Published:Updated:

பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

தேனி வாரச் சந்தை!
பிரீமியம் ஸ்டோரி
தேனி வாரச் சந்தை!

AREA MARKET

பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

AREA MARKET

Published:Updated:
தேனி வாரச் சந்தை!
பிரீமியம் ஸ்டோரி
தேனி வாரச் சந்தை!
பொள்ளாச்சிச் சந்தைக்குப் பிறகு, தேனிச் சந்தை தான் தமிழகத்தின் இரண்டவது பெரிய வாரச் சந்தையாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் நடந்துவந்த தேனி வாரச் சந்தை, கடந்த சில ஆண்டுகளாக, சனிக் கிழமைதோறும் இயங்கி வருகிறது. கம்பம், சின்னமனூர், பாளையம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் எனத் தேனி மாவட்டத்தில் உள்ள முக்கியப் பகுதிகளில் விளைவிக்கப் படும் விளைபொருள்கள், தேனி வாரச் சந்தைக்குக் கொண்டுவரப் பட்டு, மதுரை, கோவை, சென்னை மட்டுமல்லாமல், கேரளாவிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

அன்று பருத்திச் சந்தை...

“தேனியில் கம்பம் சாலை, பெரியகுளம் சாலை, மதுரை சாலை ஆகிய மூன்று சாலைகளும் சந்திக்கும் இடம் முக்கூட்டுச் சாலை என்பார் கள். சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பருத்தியை ஒரே இடத்தில் சந்தைப்படுத்த முக்கூட்டுச் சாலைதான் சரியான இடமாக இருந்தது. அதனால், அந்த இடத்தில் மிகப் பெரிய பருத்திச் சந்தை உருவானது. அந்தப் பருத்திச் சந்தையையொட்டி வியாபாரிகள் குடியேற ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாகத் தேனி நகர் உருவானது. நான் பருத்தி வியாபாரத்தில் நான்காவது தலைமுறை” எனப் பேச ஆரம்பித்தார் கே.எஸ்.கே நடேசன்.

பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

“மாட்டு வண்டிகளில் பருத்தியை ஏற்றிக்கொண்டு சந்தைக்கு வருவார்கள். வாரம் ஒருமுறை நடக்கும் அந்தச் சந்தைக்கு பல இடங்களிலிருந்து வியாபாரிகள் வருவார்கள். தரத்தின் அடிப் படையில், தேனி பருத்திக்கு ஆங்கிலேயர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். நல்ல பருத்தி விளைச்சலால் தேனியைச் சுற்றி நாற்பதுக்கும் மேற்பட்ட பஞ்சாலை கள் செயல்பட்டு வந்தன.

பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

பருத்தி விதையிலிருந்து எண்ணெய் எடுக்கும் ஆலைகளும் செயல்பட்டு வந்தன. ஒரு சந்தை, பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் கொடுத்தது. காலப்போக்கில் பருத்திச் சாகுபடி குறைந்து, காய்கறி, பருப்புச் சாகுபடி அதிகரித்தது. சந்தைக்குப் பருத்தியின் வரவு குறைந்தது. காய்கறி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் விற்பனை யால், தேனி வாரச் சந்தையும் பருத்தியிலிருந்து காய்கறிக்குத் தன்னைத்தானே உருமாற்றிக் கொண்டது” என்றார்.

பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

மளிகைப் பொருள் சந்தை...

சந்தையில் பலசரக்குப் பொருள்கள் கடை வைத்திருக்கும் சண்முகத்திடம் பேசினோம். “அந்தக் காலத்துல பருத்திதான் பிரதானமா இருக்கும். அதுக்கப் புறம் மளிகைப் பொருள்கள், காய்கறி வியாபாரம் அதிக மாகிடுச்சு. ஊருக்குள்ள கடை வச்சுருக்க முக்கால் வாசிப்பேர், சனிக்கிழமை தேனி சந்தைக்கு வந்துருவாங்க. நாங்க அதிக லாபத்துக்கு பொருளை விக்க மாட்டோம். கிலோவுக்கு ரூ.1 கிடைச்சா போதும்னுதான் எங்கள் வியாபாரம் இருக்கும். பொருளும் தரமா இருக்குறதுனால வியாபாரிங்க, எங்களைத் தேடி வந்து வாங்கிட்டு போவாங்க.

