Published:Updated:

ஜீவாமிர்தம்

ஜீவாமிர்தம்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவாமிர்தம்

ஜீவாமிர்தத்தைப் பயிருக்கு ஊட்டம் கொடுப்பதற்காகப் பாசன நீருடன் கலந்துவிடலாம். இலைவழித் தெளிப்பாகவும் பயன்படுத்தலாம்.

ஜீவாமிர்தம்

ஜீவாமிர்தத்தைப் பயிருக்கு ஊட்டம் கொடுப்பதற்காகப் பாசன நீருடன் கலந்துவிடலாம். இலைவழித் தெளிப்பாகவும் பயன்படுத்தலாம்.

Published:Updated:
ஜீவாமிர்தம்
பிரீமியம் ஸ்டோரி
ஜீவாமிர்தம்

தேவையான பொருள்கள்:

தண்ணீர் - 200 லிட்டர்
நாட்டுப் பசுமாட்டுச் சாணம் - 10 கிலோ
நாட்டுப் பசுமாட்டுச் சிறுநீர் - 10 லிட்டர்
வெல்லம் - 1 கிலோ
பயறு மாவு - 1 கிலோ
சாகுபடி செய்யும் நிலத்தின் வரப்பு மண் ஒரு கைப்பிடி

சாணம் புதிதாக இருக்க வேண்டும். பழைய சாணத்தைப் பயன்படுத்த கூடாது. நாள் ஆக ஆக மாட்டுச் சிறுநீரின் வீரியம் அதிகமாகும். அனைத்து பொருள்களையும் கலந்து, ஒரு பேரலில் இரண்டு நாள்கள் வைக்க வேண்டும். அதன் பிறகு எடுத்துப் பயன்படுத்தலாம். இதனை ஒரு வாரத்துக்குள் பயன்படுத்துவது, முழுமையான பலனைக் கொடுக்கும். நிழலில், காற்றுப் போகுமாறு சணல் சாக்குக் கொண்டு மூடி வைக்க வேண்டும். காலை, மாலை இருமுறை குச்சிமூலம் கரைசலை வலதுபுறமாகக் கலக்கிவிட வேண்டும்.

ஜீவாமிர்தம்

ஜீவாமிர்தத்தைப் பயிருக்கு ஊட்டம் கொடுப்பதற்காகப் பாசன நீருடன் கலந்துவிடலாம். இலைவழித் தெளிப்பாகவும் பயன்படுத்தலாம். இளம்பயிராக இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 50 மி.லி என்ற அளவிலும், வளர்ந்த பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மி.லி என்ற அளவிலும் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், பயிர்கள் செழித்து வளரும். பயிருக்குத் தேவையான ஜிப்ரலிக் அசிட்டிக் அமிலம் (GAA), நாப்தலின் அசிட்டிக் அமிலம் (NAA) போன்ற வளர்ச்சியூக்கிகள் ஜீவாமிர்தத்தில் இருப்பதால், பயிர்களில் ஒளிச்சேர்க்கை சிறப்பாக நடந்து மகசூல் அதிகரிக்கும். இந்த இரண்டு அமிலங்களைத்தான் தனியார் நிறுவனங்கள், வளர்ச்சி ஊக்கிகள் என்ற பெயரில் விற்பனை செய்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism