காவிரி, அமராவதி, நொய்யல் உள்ளிட்ட பல ஆறுகள் கரூரையொட்டிப் பாய்ந் தாலும், இங்குள்ள 70% பகுதிகள் வறட்சி மிகுந்த வானம் பார்த்த பூமியாக உள்ளது.

ஆனாலும், தொழில் வளர்ச்சியில் கரூர் மாவட்டம் சிறப்பாகவே விளங்குகிறது. கரூரில் உள்ள ஜவஹர் பஜார், கோவை சாலை, செங்குந்தபுரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், வையாபுரி நகர், இரண்டு தொழில் பேட்டைகள், மதுரை பைபாஸில் உள்ள மொத்த மண்டிக்கடைகள் எனக் கரூர் நகர மார்க்கெட் என்பது பரவலாக விரிந்து, தனி சாம்ராஜ்ஜிய மாக விளங்குகிறது.

எல்லாம் கிடைக்கும் ஜவஹர் பஜார்...

கரூரின் சந்தை நிலவரம் குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின், கரூர் மாவட்டச் செயலாளர் வெங்கட்ராமனிடம் பேசினோம்.

“கரூர் மாவட்டம் வணிகம் நிறைந்த மாவட்டம் என்பதற்கு கரூரைத் தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பட்டு, இப்போது உலகெங்கும் எண்ணற்றக் கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் லக்ஷ்மி விலாஸ் வங்கியும், கரூர் வைஸ்யா வங்கியுமே சரியான சாட்சி. திருமணத்துக்குத் தேவையான நகைகள், ஃபர்னிச்சர், பண்ட பாத்திரங்கள், பட்டுப்புடவை, சேலை, ரெடிமேட் உடைகள், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள், உணவு சமைக்கத் தேவையான அரிசி எனப் பல பொருள்களையும் வாங்க, ஜவஹர் பஜாரை வலம் வந்தாலே போதும். ஒருமணி நேரத்தில் வாங்கி வீட்டுக்குக் கிளம்பிவிடலாம்.

அதேபோல், வீட்டு உபயோகப் பொருள்களை விற்கிற ஹார்டுவேர், பைப், கட்டடக் கட்டுமானப் பொருள்களை விற்கும் கடைகள் என்று 200 கடைகள் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா தொடங்கி, கோவை பைபாஸ் மேம்பாலம் வரை இருக்கின்றன. ‘எதை எடுத்தாலும் பத்து ரூபாய்’ என்று சகாய விலையில் கூவி விற்கிற சிறு கடைகளும் இங்கே அதிகம். ஜவஹர் பஜார் தொடங்கி மேற்கே கோவை பைபாஸ் மேம்பாலம் வரை உள்ள சிறு கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும் சேர்த்து, தினமும் சுமார் ரூ. 25 கோடி அளவிலான வர்த்தகம் நடக்கிறது.

அதேபோல், கரூர் மாரியம்மன் கோயிலைச் சுற்றி, பத்துக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ஐந்து சட்னிகள் வழங்கி மக்களை கவர்ந்திழுக்கின்றன. தவிர, பால் உற்பத்தி மற்றும் மோர், தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா உற்பத்தியும் இங்கே சிறப்பாக நடக்கின்றன. சின்னாண்டாங்கோயில் பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பழைய இரும்புக் கடைகள் இயங்கி வருகின்றன. பழைய இரும்புப் பொருள்களை இங்கே விற்கவும் வாங்கவும் முடியும்.

அதேபோல், மதுரை பைபாஸ் சாலையில் இயங்கிவரும் மொத்த மண்டியில் 30 கடைகள் இயங்கி வருகின்றன. விவசாயிகள் கொண்டுவரும் கடலை, எள், மிளகாய், கம்பு, உளுந்து போன்ற தானியங்கள் இங்கே மொத்தமாக விற்பனை செய்யப்படுகின்றன. இங்கே வெளிமாவட்ட வியாபாரிகள் தானியங்களை வாங்கிச் செல்கிறார்கள். வாரத்துக்கு ரூ.6 லட்சம் வரை இங்கே வர்த்தகம் நடக்கிறது.

1,000 கோடி புரளும் பஸ் பாடி தொழில்...

காய்கறிகள் வாங்க காமராஜ் மார்க்கெட்டும், திருச்சி சாலையில் உழவர் சந்தையும் இயங்கி வருகிறது. கரூர் நகரைச் சுற்றி, 45 பஸ்பாடி கட்டும் நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்தியாவிலேயே பஸ்பாடி கட்டும் தொழிலில் கரூர்தான் பிரபலம். ஆம்னி பஸ், மினி பஸ், ரூட் பஸ், கேரவன், ஸ்பெஷல் டைப் பஸ், டிராவலர் வேன் என்று பல வாகனங்களுக்கும் இங்கே சிறப்பாக பாடி கட்டித் தரப்படுகிறது. அனைத்து கம்பெனிகளிலும் சேர்த்து வருடத்துக்கு ரூ.1,000 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது” என்றார்.

ஏற்றுமதியாகும் வீட்டு உபயோகத் துணிகள்...

கரூரில் தயாராகும் வீட்டு உபயோகத்துணிகள் உலகப் பிரசித்திபெற்றது. அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப் படுகிறது. இது குறித்து, ‘இமேஜ் ஸ்டைல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ஏற்றுமதியாளருமான அஜய் பிரசாத்திடம் பேசினோம்.

“கரூர் டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தி தொழில் பாரம்பர்யமிக்கது. 1955-ல் உள்ளூர்த் தொழிலாகத் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, கரூரில் உற்பத்தியான வீட்டு உபயோகத் துணிகளை, டெல்லி கம்பெனிகள் கொடுக்கும் வெளிநாட்டு சப்-ஆர்டர்களுக்குத் துணிகளை அனுப்பியிருக் கிறார்கள். ஆனால், 1990-கள்ல கரூர் ஏற்றுமதியாளர்களே நேரடியாக வெளிநாடுகளுக்குத் துணிகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டார்கள். இப்போது, வீட்டு உபயோகத் துணிகள் ஏற்று மதியில் இந்திய அளவில் கரூர் முதன்மையாக உள்ளது. பெட்ஷீட், ஜன்னல் திரைச் சீலைகள், கையுறைகள், கிச்சன் உடைகள், தலையணை உறைகள், நாற்காலி உறை, குளியலறை டவல், கிச்சன் டவல் என்று பல வீட்டு உபயோகத் துணிகள் இங்கே உற்பத்தி செய்யப் படுகின்றன. செங்குந்த புரம், காமராஜபுரம், ராமகிருஷ்ணபுரம், வையாபுரிநகர் உள்ளிட்டப் பகுதிகளில் 500 வீட்டு உபயோகத் துணிகள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதே போல், 500 ஏற்றுமதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

ஏற்றுமதி மட்டு மல்ல, உள்ளூர் தேவைக்கும் சில்லறை யாகவும், மொத்த மாகவும் இந்த நிறுவனங்களில் துணிகளை வாங்க முடியும்.

அமெரிக்கா, ஸ்பெயின், போலந்து, பின்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, லண்டன், நியூசி லாந்து, பெரு, சிலி, அர்ஜெண் டினா, பிரேசில், தென் கொரியா என்று பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரை அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறோம்” என்றார்.

பூஜை பொருள்கள், கோயில் கலசங்கள்...

ஜவஹர் பஜாரில் ‘ஸ்ரீ சரவணா கிச்சன் வேர்ஸ்’ என்ற பெயரில் பாத்திரக்கடை நடத்தி வருபவரும், ஜே.ஐ.பி 2.0 அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரவணனிடம் பேசினோம்.

“நான் நாலு வருஷமா பாத்திரக்கடை நடத்தி வருகிறேன். சில்வர் சேலம் ஸ்டீல் அங்கீகாரம் பெற்ற டீலர் நான். அதனால், தரமான பித்தளைப் பாத்திரங்கள், பூஜைப் பொருள்கள், குத்து விளக்குகள், சாமி சிலைகள், செம்பு பூஜைப் பொருள்கள் மற்றும் பாத்திரங்கள், கோயில் கலசங்கள், வெல்டிங் இணைப்பு இல்லாத செம்பு, சில்வர் பாத்திரங்கள், மண் பானைகள், கல் பாத்திரங்கள், இரும்பு பாத்திரங்கள், வார்ப்பு இரும்புப் பாத்திரங்கள், வெண்கலப் பாத்திரங்கள், மர ஜாடிகள், மரத்திலான கைவினைப் பொருள்கள், மர ஜூவல் பாக்ஸ், மரத்திலான மொபைல் ஸ்டான்ட், குக்கர், மிக்ஸி, பால் குக்கர், பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்கள் என்று பல பொருள்களை விற்பனை செய்கிறோம்.

ஜவஹர் பஜாரில் மட்டும் தினமும் ரூ.1 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது’’ என்றார்.

கரூரில், குறைந்த விலையில் நிறைவாகப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால், மக்கள் ‘நீ முந்தி நான் முந்தி’ என்று பொருள்களை வாங்குவதில் வியப்பே இல்லை!

ரூ.100 கோடி வருமானம் தரும் கொசுவலை!

கரூரில் 150 கொசுவலை கம்பெனிகள் இயங்கி வருகின்றன. “கொசுவலை உற்பத்தி கம்பெனிகள் கரூரில் உள்ள இரண்டு தொழில் பேட்டைகள், பசுபதிபாளையம், ராமாக்கவுண்டனூர், பஞ்சமாதேவி என்று பல இடங்களிலும் உள்ளன. நேரடியாக 10,000 பேரும் மறைமுகமாக ஒரு லட்சம் பேரும் கொசுவலை கம்பெனிகளால் பலன் அடைகின்றனர். குறைந்தபட்சம் மீட்டர் ரூ.6-லிருந்து அதிகபட்சம் ரூ.15.50 மதிப்பு வரை கொசுவலைகளை விற்கிறோம். கொசுவலை கம்பெனிகள் மூலம் மாதம் ரூ.100 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது” என்றார் பாரம்பர்ய கொசுவலை உற்பத்தியாளர்கள் சங்க துணைத் தலைவர் செங்குட்டுவன்.

பிட்ஸ்

சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்த பிரைவேட் ஈக்விட்டி / வென்ச்சர் கேப்பிட்டல் முதலீடு 2020-ல் ஏறக்குறைய 72% அளவுக்கு குறைந்துள்ளது!