Published:Updated:

50% இட ஒதுக்கீடு... நனவான கனவு! - தலைநிமிரும் தமிழ்ப்பெண்கள்!

வெற்றிப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிப் பெண்கள்

வெற்றிப் பெண்கள்

50% இட ஒதுக்கீடு... நனவான கனவு! - தலைநிமிரும் தமிழ்ப்பெண்கள்!

வெற்றிப் பெண்கள்

Published:Updated:
வெற்றிப் பெண்கள்
பிரீமியம் ஸ்டோரி
வெற்றிப் பெண்கள்

நீண்ட நாள் கனவு நிறைவேறியிருக்கிறது, சமீபத்தில் நடந்த தமிழக உள்ளாட்சித் தேர்தலில். பல்வேறு மாநிலங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பெண்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு, இந்தத் தேர்தலில்தான் தமிழகத்தில் சாத்தியமாகியிருக்கிறது. வெற்றி பெற்ற சிங்கப் பெண்களில் சிலர், சிறப்பான கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்கள். அந்த வெற்றிப் பெண்களின் பட்டியல் இதோ...

ரியா
ரியா

ரியா

ராட்சி ஒன்றியக் கவுன்சிலராக மட்டுமின்றி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் முதன்முதலாக தேர்வு பெற்றுள்ள திருநங்கை ரியா. திமுக சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய இரண்டாவது வார்டில் போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரைவிட 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அரசியல் களம் காண்பதற்கு முன்னரே சமூகச்செயற்பாட்டாளராக மக்களுக்காக உழைக்கத் தொடங்கியவர். அதற்காக இவரைத் தேர்ந்தெடுத்த மக்களும் பாராட்டுக்குரியவர்கள். ‘‘மக்கள் பாராட்டும்படி பாரபட்ச மின்றி பணி செய்வேன். ஊழலை ஒழிக்கப்போராடுவேன்’’ என உயர்ந்த லட்சியங்களோடு களமிறங்கியுள்ளார் கவுன்சிலர் ரியா. அவருக்கான சவால்களும் நிறையவே உள்ளன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வீரம்மாள் அழகப்பன் / தங்கவேலு
வீரம்மாள் அழகப்பன் / தங்கவேலு

வீரம்மாள் அழகப்பன் / தங்கவேலு

வீரம்மாள் அழகப்பன், வயது 79. புதிய அடையாளம்: மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரிட்டாபட்டி கிராம ஊராட்சியின் தலைவர். தங்கவேலு, வயது 73. புதிய அடையாளம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்துக்கு உட்பட்ட அ.தரைக்குடி ஊராட்சி மன்றத் தலைவர். எழுபது வயதை கடந்த தமிழகத்தின் சிங்கப் பெண்கள். `என்னை யாரும் கவனிக்கிறதில்லை' என்று முணு முணுக்கும் முதியோர் மத்தியில் ‘நான் ஊரையே பார்த்துக்கிறேன்' என்று சொல்லும் இந்த பிரசிடென்ட் பாட்டிகளுக்கு பிரத்யேகமாக அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட்!

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி

சாதிய உணர்வின் தீச்சுடர்களில் பிறந்திருக்கிறது இவரின் வெற்றி. திருச்செந்தூர் ஒன்றியம், பிச்சிவிளை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியைப் பெண் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கியதைக் கண்டித்து கிராம மக்கள், ஊர் முழுவதும் கறுப்புக் கொடி கட்டித் தேர்தலைப் புறக்கணித்தனர். பட்டியலினத்தவர் ஆறு பேரின் ஓட்டு உட்பட வெறும் 13 வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், 10 ஓட்டுகள் பெற்று ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியிருக்கிறார் ராஜேஸ்வரி. தேர்தலையே புறக்கணித்தவர்கள், அவரை தலைவராக ஏற்பது எளிதில்லை. தன்னுடைய பணியால் எதிர்ப்பாளர்களின் இதயங்களையும் வென்றால் அது பெண்களுக்கான வெற்றியாக மட்டுமல்லாமல், சாதிய ஒழிப்பிலும் ஒரு மைல்கல்லாக இருக்கும்.

விசாலாட்சி
விசாலாட்சி

விசாலாட்சி

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராகியிருக்கிறார் 82 வயது இளம்புயல். மூன்று முறை வெள்ளக்கோயில் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், ஒருமுறை ஊரகத் தொழிற்துறை அமைச்சராகவும் இருந்த துரை.ராமசாமியின் மனைவி இவர். பல ஆண்டுகள் அரசியல் கரைகண்ட குடும்பம், என் கணவரின் நற்செயல்கள் மக்களின் அபிமானம் ஆகியவையே தன்னை வெற்றிபெறச் செய்தது என்று நம்பும் இவர், தன் பங்குக்கு மக்கள் பணியாற்றத் தயாராகிவிட்டார்.

சரஸ்வதி
சரஸ்வதி

சரஸ்வதி

முன்னாள் அரசு துப்புரவுப் பணியாளர். இன்று விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர். “குப்பைகளைத் துப்புரவு செய்யச் சொல்றவங்க அவரவர் மனசுல இருந்து ஏற்றத்தாழ்வைத் துப்புரவு செய்ய மாட்டாங்க” எனத் துப்புரவுத் தொழிலாளியாகத் தான்பட்ட அவமானங்களையும், அது கற்றுத்தந்த பாடங்களையும் உந்துசக்தியாகக்கொண்டு, தன்னுடைய அரசுப் பணியை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.

சந்தியா ராணி
சந்தியா ராணி

சந்தியா ராணி

மிகச் சிறிய வயதில் கிருஷ்ணகிரி மாவட்டம் காட்டிநாயக்கன்தொட்டிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியிருக்கிறார் சந்தியா ராணி. பி.பி.ஏ இளங்கலை பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு மாணவி இவர். தன்னை எதிர்த்தவரை விடவும் 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை நம்பிய மக்களுக்குச் சிறப்பாகப் பணி செய்வேன் என்று உறுதி தரும் சந்தியா, ‘‘என்னைப்போன்ற இளையோர் அரசியலுக்கு வர வேண்டும்’’ என்கிறார்.

சரண்யா
சரண்யா

சரண்யா

மாற்றுத்திறனாளி, பட்டியலின சமூகப் பின்னணி எனச் சற்று கடினமான தடைகளைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கும் சரண்யாவுக்கு 21 வயது. எம்.ஏ தமிழ் முதலாம் ஆண்டு மாணவியான இவர்தான், இப்போது பொள்ளாச்சி மாவட்டம் - ஆனைமலை யூனியன் ஆத்துப்பொள்ளாச்சி பஞ்சாயத்து வார்டு உறுப்பினர். பல பெண்களுக்கு உத்வேகமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் இவரது வெற்றி, இவருக்கான தனிப்பட்ட வெற்றி அல்ல என்பதே நிஜம்.

முன்னேற்றம் என்பது பதவிகளை அடைவதில் அல்ல. அதன் முழுப்பொறுப்பையும் ஏற்று, அதிகாரத்தைச் செயல்படுத்துவதுதான். அப்பாக்களும் அண்ணன் தம்பிகளும் கணவர்களும் கழகத் தலைவர்களும் இவர்களை கைப்பொம்மைகளாக வைத்துக் கொண்டு, அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்தாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும்போதுதான் இந்த 50 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஒரு நியாயம் கிடைக்க முடியும்.