Published:Updated:

திருவாரூர்: வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு! - கத்தியால் கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை

அகமது பைசல்
News
அகமது பைசல்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையிலுள்ள கல்கேணித்தெரு காதர்முகைதீன் காலனியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். இவரின் மகன் அகமது பைசல். 28 வயது இளைஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே தந்தை அப்துல் ரஹ்மான் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதால், அகமது பைசல் தனது தாய் ஹலீமா பானுவுடன் வசித்துவந்திருக்கிறார். அவ்வப்போது கூலி வேலைக்குச் சென்று வருமானம் ஈட்டிவந்த அப்துல் பைசலுக்கு அதில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. நிறைவான வருமானத்துடன் எதிர்பார்த்த நிரந்த வேலை கிடைக்காததால், மிகுந்த மன உளைச்சலில் அவர் இருந்துவந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில்தான் அப்துல் பைசல் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அப்துல் பைசலின் விபரீத முடிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இவரின் தாய் ஹாலிமா பானு அப்போது காப்பாற்றியிருக்கிறார்.

திருவாரூர்: வேலை கிடைக்காத விரக்தியில் விபரீத முடிவு! - கத்தியால் கழுத்தை அறுத்து இளைஞர் தற்கொலை

இந்த நிலையில், ஹலிமா பானு தன் உறவினரை அழைத்துவர வெளியில் சென்றிருந்தபோதுதான், அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த அகமது பைசல், மீன் வெட்டும் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, முத்துப்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த முத்துப்பேட்டை நகர துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, ஆய்வாளர் பெருகவாழ்ந்தான் சிவபிரகாசம், காவலர்கள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த அகமது பைசல் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz