Published:Updated:

ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!

மாதவன்
பிரீமியம் ஸ்டோரி
மாதவன்

என் சப்ஸ்கிரைபர்ஸ் பலரும் நான் சிங்கிள்னு நினைச்சிட்டிருக்காங்க. எனக்குத் திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருக்காங்க.

ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!

என் சப்ஸ்கிரைபர்ஸ் பலரும் நான் சிங்கிள்னு நினைச்சிட்டிருக்காங்க. எனக்குத் திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருக்காங்க.

Published:Updated:
மாதவன்
பிரீமியம் ஸ்டோரி
மாதவன்

அமெரிக்கா எப்படி இருக்கும், அமெரிக்காவைச் சுற்றியுள்ள நாடுகள் எப்படி இருக்கும் என அறிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு ‘way2go tamil’ யூடியூப் பக்கம் பெஸ்ட் சாய்ஸ்! அமெரிக்காவைச் சுற்றியுள்ள பல நாடுகளுக்கு டிராவல் செய்து தமிழில் பல வீடியோக்களைப் பதிவேற்றியிருக்கிறார், மாதவன். அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்காக சென்னை வந்தவரைச் சந்தித்தோம். அவருடைய சாகசப் பயணம் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!

“என் ஃப்ரெண்ட்ஸ்கூட எந்த இடத்திற்கு டிராவல் பண்ணுனாலும் அங்கிருந்து எங்க வீட்டுக்கு வீடியோ கால் பண்ணி அந்த இடத்தைச் சுற்றிக் காட்டுவேன். வீட்ல உள்ளவங்களுக்குச் சுற்றிக் காட்டுற மாதிரி பொதுவான தளத்தில் பலருக்கும் சுற்றிக் காட்டினால் நல்லா இருக்குமேன்னு தோணுச்சு.

ஐ.டி-யில் வேலை கிடைக்கவும் அமெரிக்காவிற்குப் போயிட்டேன். அங்கே மூன்று ஆண்டுகள் இருந்ததற்கு அப்புறம் அமெரிக்கா பற்றி வீடியோ எடுத்துப் பதிவிடலாம்னு நினைச்சேன். அந்தச் சமயத்தில் அமெரிக்காவில் குக்கிங், லைஃப்ஸ்டைல் குறித்த வீடியோக்கள்தான் தமிழில் பண்ணிட்டு இருந்தாங்க. அதிலும் குறிப்பாக பெண்கள் மட்டுமே யூடியூப் சேனல்கள் வெச்சிருந்தாங்க. ஆண்கள் யாரும் வீடியோக்கள் பண்ண ஆரம்பிக்கலை. நான் அமெரிக்காவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு டிராவல் பண்ணி வீடியோ பண்ணப் போறேன்னு சொன்னதும் எங்க ஃபேமிலியில் கொஞ்சம் யோசிச்சாங்க. இதுவரை யாரும் பண்ணலைங்குறதனால வரவேற்பு கிடைக்குமாங்குற தயக்கம் அவங்களுக்கு இருந்துச்சு. நான் ரொம்ப உறுதியா இருந்ததால அவங்களும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. 2019-ல் சேனல் ஆரம்பிச்சேன்.

ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!

என் சப்ஸ்கிரைபர்ஸ் பலரும் நான் சிங்கிள்னு நினைச்சிட்டிருக்காங்க. எனக்குத் திருமணமாகி இரண்டு வயதில் குழந்தை இருக்காங்க. என் ஃபேமிலி குறித்து நான் எங்கேயும் சொன்னதில்லை. எனக்கு ஃபேமிலியை வீடியோவில் காட்டுறதில் உடன்பாடில்லை.

டிராவல், சயின்ஸ், டெக்னாலஜி மூன்றையும் பற்றி என் சேனலில் பேசலாம்னு நினைச்சேன். நான் பி.இ பயோடெக்னாலஜி முடிச்சிட்டு ஒரு கம்பெனியில் மைக்ரோ பயாலஜிஸ்ட் ஆக இருந்தேன். அதனால சயின்ஸ் பற்றிப் பேசப் பிடிக்கும். ஆனா, என்னால தனியா அதற்குக் கவனம் செலுத்த முடியலைங்குறதனால டிராவலில் கவனம் செலுத்தலாம்னு முடிவெடுத்தேன்.

எப்பவும் எனக்குப் பிடிச்ச வேலையை மட்டும்தான் தேர்ந்தெடுப்பேன். ஐந்தாண்டுக்குள் அந்த வேலையில் நான் என்னவாக இருக்கணும் என்று டார்கெட் செட் பண்ணிப்பேன். இந்தச் சேனல் ஆரம்பிக்கும்போது ஒரு வருஷத்துல சில்வர் பட்டன் வாங்கணும்; ஐந்து வருஷத்துல கோல்டு பட்டன் வாங்கணும்னு கோல் செட் பண்ணினேன். முதலில் சேனலுக்கு ‘Way2Go’ எனப் பெயர் வைக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஆனால், யூடியூப் பட்டன் வாங்கும்போது அதில் சேனலுடைய பெயர் ‘Way2Go’ன்னு மட்டும் இருந்தா நல்லா இருக்காதுன்னு ‘Way2go tamil’ என்று பெயர் வைக்க நினைச்சேன். நான் நினைச்ச மாதிரியே ஒரு வருடத்தில் சில்வர் பட்டன் வாங்கினேன்.

பலரும் லாக்டெளன் சமயத்தில் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகமானதாகச் சொல்லுவாங்க. ஆனா, என்னை மாதிரி சோலோ கிரியேட்டர்ஸுக்கு அப்போதான் ஃபாலோயர்ஸ் ரீச் ரொம்பவே குறைஞ்சது. டிஸ்னி, லாஸ்வேகாஸுக்குப் போய் அங்கே உள்ள முக்கிய இடங்களைச் சுற்றிக் காட்டினேன். அதற் கெல்லாம் நிறைய செலவு பண்ண வேண்டி யிருந்தது. எனக்கு வீடியோ குவாலிட்டியாகக் கொடுக்கணும். அதற்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு பண்ணலாம். டிரோன் கேமரா வைத்துச் சில இடங்களைப் படம் பிடித்து, பார்வையாளர்களுக்குக் காட்டியிருக்கேன். நான் எடுக்குற வீடியோக்களை நானே எடிட் பண்ணி அப்லோடு பண்ணுவேன்.

ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!
ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!
ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!
ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!
ஷேர்பட்டா பரம்பரை: அமெரிக்காவைச் ‘சுற்றி’ப் பார்க்கலாம்!

அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகம் பென்டகனில் இருக்கு. அந்த கேம்பஸ்குள்ளே அத்துமீறி யாராவது நுழைஞ்சா அவங்களைச் சுட்டுத்தள்ள அனுமதி உண்டு. அதற்கு எந்த விசாரணையும் கிடையாது. வாஷிங்டனில் வீடியோ எடுத்துட்டிருந்தேன். அப்போ பென்டகன் கேம்பஸுக்கு வெளியே இருக்குறதா நினைச்சு காரை கேம்பஸுக்குள்ளே கொண்டு போயிட்டேன். திடீர்னு 4,5 போலீஸ் வண்டிகள் என் காரை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிடுச்சு. அமெரிக்காவைப் பொறுத்தவரை போலீஸ் நம்ம வண்டியை நிறுத்துனாங்கன்னா நாம உடனே வண்டியிலிருந்து இறங்கக்கூடாது. கையை மேல தூக்கிக்கணும். அவங்க வண்டியில் ஆயுதம் எதுவும் இருக்கான்னு பரிசோதனை செய்துட்டு நம்மளை இறங்கச் சொல்லுவாங்க. அப்படி இறங்கச் சொல்லி என்னை விசாரிச்சாங்க. நான் வெளியில் இருந்து வீடியோ பண்றதா நினைச்சு உள்ளே வந்துட்டேன்னு சொன்னேன். அவங்க வார்னிங் கொடுத்து அனுப்பி வச்சாங்க. அதிர்ஷ்டவசமா அன்னைக்கு நான் தப்பிச்சிட்டேன்.

ஸ்பாட்டுக்குப் போய்ட்டு அந்த இடம் குறித்த வரலாறுகளைத் தேடிப் படிப்பேன். வீடியோ ஆரம்பிக்கும்போது அந்த இடம் குறித்த தகவல்களைப் பார்வையாளர் களிடம் பகிர்ந்துப்பேன். நிறைய மாற்றுத்திறனாளிகள், வயசானவங்க என்னுடைய வீடியோக்கள் பார்த்துட்டு மெசேஜ் பண்றாங்க. நேரடியா பயணம் செய்ய முடியாத அவங்க ஆசைப்பட்ட இடங்களைச் சுற்றிக் காட்டுறது அவங்களுக்குப் பிடிச்சிருக்குன்னு நிறைய பேர் கமென்ட் பண்றாங்க. அதெல்லாம் பார்க்கும்போது ரொம்பவே நெகிழ்ச்சியா இருக்கு.

அமெரிக்காவைச் சுற்றியுள்ள, கிட்டத்தட்ட 30 நாடுகளுக்குப் போயிட்டேன். இன்னும் கொஞ்சம் இடங்கள் இருக்கு. அதை முடிக்கணும். அதே மாதிரி ஸ்விட்சர்லாந்து போகணுங்குறது ரொம்ப நாள் ஆசை. சீக்கிரமே போகணும்” எனப் புன்னகைக்கிறார் மாதவன்.