Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``ஈஸியா மனஅழுத்தம் குறைக்கலாம்’’ - நடிகர் ரமேஷ் கண்ணாவின் பிரார்த்தனை டெக்னிக்!

நகர வாழ்க்கை பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது. அதிலும் திரைத்துறையில் இருப்பவர்கள் என்றால், சொல்லவே வேண்டாம்... நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன், அன்றைய தினத்தையும் அடுத்த நாளையும் நினைத்து ஸ்ட்ரெஸ் என விரையும் வாழ்க்கை. நடிகர் ரமேஷ் கண்ணா, தன் ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க வித்தியாசமான ஒரு வழிமுறையைக் கையாள்கிறார் என்று கேள்விப்பட்டோம். அதை அறிய அவரைச் சந்தித்துப் பேசினோம். படப்பிடிப்பு வேலைகளுக்கு இடையிடையே படங்களுக்குக் கதை வசனம் எழுதிக்கொண்டு, இப்போதும் காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாத குறையாக, பிஸியாக ஓடிக்கொண்டேயிருக்கிறார். தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி சரி செய்துகொள்கிறார் ரமேஷ் கண்ணா?

மனஅழுத்தம் குறைப்பது எப்படி என விளக்கும்  நடிகர் ரமேஷ் கண்ணா

``ஸ்ட்ரெஸ்ங்கிறது இன்னைக்கு எல்லாருக்குமே வந்துடுச்சு. அதுவும் கல்யாணம் ஆயிடுச்சுன்னா கேட்கவே வேண்டாம். அவங்கக்கிட்ட இருக்கிற ஸ்ட்ரெஸ் நமக்கும் வந்து ஒட்டிக்குது. ஆக, ஸ்ட்ரெஸ் நம்ப வாழ்க்கையில வந்து இணைஞ்சுடுச்சு.

ஒரு பஸ்ஸுல போறோம். பஸ் நின்னதும் தடுக்கி விழுந்துடக் கூடாதுனு வயசானவர் மெள்ளமா இறங்குவார். அதுக்குக்கூட பொறுமை இல்லாம, `சீக்கிரம் இறங்குய்யா’னு கத்த ஆரம்பிச்சுடுறோம். அதே மாதிரி நம்ம காரைக் கொண்டுபோய் சிக்னல்ல நிறுத்துவோம்; சின்ன சந்தாக இருக்கும். அதுக்குள்ள போய் நிறுத்துவோம். ரெட் சிக்னல்தான் இருக்கும். பின்னாடி வர்றவனுக்கு பொறுமை இருக்காது. அந்தச் சின்ன சந்துல டூ வீலரை ஒடிச்சு, வளைச்சு நம்ம கார் தகரத்தைக் கிழிச்சுட்டுப் போய் நிப்பான். அதே ரெட் சிக்னல்தான் எனக்கும் அவனுக்கும். கொஞ்சம் பின்னாடி போகலாம். போக மாட்டான். அங்கே இருந்து வேகமா போய் ஹாரன் அடிப்போம். 'யோவ், ஏன்யா 'பாம்... பாம்'னு ஹாரன் அடிக்கிறே... போய்கிட்டுதானே இருக்கோம்'பான்.

சரி, ஒரு கேப்புல சத்தமில்லாம சைடு வாங்கிப் போனோம்னா, அதே நபர், `யோவ்... ஹாரன் அடிக்க மாட்டியா?’னு கேட்பான். என்னத்தைச் சொல்றது? எல்லாருமே அவங்களுக்குத் தகுந்த மாதிரி உலகம் இருக்கணும்னு நினைக்குறாங்க. ஆனா, நியாயமா நடந்துக்க மாட்டேங்கிறாங்க. உலகம் அவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்கு. முதல்ல இந்த மன அழுத்தம்ங்கிறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. காலப்போக்குல பல விஷயங்கள்ல அடிபட்டு மிதிபட்டு வரவும் பழகிப் போயிடுச்சு.

நடிகர் ரமேஷ் கண்ணா

மனஅழுத்தத்துக்கு உரிய காரணம் வீதியில இருக்கு. வீட்டுல இருக்கு. வேலை பார்க்கிற இடத்துல இருக்கு.

ஒரு ஷூட்டிங்குக்குப் போறோம். கரெக்ட்டா அன்னைக்கு வரவேண்டிய ஆர்ட்டிஸ்ட் வரலைன்னா, ஷூட்டிங் கேன்சலாகிடும். மறுநாள் வேற ஒரு இடத்துக்குப் போக ப்ளான் பண்ணி இருப்போம். அப்ப செம டென்ஷன் ஆகிடும். அதனால மனஅழுத்தம்ங்கிறது எப்பவும் இருக்கும். அதோடதான் நாம வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். காலையில் எந்திரிச்சதும் செல்போன் அரை மணி நேரம் அடிக்கலைனா 'என்னடா, எவனும் போன் பண்ணலை, மார்க்கெட் இப்படி இருக்குதே'னு கவலை வந்துடும். போன் கால்ஸா வந்தாலும், 'என்னடா குளிக்க முடியலை. புறப்பட முடியலை'னு பரபரப்பு தொத்திக்கும். ஆனா, அந்தப் பரபரப்புதான் நம்மைத் தொடர்ந்து வேலைபார்க்க வெச்சிக்கிட்டே இருக்கும்.

நமக்கு மனஅழுத்தம் வந்ததுனா அதைச் சரிபண்ண, ஒரு சின்ன விஷயம் இருக்கு. காலையில் இருபது நிமிஷம், சாயங்காலம் 20 நிமிஷம் பிரேயர் பண்ண ஒதுக்கிட்டோம்னா ஸ்ட்ரெஸ்ஸெல்லாம் காணாமப் போயிடும். அப்புறம் ஸ்ட்ரெஸ்ங்கிற ஒண்ணு வரவே வராது. நான் எப்பவும் எனக்காக பிரேயர் பண்ண மாட்டேன். மத்தவங்களுக்காகத்தான் பண்ணுவேன். யார் யாருக்கெல்லாம் பிரேயர் பண்ணுவேன்னு, அந்தப் பெயர்களைச் சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது.

 

 

'நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றால் நிச்சயம் நல்ல மனிதர்களின் பிரார்த்தனையில் நீங்கள் இருப்பீர்கள்' என வேதம் சொல்கிறது. நான் கிறிஸ்டியன். ஜீசஸை நினைச்சுத்தான் பிரேயர் பண்ணுவேன். அதாவது 'உனக்கு சமூகத்தில் மதிப்பும் அன்பும் இருக்கிறதென்றால், இன்னொருவருடைய இதயத்தில் நீ இருக்க வேண்டும். இன்னொருவருடைய எண்ணத்தில் நீ இருக்க வேண்டும். இன்னொருவருடைய பிரார்த்தனையில் நீ இருக்க வேண்டும்' என்பார்கள். அந்த இடத்தில இருக்கிறவன்தான் மனிதன். அதுதான் வாழ்க்கையின் சக்சஸ்.

முக்கியமா பிரேயர் பண்ணும்போது உங்களுக்காகப் பண்ணக் கூடாது. உங்களைச் சேர்ந்த உங்கள் குடும்பம், நண்பர்கள், தொழில் வாய்ப்பு அளித்தவர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், கைம்பெண்கள் என மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுக்கு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அப்படிப் பண்ணும்போது அவங்க முகமெல்லாம் நமக்கு வந்து போகும். உடனே தெம்பாயிடுவேன்'' இவ்வாறு அவர் கூறினார்'.

'எனக்கு ரொம்ப மன அழுத்தமா இருந்தா, மத்தவங்களுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பிச்சிடுவேன்' எனும், உங்களின் பிரார்த்தனை ரொம்பவே வித்தியாசமாக இருக்கு சார்' எனக்கூறி விடைபெற்றோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement