Published:Updated:

உருவாகும் நாளைய அம்பானிகள்..! - கலக்கும் கிட்ஸ்பிரனர்கள்!

கிட்ஸ்பிரனர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
கிட்ஸ்பிரனர்கள்

பிசினஸ் என்றவுடன் பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம் என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் பதிய வைக்கக்கூடாது!

டிப்பைத் தாண்டிய ஒரு திறன், தற்போது எல்லாக் குழந்தைகளுக்கும் அறிவுறுத்தப்படும் ஒன்றாக மாறியுள்ளது. அந்த விதத்தில் குழந்தைகளின் எதிர்காலத்துக்குப் பயனுள்ள வகையில் குழந்தைகளைத் தொழில் முனைவோர் ஆக்கும் செயல்பாடுகள் தமிழகத்தில் தற்போது பிரபலமடைந்து வருகிறது. கிட்ஸ்பிரனர் என்ற குழந்தைத் தொழில்முனைவோராக உங்கள் வீட்டுக் குழந்தைகளை உருவாக்குவது எப்படி, குழந்தைத் தொழில்முனைவோருக்கு அரசு வழங்கும் சலுகைகள், பயன்கள் என்ன என்பதைப் பற்றி சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைத் தொழில் முனைவோருக்கான பயிற்சியாளர் மோகன லட்சுமி.

குழந்தையிலேயே தொழில்முனைவு..!

பொதுவாக, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வகையான திறன் இருக்கும் அல்லது சிலவற்றின் மீது ஈர்ப்பு இருக்கும். இதுபோன்ற திறமைகளை வெளிப்படுத்த குழந்தைகளைப் போட்டிகள், ரியாலிட்டி ஷோக்களுக்குப் பெற்றோர்கள் அழைத்துச் செல்வார்கள். போட்டிகளில் தோல்விகளைச் சந்திக்கும்போது குழந்தைகளின் எனர்ஜி குறையலாம் அல்லது போட்டிகளுக்குள் வரையறுக்க முடியாத ஆப் டெவலப்பிங், கேம் கிரியேட்டிங் போன்று சில திறன்கள்கூட குழந்தைகளிடம் இருக்கலாம். இதுபோன்ற திறன்களை அவர்களின் எதிர்காலத்துக்கான ஒன்றாக மாற்றுவதே குழந்தைத் தொழில்முனைவோர் என்று சொல்லப்படக்கூடிய கிட்ஸ்பிரனரின் அடிப்படை நோக்கமாகும்.

மோகன லட்சுமி
மோகன லட்சுமி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

குழந்தைகளின் பிசினஸ்..!

பிசினஸ் என்றவுடன் பணம் சம்பாதிப்பது மட்டுமே நோக்கம் என்று குழந்தைகளின் மனதில் பதிய வைக்கக் கூடாது. லாபத்தைத் தாண்டி ஒரு பிசினஸ்மேனுக்கான ஆட்டிட்டியூட், நேர மேலாண்மை, திறன்களை வெளிப்படுத்தும் பண்பு, இலக்குகளுக்காகப் போராடுதல், பணத்தின் மதிப்பை உணருதல் போன்றவற்றை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். இதன்மூலம் லாபத்துக்கான விஷயங்களை அவர்களே நாளடைவில் கற்றுக் கொள்வார்கள். 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடம் என்ன திறன் இருந்தாலும் அவர்கள் விரும்பும்பட்சத்தில் சில ஆயிரங்களை முதலீடு செய்து அதை பிசினஸாக மாற்ற இயலும். உதாரணமாக, ரங்கேஷ் என்ற 10 வயது சிறுவன் இயற்கையின்மீது அதிக ஆர்வம் கொண்டவன். அவன் விதைப் பந்துகள் தயாரிப்பை பொழுதுபோக்காகச் செய்து வந்தான். அதை மற்ற சிறுவர்களுக்கும் கொடுத்து மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தினான். அவனின் ஆர்வத்தைப் பார்த்து சிறுவனின் பெற்றோர் அவனுக்காக முதலீடு செய்து அவனின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தினர்.

பிசினஸ் ஐடியாவைக் கண்டறிவது...

உங்கள் குழந்தைகளுக்கு பிசினஸ் சார்ந்த விருப்பம் இருக்கிறதா என்பதை முதலில் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பிசினஸ் சார்ந்த நிறைய தகவல்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். ஒரு பிசினஸுக்கான மாடல் எப்படி இருக்க வேண்டும், பிசினஸின் அடிப்படை என்ன என்பதையெல்லாம் பகிர்ந்து அவர்களின் வாடிக்கையாளர்கள் யார், எந்த தளத்தைப் பயன்படுத்தப்போகிறார்கள் போன்றவற்றை அவர்களையே சிந்திக்க வைத்து முடிவு எடுக்க வையுங்கள்.

அதன்பின் அவர்களின் ஆர்வம் (passion) சார்ந்தவற்றைப் பட்டியலிடுங்கள். அதில் அவர்களின் திறனை எதில் முழுவதுமாக வெளிப்படுத்த முடியும் என்பதைப் பொறுத்து பிசினஸுக்கான ஐடியாவைக் கண்டறியலாம்.

‘‘இதுவரை என் ஆப்பை 10,000 பேர் டவுன்லோடு செஞ்சிருக்காங்க. 10 லட்சம் பேர் டவுன்லோடு பண்ணணும் என்கிறதுதான் என் ஃப்யூச்சர் பிளான்!’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதலீடுகள் எப்படி?

குழந்தைகளுக்கு ஆர்வம் இருக்கும்பட்சத்தில் சில ஆயிரம் ரூபாய்களைப் பெற்றோர்கள் முதலீடு செய்யலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் பல குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்கப்படுத்த அவர்களே முதலீடு செய்ய விருப்பப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு நிறுவனத்தையோ, ஃபோரமையோ தொடர்புகொண்டு முதலீடு பெறலாம்.

உருவாகும் நாளைய அம்பானிகள்..! - கலக்கும் கிட்ஸ்பிரனர்கள்!

குழந்தைகள் அடையும் பயன்கள்

குழந்தைகள் விரும்பும் ஒன்றை பிசினஸாக மாற்ற பெற்றோர்கள் ஊக்கப்படுத்தலாம். குழந்தைகளுக்கு பிசினஸ் பயிற்சி வழங்க இந்தியாவில் சில நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கோர்ஸ்களில் சேர்க்க விரும்பாத பெற்றோர்கள் எனில், உங்களின் வழிகாட்டு தலுடன் செயல்பட குழந்தைகளை அனுமதிக்கலாம். படிப்பு சார்ந்த நேரம் போக மீதியிருக்கும் நேரத்தை மட்டுமே பிசினஸுக்காக ஒதுக்குவார்கள் என்பதால், படிப்பில் கவனச் சிதறல் ஏற்படும் என்ற கவலை வேண்டாம். ஒரு பிசினஸை சிறு வயதிலேயே செய்துவரும் குழந்தைகளின் நம்பிக்கை அளவு எதிர்காலத்தில் பல மடங்காக இருக்கும். அவர்கள் யாரையும் சார்ந்து இருக்க வேண்டும் என்ற தேவையோ, ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை தேடிக்கொள்ள வேண்டிய நிர்பந்தமோ இல்லாமல் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இடத்தில் நிச்சயம் இருப்பார்கள்.

அரசு உதவிகளும் கிடைக்கும்..!

குழந்தைகள் பிசினஸ் சார்ந்து முழுவதுமாக தனிப்பட்ட முறையில் இயங்கினாலும், அரசின் சட்டதிட்டங்களின்படி, ஒரு நிறுவனத்தைக் குழந்தைகளின் பெயரில் பதிவு செய்ய இயலாது. ஆனால், சிறுவயதில் தொடங்கும் தொழிலை அவர்களின் கல்லூரி வரை கொண்டு செல்கிறார்கள் எனில், அரசின் உதவிகளைப் பெற இயலும்’’ என்றார். அவர் பேசியதைத் தொடர்ந்து, குழந்தைத் தொழில்முனைவோரான கெளதீஷுடன் பேசினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10,000 பேர் செய்த டவுன்லோடு..!

‘‘எனக்கு அக்கவுன்ட்ஸ்னா ரொம்ப பிடிக்கும். அதனால் அதற்கான ஒரு ஆப் தயார் பண்ணணுங்கிற ஆசை வந்துச்சு. ஆப் டெவலப்பிங்கில் அட்வான்ஸ் கோர்ஸ்கள் கத்துகிட்டு டிரெயின் ஆயிட்டேன். என்னுடைய ஆப்பில் என்னென்ன விஷயங்கள் வேண்டும் என முதலில் பட்டியலிட்டேன். என் ஃபிரெண்ட்ஸ்கிட்டேயும் ஐடியாஸ் கேட்டேன். நிறைய முறை பிளான் பண்ணதுக்கு அப்புறம்தான் ‘மைலாட் ஆப்’ உருவாச்சு. இந்த ஆப்பின் ஸ்பெஷலே நம்முடைய சேமிப்பையும் இதில் நோட் பண்ணி வச்சுக்க முடியும்.

ரங்கேஷ்
ரங்கேஷ்

ஆப்பை உருவாக்கி முதலில் அப்பாகிட்ட காட்டினேன். யூஸ் பண்ணி பார்த்துட்டு, நிஜமா பயனுள்ளதாக இருக்குனு பாராட்டினார். அப்புறம் ஃபிரெண்ட்ஸ், டீச்சர்னு சிலரிடம் \ஒப்பினியன் கேட்டேன். எல்லாரிடம் இருந்தும் பாசிட்டிவ் கமென்ட்ஸ் வரவே, போன வருஷம் ஆப்பை லான்ச் பண்ணேன். இதுவரை 10,000 பேர் என் ஆப்பை டவுன்லோடு செஞ்சிருக்காங்க” என்ற கெளதீஷ், தாய்லாந்து முதலீட்டாளர்கள் கூட்டம் பற்றிப் பேசினார்.

“தாய்லாந்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆசிய ஆளவிலான முதலீட்டாளர்கள் கூட்டம் நடந்தது. என்னுடைய ஆப்புக்கு இன்வெஸ்ட்மென்ட் வாங்க நான் இந்தியாவின் சார்பாகக் கலந்துக்கிட்டேன். ரூ.3 லட்சம் முதலீடும் கிடைச்சுது. இப்ப அடுத்தகட்டமாக ஆப்பிள் போனில் என்னுடைய ஆப்புக்கான மென்ட்டார்ஷிப் கிடைச்சிருக்கு. மைலாட் ஆப்பில் 2.0 டெவலப்பிங் பண்ணியிருக்கேன். அது ரிவியூவில் இருக்கு. என் ஆப்பை மில்லியன் நபர்களை டவுன்லோடு பண்ண வைக்கிறதுதான் என் ஃப்யூச்சர் பிளான்’’ என்றார் கெளதீஷ்.

கெளதீஷ்
கெளதீஷ்

அதிகமான மரங்களை வளர்க்கணும்

அடுத்து ரங்கேஷுடன் பேசினோம். ‘‘நான் இரண்டாம் வகுப்பு படிக்கிறப்ப அரையாண்டு விடுமுறையில் அம்மா என்னையும் என் தங்கச்சியையும் ஒரு இயற்கை விவசாயி அய்யாகிட்ட கூட்டிட்டுப் போய், விதைப் பந்துகள் தயாரிக்கக் கற்றுக் கொடுத்தாங்க. விதைப்பந்துகள் தயாரிக்கத் தேவையான வளம் மிகுந்த மண் மற்றும் விதைகளை அந்த விவசாயி ஐயாகிட்ட இருந்து வாங்கினோம். புங்கை, வேம்பு, ஆமணக்கு போன்ற விதைகளைப் பயன்படுத்தி, விதைப்பந்துகள் தயார் செய்து, எங்கள் வீட்டில் நட்டு வைத்து, முதலில் டிரையல் செய்து பார்த்தோம். செடிகள் ஆரோக்கியமாக வளர்ந்தது.

நாங்க தயார் செய்த விதைப்பந்துகளை எங்க ஃபிரெண்ட்ஸுக்கும் கொடுத்து, அவங்க வீடு, தெருக்களிலும் மரம் வளர்க்க ஊக்கப் படுத்தினோம். அடுத்தகட்டமாக அரசுப் பள்ளி களில் விதைப்பந்துகளைக் கொடுத்தோம். ஆயிரக்கணக்கில் விதைப் பந்துகள் தயாரிக்கும் போது, உரம் மற்றும் விதை வாங்க அதிகம் பணம் தேவைப்பட்டதால, சில இடங்களில் ஸ்டால்கள் அமைத்து எங்க விதைப்பந்துகளை விலைக்கு விற்றோம். அதில் கிடைச்ச தொகையைப் பயன்படுத்தி இன்னும் அதிகமான விதைப்பந்துகள் தயார் செய்தோம். இப்ப சில இடங்களிலிருந்து ரிட்டன் கிஃப்ட்ஸ்க்காக விதைப் பந்துகளைக் கேட்டு வர்றாங்க. நிறைய விதைப் பந்துகள் கேட்டதால நானும் என்னுடைய தங்கச்சியும் ஃபிரெண்ட்ஸ் களோட சேர்ந்து செய்ய முடிவெடுத்தோம். என் பிளான் பணம் சம்பாதிக்கிறதில்ல. மரம் வளர்ப்பை அதிகப்படுத்துறதுதான். அதனால லாபம், பத்தியெல்லாம் நான் கவலைப்படுறது இல்லை’’ என்றார் ரங்கேஷ்.

உங்கள் வீட்டிலும் ஒரு அம்பானி இருக்கலாம். கண்டுபிடியுங்கள்!