Published:Updated:

``அடித்துத் துன்புறுத்தினார்!" - மிஸ்டர் வேர்ல்டு பட்டம் வென்ற மணிகண்டன் மீது காதலி புகார்!

`` மேலும், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டியும், கொடூரமாக தாக்கியும் மனதளவிலும், உடலளவிலும் என்னை மிகவும் காயப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருக்கிறார்!'

மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் என்பவர் தன்னை அடித்துத் துன்புறுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வருவதாக புகார் ஒன்றை அளித்திருக்கிறார் சந்தியா என்கிற பெண்.

சந்தியா
சந்தியா

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர், சந்தியா மோகன். இவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ``கடந்த 2019-ஆம் ஆண்டு சமூக வலைதளம் மூலமாக காட்டுப்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் மணிகண்டன் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவர் என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தொடர்ந்து என்னுடன் பழகி வந்தார். நாங்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வைத்து என்னை மிரட்டி வந்தார்.

சந்தியா
சந்தியா

மேலும், என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டியும், கொடூரமாகத் தாக்கியும் மனதளவிலும், உடலளவிலும் என்னை மிகவும் காயப்படுத்தினார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

போலீசார் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட மணிகண்டனை விசாரணைக்காக அழைத்து வந்து விசாரித்த போது அவர் மிரட்டியது தெரியவந்ததை அடுத்து பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்டு விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

மணிகண்டனுடன் சந்தியா
மணிகண்டனுடன் சந்தியா

இந்த விஷயம் தொடர்பாக சந்தியா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவரிடம் இதுகுறித்துப் பேசசினோம். ``தற்போது இதுகுறித்து புகாரளித்துள்ளேன் விரைவில் முழு தகவலை எனது சார்பாக வெளியிடுவேன்" என்றார். சமூகவலைதளங்களில் பலரும் சந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு