Published:Updated:

மும்பை: ஆண் நண்பர்களுடன் செல்ஃபி; கணவன் சந்தேகத்தால் மனைவி ரயில் முன்பாய்ந்து தற்கொலை

தற்கொலை
தற்கொலை

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்ததற்காக கணவன் தகராறு செய்ததால், மனவேதனை அடைந்த பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை, கிழக்கு புறநகர்ப் பகுதியிலுள்ள விக்ரோலியில் வசித்துவந்தார் நிஷா தேஷ்முக் (27). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றிவந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் கணவன் வீட்டில் மாமியார் குழந்தை இல்லாததைச் சுட்டிக்காட்டி மனரீதியாக சித்ரவதை செய்துவந்திருக்கிறார்.

மஹாராஷ்டிரா: மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

அவரின் கணவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு அடித்து உதைத்துவந்தார். இந்தநிலையில் நிஷாவின் மொபைல்போனை அவர் கணவன் சோதனை செய்து பார்த்திருக்கிறார். அதில் நிஷா தனது அலுவலக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருந்த புகைப்படம் இருந்தது. உடனே இது குறித்து நிஷாவிடம் கேட்டு கணவன் தகராறு செய்திருக்கிறார். அதோடு விடாமல் நிஷாவின் தந்தைக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்திருக்கிறார்.

நிஷாவின் தந்தையிடம் மொபைலில் இருந்த செல்ஃபி படங்கள் குறித்து கேட்டுத் தகராறு செய்திருக்கிறார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே இரு தரப்பினரும் விக்ரோலி போலீஸ் நிலையத்துக்குச் சென்றனர். போலீஸார் தம்பதி இடையே சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு நிஷாவை இரண்டு நாள்கள் அவருடைய தந்தையின் வீட்டில் இருந்துவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து நிஷாவை அவருடைய தந்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கிருந்து மறுநாள் காலையில் நிஷா அலுவலகத்துக்குச் செல்வதாகக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீட்டுக்கு வரவில்லை. அவரை பெற்றோர் தேட ஆரம்பித்தபோது நிஷாவின் தந்தை மற்றும் சகோதரனுக்கு நிஷாவின் தற்கொலைக் குறிப்பு கிடைத்திருக்கிறது. உடனே அவரைத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் பலனில்லை.

சென்னை: பிரிந்துபோன காதல் கணவர்; ஆண் நண்பரின் சந்தேகம்! - கொலை செய்யப்பட்ட பெண்!நடந்தது என்ன?

இறுதியில் நிஷா விக்ரோலி ரயில் தண்டவாளத்தில் படுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரியவந்தது. இது குறித்து நிஷாவின் தந்தை, நிஷாவின் கணவன் மற்றும் மாமியார் வீட்டில் உள்ளவர்கள் மீது போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

தேவையில்லாத சந்தேகம் ஒரு பெண்ணின் உயிரையே பறித்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு