Published:Updated:

மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டுதல் - நாக்கை அறுத்துக் காணிக்கை செலுத்திய பெண்!

நாக்கை அறுத்துக்கொண்ட வனிதா
நாக்கை அறுத்துக்கொண்ட வனிதா

ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்பதற்காக பெண் வேண்டுதல் செய்திருந்ததாகவும், அதுபோலவே நடந்ததால் அந்த வேண்டுதலை நிறைவேற்றி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பரமக்குடி பெண் ஒருவர்.

மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதற்காக நாக்கை காணிக்கை தருவதாக வேண்டிக்கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வனிதா
வனிதா

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே பொதுவக்குடியைச் சேர்ந்தவர் கார்த்திக். தி.மு.க அனுதாபியான இவரின் மனைவி வனிதா.

சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்றும், அப்படி நடந்தால் தன் நாக்கை வெட்டிக் காணிக்கை தருவதாகவும் இவர் பரமக்குடி முத்தாலம்மனை வேண்டிக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

நாக்கை அறுத்துக்கொண்ட வனிதா
நாக்கை அறுத்துக்கொண்ட வனிதா

இந்தநிலையில் தி.மு.க வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப்போகிறார் என்ற தகவல் உறுதியான நிலையில் வனிதா, இன்று காலை கோயில் வாசலில் நின்று நாக்கை அறுத்திருக்கிறார். உடனே ரத்தம் வழிந்தோட கீழே விழுந்தவரை அந்தப் பகுதியில் உள்ளவர்கள் மீட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். மு.க.ஸ்டாலின் முதல்வரானால் நாக்கை வெட்டி காணிக்கை கொடுப்பேன் என்று அம்மனிடம் வேண்டிக்கொண்டதால் இப்படிச் செய்தேன் என்று வனிதா சொன்னதாகக் கூறப்படுகிறது.

`யூனியன் அரசாங்கம்; கூட்டாட்சி’ -  பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் சொன்ன நன்றியில் குறியீடா?!

இது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே நேரம், இதுதான் உண்மையான காரணமா, வேறு ஏதும் பிரச்னையா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு