Published:Updated:

தினமும் 100 மணி நேர உழைப்பை என்ஜாய் செய்கிறேன்!

ரோஸன்னா பேன்சினோ
பிரீமியம் ஸ்டோரி
ரோஸன்னா பேன்சினோ

யூடியூபர் ரோஸன்னா பேன்சினோ

தினமும் 100 மணி நேர உழைப்பை என்ஜாய் செய்கிறேன்!

யூடியூபர் ரோஸன்னா பேன்சினோ

Published:Updated:
ரோஸன்னா பேன்சினோ
பிரீமியம் ஸ்டோரி
ரோஸன்னா பேன்சினோ

சமையலறையிலும்கூட மாயாஜாலங்களை நிகழ்த்துபவர்கள் பெண்கள். அந்த மாயா ஜாலங்களுக்கு வர்ணம் பூசி வண்ண வண்ண கேக் தயாரித்து அதை வீடியோவாக்கியதால் 12.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைச் சம்பாதித்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த ரோஸன்னா பேன்சினோ (Rosanna Pansino).

“கல்லூரியில் படிக்கும்போது நாடகங்களில் நடித்தேன். படிப்பு முடித்ததும் ஹாலிவுட்டில் நுழைய வேண்டும் என்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துக்கு வந்து சில சினிமாக்களில் நடித்தேன். ஆனால் நடிப்பு என்னுடைய கிரியேட்டிவிட்டிக்கு தீனி போடவில்லை. வாய்ப்புகளுக்காகக் காத்தி ராமல் என்னுடைய கன்டென்ட்டை வீடியோவாக்கி யூடியூபில் வெளியிட்டேன். தயாரிப்பாளர், எடிட்டர், கிரியேட்டிவ் இயக்குநர் என நான் நினைத்த உருவில் மாறிக்கொள்ள யூடியூப் என்னை அனு மதித்தது” என்பவர் சேனல் தொடங்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் மிகவும் சிக்கனமாக வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்.

தினமும் 100 மணி நேர உழைப்பை 
என்ஜாய் செய்கிறேன்!
தினமும் 100 மணி நேர உழைப்பை 
என்ஜாய் செய்கிறேன்!

“சினிமா செட்களில் சுமார் 16 மணி நேரம் வேலை பார்ப்பேன். வாடகைக்கு வீடு எடுக்காமல் என் காரிலேயே இரவைக் கழித்துவிடுவேன். அந்தக் காலகட்டம் உண்மையாகவே போராட்ட மாகத்தான் இருந்தது” எனும் ரோஸன்னா பொழுது போக்குக்காகப் பாட்டியுடன் சேர்ந்து கேக் பேக் செய்த அனுபவத்தைக் கொண்டு சேனல் தொடங்கி யிருக்கிறார்.

சிறு வயதிலேயே `டிஸ்லெக்ஸியா' எனும் கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார் ரோஸன்னா. எழுத்துகளைவிட விஷுவலாக இருக்கும் எதையும் அவரால் எளிதாக கற்றுக்கொள்ளவும் கிரகிக்கவும் முடிந்தது. பொதுவாக யூடியூப் சேனல் தொடங்கு பவர்கள் பிரபலமடைய ஆரம்பித்ததும் ஹோம் டூர், ஃபிரிட்ஜ் டூர் என வெவ்வேறு வகை வீடியோக்களை வெளியிடுவார்கள். ரோஸன்னாவும் அதே டிராக்கில்தான் பயணிக்கிறார். கேக் பேக்கிங் வீடியோக்கள் தவிர, ‘24 மணி நேரம் கடற்கன்னி போன்று வேடமிட்ட அனுபவம்’, ‘1000 ரோஜாக் களின் மூலம் ஃபிரெண்டை சர்ப்ரைஸ் செய்தது’, ‘வீட்டுக்கு வந்த புது நாய்க்குட்டிகள்’, ‘என்னுடைய புது வீடு’.... எனப் பல வீடியோக்களையும் வெளி யிட்டுள்ளார். வீடியோக்களுக்கு வியூஸ் எல்லாம் மில்லியனில்தான்.

தினமும் 100 மணி நேர உழைப்பை 
என்ஜாய் செய்கிறேன்!
தினமும் 100 மணி நேர உழைப்பை 
என்ஜாய் செய்கிறேன்!

“சில நாள்களில் 100 மணி நேரம்கூட வேலை பார்ப்பேன். ஆனாலும் அதை என்ஜாய் செய்கிறேன். சேனல் தொடங்கும்போதே என்னுடைய வீடியோக் களை என் அப்பாவிடம் காட்டும்போது அவர் தர்ம சங்கடத்துக்கு ஆளாகக் கூடாது என்று நினைத்தேன். அது சரியென்பதை என் சேனலை குடும்பமாகப் பார்க்கும் ஆடியன்ஸ் நிரூபித்திருக்கிறார்கள்” என்று பூரிக்கும் ரோஸன்னாவின் ‘Nerdy Nummies’ என்ற கேக் பேக்கிங் சீரிஸ் வீடியோக்கள் மிகப்பெரிய ஹிட். அந்த ரெசிப்பிகளை ‘ஸ்டெப் பை ஸ்டெப்’பாக போட்டோ மூலம் விவரிக்கும் ரெசிப்பி புத்தகத்தை யும் வெளியிட்டிருக்கிறார். ஓராண்டு உழைப்பில் வெளியான அந்தப் புத்தகமும் ஹிட்.

“என் பெற்றோர்தான் அலுவலக மேலாளர்கள், சகோதரி என்னுடைய மேக்கப், ஷூட்டுக்கு உதவு கிறார். பிரதர்-இன்-லா மற்றும் பாய் ஃபிரெண்ட் ஆகியோரும் என் சேனலுக்காக முழு நேரமாக உழைக்கின்றனர். சிலருக்கு குடும்பத்தினருடன் சேர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்கும். நம்பிக்கைக்குப் பாத்திரமான குடும்பத்தினருடன் வேலை செய்வதை நான் விரும்புகிறேன். பல பொருள்களை ஒன்றாக இணைத்து உருவாக்கும் போது கிடைக்கும் சுவைமிக்க கேக் போன்றது அவர்கள் உடனிருப்பது” - கலர்ஃபுல்லாக சிரிக்கிறார் ரோஸன்னா.