அகத்தியர் பிறந்த நட்சத்திர நாள் சித்தா தினமாகக் கொண்டாடப்படும்... ஆயுஷ் அமைச்சகம் அனுமதி!

கத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளை 'சித்தா தினமாக' கொண்டாட மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், ஓமியோபதி போன்ற பல பழமையான மற்றும் பாரம்பர்ய மருத்துவ முறைகள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு மருத்துவ முறையையும் போற்றும் விதமாக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அதற்கான தினத்தை அறிவித்துள்ளது. அதன்படி, ஆயுர்வேதா மற்றும் யோகா தினங்கள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றன. 18 சித்தர்கள் சித்த மருத்துவத்தை தோற்றுவித்தனர். அதன் அடிப்படையில், சித்த மருத்துவத்தை போற்றும் விதமாக சித்த மருத்துவத்தின் முன்னோடியான 18 சித்தர்களில் முதன்மையானவருமான அகத்தியரின் பிறந்த ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளை சித்தா தினமாக அறிவிக்க வேண்டும் என்று பல முறை பல ஆண்டுகளாக பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. 

அகத்தியர்

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தின் அறிக்கைப்படி, அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளன்று சித்தா தினம் கொண்டாடப்படும் என்று மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில், வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நட்சத்திர தினம் மாறுபடும் என்பதால், ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளை அரசு அறிவிப்பின் அடிப்படையில் சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது.

சித்தா தினம் கொண்டாட்டம். அண்ணா இயற்கை மருத்துவமனை

மேலும், சித்தா தின அறிவிப்பு குறித்து, முதலாம் ஆண்டு சித்தா தினக் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக அகத்தியரின் சிறப்புகள் மற்றும் அவர் சித்த மருத்துவத்துக்கு கொடுத்த அற்புத பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கம் இன்று மற்றும் நாளை (26.8.17, 27.8.17) சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!