Published:Updated:

தலைவலிக்கு 3 ஊசிகள்; உயிரிழந்த பெண் - தவறான சிகிச்சையே காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு

தவறான சிகிச்சையில் இறந்ததாகச் சொல்லப்படும் செல்லப்பிரியா

அரசு மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர் செந்தில்குமார் அவரது கிளினிக்கில் தலைவலிக்கு சிகிச்சை அளித்து, மூன்று ஊசிகள் போட்டிருக்கிறார். ஊசி போட்ட சில நிமிடங்களில் செல்லப்பிரியா மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்

சிவகங்கை மாவட்டம், ஏரியூரை அடுத்த மாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி - செல்லப் பிரியா தம்பதியர். இவர்களுக்கு ஓர் ஆண், ஒரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். செல்லப்பிரியா கடந்த பிப்ரவரி 3-ம் தேதி தலை பாரமாக இருக்கிறதென்று மதகுப்பட்டியிலுள்ள தனியார் கிளினிக் ஒன்றில் சிகிச்சை பெற்றிருக்கிறார். அரசு மருத்துமனையில் பணியாற்றும் மருத்துவர் செந்தில்குமார் அவரது கிளினிக்கில் தலைவலிக்கு சிகிச்சை அளித்து, மூன்று ஊசிகள் போட்டிருக்கிறார். ஊசி போட்ட சில நிமிடங்களில் செல்லப்பிரியா மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.

தவறான சிகிச்சையில் இறந்ததாகச் சொல்லப்படும் செல்லப்பிரியா
தவறான சிகிச்சையில் இறந்ததாகச் சொல்லப்படும் செல்லப்பிரியா

மருத்துவர் செந்தில்குமார் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாகத்தான் செல்லப்பிரியா இறந்தார் என உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, மதகுப்பட்டி போலீஸார் நடவடிக்கை எடுப்பதாகச் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். ஆனால், புகார் கொடுத்து 33 நாள்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், செல்லப்பிரியாவின் குடும்பத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன. மருத்துவருக்கு ஆதரவாக கல்லூரி நிர்வாகம், அரசுத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உடந்தையாகச் செயல்படுவதால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகளை ஏற்று காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.

இது குறித்து செல்லப்பிரியாவின் கணவர் முத்துப்பாண்டி,``என் மனைவிக்குத் தலைவலி என டாக்டர் செந்தில்குமாரின் கிளினிக்குக்குக் கூட்டிச் சென்றேன். இரண்டு நரம்பு ஊசிகள், இடுப்பில் ஒரு ஊசின்னு மொத்தம் மூணு ஊசி போட்டார். ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே என் மனைவி மயங்கி விழுந்துவிட்டார். என் மனைவியை 108 ஆம்புலன்ஸில் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அங்கு தெரிவித்துவிட்டனர். தவறான ஊசி போட்டதால்தான் என் மனைவி இறந்தார். எனவே, தவறாக சிகிச்சை அளித்த டாக்டர் செந்தில்குமார் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்ய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.