Published:Updated:

நான் நானாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்! - உலக ஃபேமஸ் லில்லி சிங்

லில்லி சிங்
பிரீமியம் ஸ்டோரி
லில்லி சிங்

‘நான் நானாகவே இருப்பது’ என்ற வகையில் வீடியோக்களை வெளியிடும் சில யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்தார்.

நான் நானாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்! - உலக ஃபேமஸ் லில்லி சிங்

‘நான் நானாகவே இருப்பது’ என்ற வகையில் வீடியோக்களை வெளியிடும் சில யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்தார்.

Published:Updated:
லில்லி சிங்
பிரீமியம் ஸ்டோரி
லில்லி சிங்

15 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ்... யூடியூப் ஸ்டாராக அறியப்பட்டு இப்போது செலிபிரிட்டியாக மக்களால் கொண்டாடப்படுபவர்... ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களின் ஃபேன் ஃபாலோயிங் என சிக்ஸர்களைப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார் கனடாவைச் சேர்ந்த லில்லி சிங். பெயரைப் பார்த்து ‘இந்தியர் மாதிரி இருக்கே’ என்று யூகித்தால் உங்களுக்கு நீங்களே பூங்கொத்து கொடுத்துக்கொள்ளுங்கள்.

ஆம்! லில்லி பிறப்பதற்கு முன்பே கனடாவில் செட்டிலாகிவிட்டனர் அவரின் பெற்றோர். உளவியல் பட்டதாரியான லில்லி, கனடாவில் கலெக்‌ஷன் ஏஜென்சி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால், அந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. தன் 22-ம் வயதில் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார் லில்லி.

நான் நானாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்! - உலக ஃபேமஸ் லில்லி சிங்

‘நான் நானாகவே இருப்பது’ என்ற வகையில் வீடியோக்களை வெளியிடும் சில யூடியூப் கன்டென்ட் கிரியேட்டர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்தார். சிறுவயதில் தன் பட்டப்பெயரான ‘சூப்பர் வுமன்’ (தற்போது லில்லி சிங் என்று மாற்றிவிட்டார்) என்பதை சேனல் பெயராக்கினார். இன்று நம்மூரில் பிரபலமாகியிருக்கும் ‘ஜம்ப் கட்ஸ்’, ‘அராத்தி’ போன்ற காமெடி வகையறா ஸ்கிட்தான் லில்லி யின் களம். அவரே அம்மா, மகள், அப்பா, இளைஞன் எனப் பல கதாபாத்திரங்களாக முகம் காண்பிப்பார்.

‘கமலா ஹாரிஸின் உறவினராக இருந்தால்’, ‘அம்மாவுடன் பள்ளிப்பருவ ஷாப்பிங்’, ‘என் அப்பாவின் ஒரு நாள்’, ‘க்வாரன்டீன் அலப்பறைகள்’ என விதவிதமான நையாண்டி காமெடி வீடியோக்களை இவரின் சேனலில் அதிகம் பார்க்க முடியும். கதாபாத்திரங்களிலும், கான் செப்ட்டிலும் இந்திய வாடை வீசும்.

“என்னுடைய வீடியோக்களைப் பார்ப்பவர்கள் ‘அட! அந்தச் சூழலில் நானும் இதைப்போல உணர்ந்தேன்’ என்று நினைக்க வேண்டும். அதனால் என்னுடைய கான் செப்ட்டுகளுக்கு அதிகம் மெனக்கெடுகிறேன்” எனும் லில்லியை அதிக வருமானம் ஈட்டும் யூடியூப் ஸ்டார்களில் ஒருவராக அங்கீகரித்திருக்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

2013-ம் ஆண்டு வீடியோக்கள் வெளியிடத் தொடங்கிய வர் அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக 2015-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்தார். ஸ்பான்சர்களின் மூலம் உலகச் சுற்றுலா, சினிமா வாய்ப்பு, பல்வேறு பிராண்டுகளுடன் ஒப்பந்தம் என ராக்கெட் வேகமெடுத்தன அவரது கரியரும் சேனலும். படப்பிடிப்பில் கேமராவுக்குப் பின்னால் நடக்கும் களே பரங்களை மட்டும் வெளியிட `சூப்பர் வுமன் விளாக்' என்ற சேனலைத் தொடங்கினார். அதற்கும் மில்லியன் கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர்.

நான் நானாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்! - உலக ஃபேமஸ் லில்லி சிங்

ஹாலிவுட் பிரபலங்கள் ட்வைன் ஜான்டன், ஜேம்ஸ் ஃபிரான்கோ, பாலிவுட் பிரபலம் பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் இவரின் வீடியோக்களில் முகம் காட்டியுள்ளனர். ஒருகட்டத்தில் யூடியூப் சேனலுக்கான வேலைகள் இவருக்கு அதீத அயர்ச்சியைக் கொடுத்தன. “கடந்த எட்டு ஆண்டுகளாக வீடியோ வெளியிட்டு வருகிறேன். உடலளவிலும் மனதளவிலும், உணர்வு ரீதியாகவும் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். ஐ நீட் எ பிரேக்!” - 2018-ம் ஆண்டில் இவ்வாறு அறிவித்தவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு 2019-ம் ஆண்டில் மீண்டும் களமிறங்கினார். தொடர்ந்து என்.பி.சி சேனலில் ‘எ லிட்டில் லேட் வித் லில்லி சிங்’ என்ற இரவு நேர நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறினார். அதுவும் ஹிட்டடிக்க, தற்போது இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

நான் நானாக இருப்பதுதான் வெற்றியின் ரகசியம்! - உலக ஃபேமஸ் லில்லி சிங்

“என்னுடைய ஒவ்வொரு வீடியோவை வெளியிடும் போதும் ரசிகர்களுக்கு அது பிடிக்குமா, சப்ஸ்கிரைபர்கள் குறைந்துவிடுவார்களோ என்ற பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். நான் நானாக இருப்பதை என் ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன்” என்பவர் இனவாதத்துக்கு எதிரான கருத்துகளையும் தைரியமாக தன்னுடைய வீடியோக்களில் வெளியிடுகிறார்.

சிங்கப் பெண்ணே!