வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (06/10/2017)

கடைசி தொடர்பு:18:00 (06/10/2017)

டெங்குவுக்கு எதிராக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுப்பதுபோல் நடிக்க வேண்டாம்! - மருத்துவர்கள் சாடல்

மிழ்நாட்டில் டெங்குவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசின் கணக்குபடி, இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர் என்கின்றனர். ஆனால், உண்மையான எண்ணிக்கை 27 அல்ல; அதைவிட பல மடங்கு இருக்கும். இவ்வளவு நெருக்கடியான சூழலில்கூட ஆட்சியாளர்கள் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மாறாகத் தங்கள் ஆட்சியின்மீது அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்வதுபோல் நடிப்பதிலேயே கவனத்தைச் செலுத்துகின்றனர் . ஆட்சியாளர்கள் உடனே இந்தப் போக்கை மாற்றிக்கொண்டு விரைவாக வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

டெங்கு

இது தொடர்பாக அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பொதுச் செயலாளர் மருத்துவர் காசி, "இன்னும் விரைவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் டெங்குவுக்கான நாளாகக் கடைப்பிடிக்காமல் 24*7 அடிப்படையில் வேலை செய்ய வேண்டும். பள்ளிகளுக்கு இரண்டு வாரம் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மட்டுமல்லாமல், ஆசிரியர்கள், பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் என அனைவரையும் டெங்குவுக்கான விழிப்பு உணர்வுப் பணிக்கு ஈடுபடுத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் காய்ச்சலால் அனுமதிக்கப்படுவர்களை உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

மக்களும் காய்ச்சல்தானே என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவரிடம் உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நிலவேம்புக் கசாயம், பப்பாளி இலைச் சாறு போன்றவை நோய் எதிர்ப்புச் சக்தியைத்தான் அதிகரிக்கும். டெங்கு பாதிப்புக்கு நேரடியான மருந்தாக இருக்காது. நிலவேம்புக் கசாயம் குடித்துவிட்டோம் நம்மைக் காய்ச்சல் ஒன்றும் செய்யாது என்று மக்கள் அசால்ட்டாக இருக்கக் கூடாது. இதுகுறித்து எங்கள் அமைப்பின் சார்பாக  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் இணைந்து  விழிப்பு உணர்வுப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு

அதைவிட டெங்குவுக்கு எதிராகத் தமிழக அரசும் அமைச்சர்களும்  நடவடிக்கை எடுப்பதுபோல் நடிப்பதை விட்டுவிட்டு, தீவிர  நடவடிக்கைகளை உண்மையாக மேற்கொள்ள வேண்டும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க