சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு ஃபெடரேஷன் உலகக்கோப்பைப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன். பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 20 வயதேயான இளவேனில் 251.7 புள்ளிகள் பெற்றுத் தங்கம் வென்றிருக்கிறார். இந்தப் போட்டியில் 72 நாடுகளைச் சேர்ந்த 541 வீரர்கள் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் அஞ்சும் மோட்கிலுடன் போட்டியிட்டு முதலிடத்தை இளவேனில் வென்றிருந்தாலும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் பங்கேற்க ஏற்கெனவே மோட்கில் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

இளவேனில் தங்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி யைத் தருவதாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் ககன் நாரங்.

கடலூரைச் சேர்ந்த இளவேனில் வென்றிருக்கும் முதல் பெரியோருக்கான போட்டி இது. இந்தப் போட்டிக்குப்பின் இளவேனிலின் ஒலிம்பிக் தகுதி குறித்து தேசிய ரைபிள் அசோசியேஷன் ஆலோசனை செய்யவுள்ளது.

தங்க மங்கைக்கு நம் வாழ்த்துகள்!

அமெரிக்காவின் பெர்க்லி பகுதியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வான் இயற்பியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவரும் பெண்மணி 26 வயதான சரஃபினா நான்ஸ்.

“நான்கு ஆண்டுகளுக்கு முன் குவய இயற்பியல் (குவான்டம் ஃபிசிக்ஸ்) பாடத்தில் பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கியிருந்தேன். இயற்பியலைக் கைகழுவிவிட்டு வேறு ஏதாவதுதான் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் என் விரிவுரையாளரைச் சந்தித்தேன். இன்றோ அதே குவய இயற்பியல் துறையில் ஆய்வு செய்வதோடு, இரண்டு ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்திருக்கிறேன். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் என்ற ‘ஸ்டெம்’ படிப்புகள் சிக்கலானவைதாம். ஆனால், மதிப்பெண்ணைக்கொண்டு இவற்றில் நம்மை எடைபோடவே முடியாது” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சரஃபினா.

இந்தப் பதிவை 57,000 பேர் விரும்பியும் 10,000 பேர் பகிர்ந்துமுள்ளனர். கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை கவனத்தை இந்தப் பதிவு ஈர்க்க, “அருமை, ஊக்கமளிக்கக் கூடிய பதிவு” என்று பாராட்டினார் சுந்தர். இந்தப் பதிவு அறிவியல் படிப்பைத் தொடர முடியாத பலரது மனத்தைத் தொட்டிருக்கிறது. மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்த சரஃபினா, சமீபத்தில் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பது இன்னும் அதிகமாக மக்களை நெகிழச் செய்துவிட்டது.

மதிப்பெண்ணில் மட்டுமல்ல மதிப்பு!

சென்னைக் கோட்டூர்புரம் ‘வித்யா சாகர்’ இல்லத்தில் வசித்துவரும் உம்முல் கேர் என்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு இந்த ஆண்டு என்சிபிஇடிபி - மைண்டு டிரீ ஹெலன் கெல்லர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு உற்சாக மூட்டும் ரோல் மாடல் பிரிவில் இந்த விருதைப் பெற்றுள்ளார் உம்முல். இவர் திருச்சியில் பிறந்து சென்னை மற்றும் பெங்களூரில் வளர்ந்தார். இவரின் தாயார் செல்லும் இடமெல்லாம் இவரைத் தூக்கிச் சென்றார். குடும்பத்தில் உம்முலின் பணியே முன்னிலைப்படுத்தப்பட்டது. இவரின் சகோதரருக்கு இவ்வளவு முக்கியத்துவமோ, கவனிப்போ இல்லை என்று உணர்ந்தார் உம்முல். தன் இருபதாவது வயதில் தனித்து இயங்கும் ஆர்வம் தொற்றிக்கொள்ள, சென்னையிலுள்ள தன்னார்வ நிறுவனமான வித்யா சாகரில் இணைந்துகொண்டவர், தனியே தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.

அதன்பின் பத்தாம் வகுப்புப் படிப்பைத் தொடர்ந்தார். எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து அரசு சட்டக்கல்லூரியில் சட்டமும் கற்றுத் தேர்ந்தார் உம்முல்.