பருத்தி முதல் காய்கறி வரை... தேவைகளை நிறைவேற்றும் தேனி வாரச் சந்தை! - திரளும் மக்கள் கூட்டம்..!

கேரளாவுக்குப் போகும் பொருள்கள்...

கேரளா வியா பாரிகள் இங்க வந்து வாங்குறது வழக்கம். இங்க கம்மியான விலையில வாங்கிட்டு, கேரளாவுல போய் லாபம் வச்சு விப்பாங்க. கொரோனா வந்த பிறகு, கேரள வியாபாரிகள் குறைவாத்தான் வராங்க. ஆனால், வியாபாரம் குறையல. நல்லபடியா போகுது” என்றார்.

கே.எஸ்.கே நடேசன்
கே.எஸ்.கே நடேசன்

கேரளாவுக்குப் பல சரக்குப் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்யும் ராஜாவிடம் பேசினோம். “சில வியாபாரிகள், நேரடி யாகத் தேனிக்கு வந்து பொருள்களை வாங்கிக்கிட்டுப் போவாங்க.

சில வியாபாரிகளால வர முடியாது. அவங்களுக்கு நாங்களே லாரியில சரக்க ஏத்தி அனுப்புவோம். விருது நகருக்கு அடுத்தபடியா, கேரளாவுக்குப் பல சரக்கு போற இரண்டாவது பெரிய சந்தை தேனி சந்தைதான்.

சண்முகம்
சண்முகம்

பருப்பு வகைகள், பயறு வகைகள், சீரகம், சோம்பு, கடுகு, மண்டைவெள்ளம், பூண்டு போன்ற பொருள்கள்தான் பெரும்பாலும் கேரளா வுக்குப் போகும். வட மாநிலங்களிலிருந்து கர்நாடகா வழியா பலசரக்குப் பொருள் கள் வரும். ஆனால், தேனியிலிருந்து பொருள் போறதுக்கும், வட மாநிலங்களில் இருந்து பொருள் போறதுக்கும் நேரம் அதிகம் ஆகும். தேனியிலிருந்து நைட் லாரி கிளம்புச்சுனா, காலையில கேரளாவுல பொருள் இருக்கும். அதனால தேனிச் சந்தைக்கு கேரள வியாபாரிகள் அதிக முக்கியத்துவம் கொடுப் பாங்க.” என்றார்.

கேரளாவுக்கு காய்கறி மொத்த வியாபாரம் செய்துவரும் பசுங்கிளியிடம் பேசினோம். “தேனில காய்கறி சாகுபடிதான் அதிகம். வெண்டைக்காய், கத்திரிக்காய், புடலங்காய், கோவைக்காய், வாழை, மாம்பழம் இப்படி சொல்லிக் கிட்டே போகலாம்.

ராஜா
ராஜா

இடுக்கி மாவட்டம் முழுக்க, தேனி சந்தையில் இருந்துதான் காய்கறி போகும். சிலர், வாரம் மூணு முறை அனுப்புவாங்க. சிலர், தினமும் காய்கறி அனுப்புவாங்க. ஆனா, சனிக்கிழமை வாரச் சந்தையில மட்டும் அதிக அளவு வியாபாரம் நடக்கும். குமுளியில் ஆரம்பிச்சு கொச்சி வரை தேனி காய்கறிதான்.

தேனி மண்ணும் முல்லையாத்து தண்ணியும் காய்கறிக்கு நல்ல டேஸ்ட்டை கொடுக்கும். அதனால, தேனி சந்தைக்கு எப்பவுமே மவுசு இருக்கும்” என்றார் புன்னகையோடு.

பருத்தியில் தனது பயணத்தை ஆரம்பித்து, இன்று காய்கறி, மளிகை சந்தையாகத் தன்னை மாற்றியிருக்கிறது தேனி வாரச் சந்தை.

பிட்ஸ்

கோவிட் 19-க்குப் பிறகு பணியாளர் களை வீட்டில் இருந்தே வேலை செய்ய வைத்த கூகுள் நிறுவனம், 2021 செப்டம்பர் வரை வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி கூறியுள்ளது!

பிட்ஸ்

டந்த பல ஆண்டுகளாக 50 டாலர்களுக்குக் கீழ் வர்த்தகம் ஆகிவந்த பிரெண்ட் குரூட் ஆயில் தற்போது முதல் முறையாக 50 டாலர்களுக்கு மேல் சென்று வர்த்தகம் ஆகத் தொடங்கி உள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism