லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா

ஹர்ஷநிவேதா, ஜோதி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹர்ஷநிவேதா, ஜோதி

என் முதல் பொண்ணு வயித்துல இருக்கும்போது யோகா, வீட்டு வேலைகள் செய்றதுன்னு என்னை ஆரோக்கியமா வெச்சிருந்ததால குறிச்ச நாளுக்கு முன்னாடியே சுகப்பிரசவத்துல பிறந்துட்டா.

யோகக் கலையின் மூலம் தான் பெற்ற நன்மைகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தி, தன் மகளை உலகறியும் சாதனையாளராக மாற்றியிருக்கிறார் ஒரு தாய். தாயின் கரம்பிடித்து நடந்த அந்த மகள், இன்று பலருக்கு வழிகாட்டி யாகவும் பயிற்சியாளராகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.

விருதுநகரைச் சேர்ந்த ஹர்ஷநிவேதா, 9-ம் வகுப்பு மாணவி. சிறு வயதிலிருந்தே யோகக் கலையில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு கைகளை யும் தரையில் ஊன்றி உடலை அந்தரத்தில் நிறுத்தும் (ஸ்கேல் போஸ்) நிலையில் 2 நிமிடங்கள் 54 விநாடிகள் நின்றதற்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிளிங், ஓவியம் வரைதல், வாசித்தல், எழுதுதல், யோகா செய்தல், ரூபிக்ஸ் க்யூபை சரியாக அடுக்குதல் எனப் பல்வேறு விஷயங்களுக்காக ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘ஃபியூச்சர் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ஆசிய சாதனைப் புத்தகம், ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என சாதனை மகுடங் களைச் சூட்டிக்கொண்டே போகிறார்.

விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா

அத்தனைக்குமான விதை ஹர்ஷ நிவேதாவின் அம்மா ஜோதி போட்டது. அதை அவரே விளக்கினார்.

“என் ஸ்கூல் நாள்கள்லயே மாநில அளவில் யோகா செய்து பரிசுகள் வாங்கி யிருக்கேன். என் முதல் பொண்ணு சுகப் பிரசவமான நிலையில, அடுத்து ஒரு குழந்தை ஏழு மாசத்துல கருவுலயே இறந்திடுச்சு. அடுத்து ஹர்ஷநிவேதா பிறந்தா. ஒரு குழந்தை தவறிட்டதால அடுத்த முறையும் ஏதாவது ஆயிடக் கூடாதுன்னு கர்ப்பகாலத்துல எந்த வேலையும் செய்யாம ரெஸ்ட்லயே இருந்தேன். பிரசவ நாள் வந்தும் வலி வரல. ஏற்கெனவே நடந்த மாதிரி ஆயிடக் கூடாதுன்னு பயந்து சிசேரியன் பண்ணிட்டாங்க. சுகப்பிரசவம் ஆகணும் கறதுக்காகப் பல பெண்களுக்கும் யோகா சொல்லிக் கொடுத்த எனக்கே சிசேரியன் பண்ண வேண்டிய நிலைமை ஏற்பட்டதுதான் கொடுமை.

விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா
விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா

குழந்தையா இருந்தபோது ஹர்ஷநிவேதா பருமனா இருந்தா. அடிக்கடி உடம்பு சரியில்லாமப் போயிடும். அதனால மூன்றரை வயசுலயே யோகா கத்துக்கொடுத்தோம். அதைப் பண்ண ஆரம்பிச்சதுமே எடை குறைஞ்சு, தொற்றுப் பிரச்னை வர்றதெல்லாம் நின்னுடுச்சு” என்று சொல்லும் ஜோதி, கிருபானந்த வாரியாரால் யோகக் கலைக்குள் ஈர்க்கப்பட்டவர். இப்போது மகளுடன் இணைந்து வீட்டிலேயே குழந்தைகளுக்கு எளிய யோகப் பயிற்சிகளை இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறார்.

கட்டுரையின் நாயகி ஹர்ஷநிவேதா ‘நிக்க லோடியன்’ குழந்தைகள் சேனலில் குழந்தைகள் தினமும் யோகப் பயிற்சிகள் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ‘யோகா சே ஹி ஹோகா’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு பெருந்தொற்றுக்கு முன்பிலிருந்து தொடங்கி, இதுவரை 200 மாணவர்களுக்கு இலவசமாக யோகா வகுப்பெடுத்துள்ளார்.

விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா
விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா
விதையான அம்மா... விருட்சமான மகள்! - குட்டி யோகா சாம்பியன் ஹர்ஷநிவேதா

“யோகாவுக்கு நிகராக ரூபிக்ஸ் க்யூபிலும் கவனம் செலுத்துறேன். அடிப்படை க்யூப் அடுக்கும் முறையை இரண்டு பேர்கிட்ட நேர்ல கத்துக் கிட்டேன். வேறு வேறு வகையான க்யூபைச் சேர்க்கவும், வேகத்தை அதிகரிக்கவும் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கொலம்பியா, லண்டனிலுள்ள நிபுணர்கள்கிட்ட கத்துக் கிட்டேன். ஐ.க்யூவை அதிகரிக்க, கவனத்தை ஒருங்கிணைக்க, கணக்குப் பாடத்துல முன்னேற்றம் கிடைக்க... இப்படிப் பல விஷயங்களுக்காக நிறைய பெற்றோர் பிள்ளை களுக்கு இதைக் கத்துக்கொடுக்க விரும்புறாங்க’’ எனும் ஹர்ஷ நிவேதா, க்யூப் சேர்ப்பதில் வேகம் கூட்டுவது, க்யூப் அடுக்கக் கற்றுக்கொடுப்பது போன்றவற்றுக் கும் வகுப்புகள் எடுக்கிறார். அபாகஸ், கிடார், கீபோர்டு பயிற்சிகளை முடித்திருக்கிறார். யோகா வில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

“எல்லாக் கலைகளையும் கத்துக்கொடுக்கிற மாதிரி ஒரு இன்ஸ்டிட்யூட் உருவாக்கணும்கிறது தான் என்னோட அல்டிமேட் கோல்!” - நிறை வாகப் பேசும் ஹர்ஷநிவேதா, ஆரோக்கியமான சமுதாயத்துக்கு ரோல்மாடல்தான்.