இப்போது வித்யா சாகரின் சட்டப்பிரிவு ஆலோசகராகச் செயல் பட்டுவரும் உம்முல், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்கை உறுதிப்படுத்தவும், அவர்களுக்குப் பொது இடங்களைப் பயன்படுத்தக் கட்டமைப்பு வசதியைப் பெறவும் போராடி வருகிறார். “அப்பாவி உம்முல், அட்வகேட் உம்முல் கேர் ஆனதற்காகப் பயணித்த தொலைவு அதிகம். விடாமுயற்சி இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம்” என்று கூறுகிறார் உம்முல்.

கலக்குங்க உம்முல்!

கடந்த டிசம்பர் 2 அன்று கொச்சி நகரில் புதிய சாதனை படைத்திருக்கிறார் பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரைச் சேர்ந்த துணை லெஃப்டினன்ட் ஷிவாங்கி. இந்தியக் கப்பல் படையில் டார்னியர் ரக விமானத்தை ஓட்டி இந்த சாதனையைப் புரிந்திருக்கும் ஷிவாங்கி, கோவாவில்தான் கடலையே முதன்முறையாகப் பார்த்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 மணிநேரம் விமானங்களில் பறந்த அனுபவம்கொண்டவர், டார்னியர் ரக விமானத்தைத் தனியாக ஓட்டியுள்ளார்.

“விமானம் ஓட்ட சிறப்புத் தகுதி எதுவும் தேவையில்லை. ஆனால், அதற்கு விடா முயற்சியும் கடின உழைப்பும் வேண்டும். பறப்பது நம் இயல்புக்கு மாறானது. எனவே, அதற்கெனத் தீவிர கவனமும் திறமையும் வேண்டும்” என்கிறார் ஷிவாங்கி.

“காக் பிட்டில் அவர் வேற லெவல்! வேகமாகக் கற்றுக்கொள்வார்; திறமையான விமானி அவர்” என்று பாராட்டுகிறார் அவருக்குப் பயிற்சி அளித்த லெஃப்டினன்ட் கமாண்டர் ராகுல் யாதவ். இன்னும் ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு, பி8ஐ ரக விமானங்களை இயக்குவார் ஷிவாங்கி.

சிறகுகள் இன்னும் விரியட்டும்!

சமீபத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தேசிய மாதவிடாய் நிறுத்தம் (மெனோபஸ்) சார்ந்த கொள்கை ஒன்றை அரசு ஆலோசித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். “ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் சவாலான பிரச்னை மாதவிடாய் நிறுத்தம். உடல்சார்ந்த மற்றும் உளவியல் ரீதியான பல தொல்லைகள் இதனால் ஏற்படுகிறது. திடீர் வியர்வை, தூக்கமின்மை, கவனம் சிதறுதல், மனச் சிதைவு என இதனால் பெண்கள் பல இன்னல் களுக்கு உள்ளாகின்றனர்” என்று அவர் கூறியுள்ளார்.

“இதனால் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் பணியாளர்களுக்கு தேசிய மெனோபஸ் கொள்கை ஒன்றை வரைவு செய்து அரசு அமல்படுத்த வேண்டும். இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

2016-ம் ஆண்டு தேசிய மகளிர் கொள்கை வரைவில் மாதவிடாய் நிறுத்தமாகும் பெண்களுக்குப் போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்றும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெண்கள் இதனால் உடல் மற்றும் மனம் சார்ந்த சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர் என்றும் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இங்கிலாந்து உட்பட சில நாடுகளிலுள்ள பெரிய நிறுவனங்களில் மெனோபஸ் பருவத்தை எட்டிய பெண்களுக்கு அவர்களுக்கேற்ற வேலை மற்றும் வேலை நேரங்கள் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேவை புதிய கொள்கை!

கனடா நாட்டின் முதல் தமிழ்ப் பெண் அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றிருக்கிறார் கனடா வாழ் தமிழ் வம்சாவளிப் பெண் அனிதா இந்திரா ஆனந்த்.

டொரன்டோ பல்கலைக்கழக விரிவுரையாளரான அனிதா, இப்போது மக்கள் பணி மற்றும் கொள்முதல் துறை அமைச்சராகப் பணியாற்றிவருகிறார்.

அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரைச் சேர்ந்த வில்லி மர்ஃபி என்ற 82 வயது மூதாட்டியின் வீட்டுக்கதவைத் தட்டிய திருடன் ஒருவன் ஆம்புலன்ஸை அழைக்குமாறு கூறி வீட்டுக்குள் புக முயன்றான்.

வில்லி மறுக்க, கதவை உடைத்து உள்ளே நுழைந்தவனை மேஜையைத் தூக்கி எறிந்து, முகத்தில் ஷாம்பூவைப் பீய்ச்சியடித்து, அடித்து நொறுக்கி துவம்சம் செய்துவிட்டார் பளுதூக்கும் வீராங்கனையான வில்லி. திருடனின் ஆசைப்படியே அவனை ஆம்புலன்ஸில் அனுப்பியும் வைத்தார்!

சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தனலட்சுமி - கலியமூர்த்தி தம்பதி தங்களுக்குப் பிறந்த மகனை வறுமை காரணமாக 1976-ம் ஆண்டு, குழந்தைகள் காப்பகத்தில் விட்டனர்.

டென்மார்க் நாட்டுத் தம்பதிக்குத் தத்து கொடுக்கப்பட்ட மகன் டேவிட், கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து தாய் தந்தையைத் தேடிவந்தவர், இப்போது முதன்முதலாக அவர்களைச் சந்தித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் எழுதிய சுய சரிதையான ‘பிகமிங்’ நூலுக்குத் துணை நூலாக ‘கைடடு ஜர்னல் ஃபார் டிஸ்கவரிங் யுவர் வாய்ஸ்’ என்ற புதிய நூல் விற்பனைக்கு வந்துள்ளது.

‘ஜர்னல்’ என்ற அன்றாட நிகழ்ச்சிகளை எழுதிவைக்கும் டைரியைப் போன்ற இந்த நூலில் மிஷலின் சிறந்த மேற்கோள்கள் இடம்பெற்றுள்ளன.

பீகார் மாநிலம் சோன்பூர் நீதிமன்றத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றிய கௌரிநந்தனின் மகள் அர்ச்சனா சமீபத்தில் அம்மாநில நீதித்துறைத் தேர்வுகளில் வெற்றிபெற்று நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து வயதுக் குழந்தைக்குத் தாயான அர்ச்சனா, தன் தந்தை கடைநிலை ஊழியராகப் பணியாற்றியது பிடிக்கவில்லை என்றும், என்றாவது தானும் நீதிபதியாக வேண்டும் என்ற நெஞ்சுரத்துடன் படித்ததாகவும் கூறுகிறார்.

உலகின் சிறந்த பெண் கால்பந்தாட்ட வீராங்கனைக்கு வழங்கப்படும் அங்கீகாரமான `பலோன் தோர்' பரிசு இந்த ஆண்டு அமெரிக்க வீராங்கனை மேகன் ராபினோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் உலகக் கோப்பையை அமெரிக்கா வெல்ல வழிசெய்தவர் மேகன் என்பது கூடுதல் சிறப்பு.

திருநருக்கு எதிராக அரசின் புதிய ‘டிரான்ஸ்ஜெண்டர் சட்டவரைவு 2019’ இருப்பதாகக் கூறி அதில் கையெழுத்திட வேண்டாம் எனக் கோரி குடியரசுத் தலைவருக்கு மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இதில் தமிழகத்திலிருந்து 7,000 பேர் தபால் அட்டைகள் மூலம் தங்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.

இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான சுதா மூர்த்தி அண்மையில் ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது டெல்கோவில் பணியாற்றிவிட்டு கணவருடன் இன்ஃபோசி ஸில் பணியாற்றப் போவதாகக்கூறி ராஜினாமா செய்தது; அப்போது ஜே.ஆர்.டி டாடாவிடம், தான் பணக்காரியானால் சமூக நலனுக்கு அந்தப் பணத்தைச் செலவிடுவதாக உறுதி தந்தது என்று பல நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்தார்.

கழிவறை வசதியே இல்லாத பொறியியல் கல்லூரியில் படித்ததால், இன்று 16,000 கழிவறைகளைக் கல்வி நிறுவனங்களில் கட்ட வழிசெய்திருப்பதாகவும் கூறினார்.