Published:Updated:

தொடர் விலை ஏற்றத்தில் தங்கம்... என்ன காரணம்?

தங்கத்தின் விலை ரூ.5,208!
News
தங்கத்தின் விலை ரூ.5,208!

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,208-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.41,664-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000-க்கும் விற்பனை ஆனது.

தொடர் விலை ஏற்றத்தில் தங்கம்... என்ன காரணம்?

சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,208-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.41,664-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000-க்கும் விற்பனை ஆனது.

Published:Updated:
தங்கத்தின் விலை ரூ.5,208!
News
தங்கத்தின் விலை ரூ.5,208!

சர்வதேச பொருளாதாரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினமும் தங்கத்தின் விலை ஏறியும் இறங்கியும் வருகிறது. கடந்த சில நாள்களாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தங்க விலை ஏற்ற இறக்கங்கள்!
தங்க விலை ஏற்ற இறக்கங்கள்!

கடந்த டிசம்பர் மாதம் 31-ம் தேதி மாலை நேர நிலவரத்தின்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.5,115-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.40,920-க்கும் விற்பனை ஆனது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,500-க்கும் விற்பனை ஆனது.

இந்த ஆண்டுக்கான தங்க விலை ஏற்றம் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,208-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.41,664-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.75-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.75,000-க்கும் விற்பனை ஆனது.

உலக பொருளாதார மந்தநிலை
உலக பொருளாதார மந்தநிலை

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலக அளவில் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சி மந்தநிலையில் இருக்கும் என்பதால் தங்கம் விலை இனி குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.