Published:Updated:

"6 வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தேன், ஆனால்!"- DNA சோதனையில் இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

DNA சோதனையால் புலம்பும் இளம்பெண் ( Image by Free-Photos from Pixabay )

இளைஞர் ஒருவருடன் 6 வருடங்கள் லிவிங் டுகெதரில் ஒன்றாக வாழ்ந்துவந்த இளம்பெண்ணுக்கு, அந்த இளைஞர் தன்னுடைய சகோதரர் என்ற விஷயம் தெரியவர அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

"6 வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தேன், ஆனால்!"- DNA சோதனையில் இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

இளைஞர் ஒருவருடன் 6 வருடங்கள் லிவிங் டுகெதரில் ஒன்றாக வாழ்ந்துவந்த இளம்பெண்ணுக்கு, அந்த இளைஞர் தன்னுடைய சகோதரர் என்ற விஷயம் தெரியவர அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

Published:Updated:
DNA சோதனையால் புலம்பும் இளம்பெண் ( Image by Free-Photos from Pixabay )

இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்துகொள்ளாமலே, ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது, அதாவது லிவிங் டுகெதர் (living together) என்பது சாதாரணமான ஒன்றாக மாறிவருகிறது. இதை கலாசார மாற்றம் என்று பலர் ஏற்க மறுத்தாலும்கூட, திருமணம் என்பதே ஒருவரையொருவர் புரிந்துகொண்டு சேர்ந்து வாழ்வதுதான். இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் மனக்கசப்பு ஏற்படும்போது, கணவன் மனைவி இருவருமே திருமணம் செய்துவிட்டோமே என்ற நிர்ப்பந்தத்தில் தானே அதை சகித்துக்கொண்டு கடக்கிறார்கள். ஆனால் லிவிங் டுகெதரில் அப்படியில்லை அல்ல என்று ஒரு தரப்பினரும் கூறிவருகின்றனர்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Marcelo Chagas from Pexels

இந்த நிலையில், இளைஞர் ஒருவருடன் 6 வருடங்கள் லிவிங் டுகெதரில் ஒன்றாக வாழ்ந்துவந்த இளம்பெண்ணுக்கு, அந்த இளைஞர் தன்னுடைய சகோதரர் என்ற விஷயம் தெரியவர அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் Reddit என்ற வலைதளப் பக்கத்தில், ``எனக்கு தற்போது வயது 30, என் சகோதரனுக்கு வயது 32. இதை டைப் பண்ணும்போதுகூட பெரும்பாலான நேரங்களில் அவரை என் காதலன் என்றே அழைக்கிறேன். இதைப்பற்றித் தெரிந்தபின்பு நான் மிகவும் விசித்திரமாக உணர்கிறேன். குழந்தையிலேயே நான் தத்தெடுக்கப்பட்டவள். ஆனால், உயர்நிலைப்பள்ளி படிக்கும் வரை இந்த உண்மை எனக்குத் தெரியாது. என் காதலரும் சிறுவயதிலேயே தத்தெடுக்கப்பட்டவர்தான். இதுதான் நாங்கள் இணைந்ததற்கான முக்கியமான விஷயம்.

couples
couples
pixabay

நாங்கள் இருவருமே அதிர்ஷ்டசாலிகள். மேலும், நல்ல குடும்பங்களைக் கொண்டிருந்தோம். எங்களுக்குள்ளான உறவென்பது அன்றும் சரி, இன்றும் சரி சிறப்பாகவே உள்ளது. நாங்கள் ஒருவரையொருவர் மிகச் சீக்கிரமாகவே புரிந்துகொண்டோம். 6 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த நாங்கள், ஒரு தம்பதி செய்யக்கூடிய அனைத்தையும் செய்துள்ளோம். ஒருவருக்கொருவர் நாங்கள் காதலித்துக்கொண்டோம், உடலுறவு வைத்துக்கொண்டோம். நாங்கள் இருவரும் குழந்தைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டதில் இப்போது நான் மகிழ்ச்சியடைகிறேன்.

லிவிங் டுகெதர் - Couple (Representational Image)
லிவிங் டுகெதர் - Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels

ஒருகட்டத்தில் எங்கள் வம்சாவளியைத் தெரிந்துகொள்வதற்காக, டி.என்.ஏ சோதனை செய்துகொண்டோம். முடிவுகள் வருவதற்கு ஒருமாதம் ஆனது. என்னவாக இருக்கும் என்பதை அறிவதற்கு மிகவும் ஆவலாக இருந்தேன் நான். ஆனால், நாங்கள் இருவரும் சகோதர, சகோதரி என்று அதில் தெரியவர, உண்மையில் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன் நான். ஆனால், இதை என் காதலனிடம் இன்னும் சொல்லவில்லை. இது என்னைப் பயமுறுத்துகிறது, நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. இன்னும்கூட நான் அவரை நேசிக்கிறேன். இந்த சோதனை தவறானது எனது தோன்றுகிறது. விரைவில் மீண்டும் சோதனையைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். மேலும் இன்றும் அவரை, என் வாழ்வில் காதலனாகவே நான் பார்க்கிறேன்" எனத் தான் பதிவிட்ட போஸ்ட்டில் கூறியிருக்கிறார்.

இளம்பெண்ணின் பதிவு தொடர்பாக பலரும் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.