Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல்: 16 நாள் கைக்குழந்தையுடன் வேட்புமனு தாக்கல் செய்த பெண்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த சுஜித்ரா
உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்த சுஜித்ரா

மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அங்குள்ள வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அதிக ஆர்வம்காட்டினார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நெல்லை மாவட்டத்தில் வரும் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. மாவட்டத்திலுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள வார்டு கவுன்சிலர்கள், கிராம ஊட்ராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 2,069 இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்

மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 43 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அங்குள்ள வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு அதிக ஆர்வம்காட்டினார்கள்.

மானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கானார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 22 வயது பொறியியல் பட்டதாரிப் பெண்ணான அருள் பிரியா என்பவர், தனது தாய், தந்தையுடன் வந்து இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

சுஜித்ரா
சுஜித்ரா

மானூர் ஒன்றியத்துக்குட்பட்ட மதவகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரஸ்தா பகுதியைச் சேர்ந்த சுஜித்ரா என்பவர் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக அவர் இன்று பிறந்து 16 நாள்களான கைக்குழந்தையுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் பேசிய சுஜித்ரா, ``மதவகுறிச்சி கிராமத்து மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. என்னை மக்கள் தேர்வு செய்தால் குடிநீர்த் தேவை, சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு