிர்களைக் காப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism