Published:Updated:

‘ஊட்டச்சத்துத் தோட்டம்’ இருந்தால் சத்துப் பற்றாக்குறை இருக்காது!

கவிதா ராமு, எம்.எஸ்.சுவாமிநாதன், பவானி, தனலட்சுமி
பிரீமியம் ஸ்டோரி
News
கவிதா ராமு, எம்.எஸ்.சுவாமிநாதன், பவானி, தனலட்சுமி

நாட்டு நடப்பு

ஜெ.லெவின்

வ்வோர் ஆண்டும் அக்டோபர் 16-ம் தேதி, ‘உலக உணவு தினமா’கக் கொண்டாடப்பட்டுவருகிறது. கடந்த அக்டோபர் 16-ம் தேதி சென்னை தரமணியிலுள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் உலக உணவு தினக் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய ஒங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் இயக்குநர் கவிதா ராமு ஐ.ஏ.எஸ், “இந்தியாவிலேயே முதன்முறையாக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழகம்தான். நம் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு பெண்களுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும்; ஆண்களுக்கு 14 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும்; சராசரியாக 11 சதவிகிதத்துக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பான்மையோருக்கு இந்த அளவுகளில் இருப்பதில்லை. அதனால்தான் உடல் நலிவுற்ற காலங்களிலும், கர்ப்பக்காலங்களிலும் ஊட்டச்சத்து மாத்திரைகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய தினை, வரகு, குதிரைவாலி, பச்சைப் பயறு, கொண்டைக்கடலை ஆகியவற்றிலேயே ஊட்டச்சத்துகள் இருக்கின்றன. இவற்றைச் சாப்பிட நாம்தான் ஆர்வம் காட்ட வேண்டும்” என்றார்.

கோபிநாத்
கோபிநாத்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த முனைவர் பவானி, “உலக அளவில் 820 மில்லியன் பேர் பசியால் வாடுகிறார்கள். இரண்டு பில்லியன் பேர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம். இந்திய விவசாயத்தில் 85 சதவிகிதம் சிறு, குறு விவசாயிகள்தான் இருக்கின்றனர். அதிக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவதில்லை. சிறு, குறு விவசாயிகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். காரணம், இருக்கும் குறைந்த அளவு நிலத்தில்ல் விளைவித்து, பணத் தேவைக்காக தானியங்களை முற்றிலுமாக விற்றுவிடுவதுதான். அவர்களால், அவர்கள் விளைவித்ததையே உணவாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை. அவர்களுக்காகத்தான் `நியூட்ரிஷியன் கார்டன்’ (Nutrition Garden) என்ற முறையைப் பரப்பிவருகிறோம். இதற்காக மகாராஷ்டிர மாநிலத்தில், கிராம அளவில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம். புதுச்சேரி மாநிலத்தில் ‘பயோ வில்லேஜ்’ என்ற முறையிலும் இதைத் தொடங்கியிருக்கிறோம்” என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சிறு, குறு விவசாயிகள் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்துப் பேசிய முனைவர் கோபிநாத், “முதன்மைப் பயிராகப் பயிரிடும் நிலங்களில் வரப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ ஊட்டச்சத்து கொடுக்கும் பயறு வகைகளை விதைக்கலாம். அதேபோல நல்ல வருமானம் தரும், ஊட்டச்சத்துள்ள பயிர்களை விளைவித்து வருமானம் பார்ப்பதோடு, அதை உணவுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நகர்ப் பகுதிகளில் மாடித்தோட்டங்கள் பிரபலமாவதுபோல கிராமங்களில் ஊட்டச்சத்துத் தோட்டங்கள் வளர வேண்டும்.

கவிதா ராமு, எம்.எஸ்.சுவாமிநாதன், பவானி, தனலட்சுமி
கவிதா ராமு, எம்.எஸ்.சுவாமிநாதன், பவானி, தனலட்சுமி

விவசாயிகள் தங்கள் வீடுகளின் அருகிலோ, வயலிலோ ஒன்று அல்லது இரண்டு சென்ட் அளவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை தினமும் கிடைப்பதுபோலத் தோட்டங்களை உருவாக்கிக்கொள்ளலாம். ஊட்டச்சத்து வழங்குவதில் முட்டையும் இறைச்சியும் முக்கியப் பங்காற்றுகின்றன. இதற்காக ஒன்றிரண்டு கோழிகள், ஆடுகளை வளர்த்து சத்தான உணவுத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

நிகழ்வில் மூத்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் தனலட்சுமி ஆகியோர் பேசினர். நிறைவாக ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பான ஆவணப்படமும் திரையிடப்பட்டது.