டெங்குவைக் குணப்படுத்துமா நிலவேம்புக் குடிநீர்..? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா ? #Video | Does Nilavembu Kudineer Treats Dengue Fever

வெளியிடப்பட்ட நேரம்: 15:16 (27/10/2017)

கடைசி தொடர்பு:15:16 (27/10/2017)

டெங்குவைக் குணப்படுத்துமா நிலவேம்புக் குடிநீர்..? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டனவா ? #Video

ன்றைக்கு எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு வார்த்தையாகிவிட்டது நிலவேம்புக் குடிநீர். எவ்வளவு விரைவாக இந்த வார்த்தை மக்களைச் சென்றடைந்ததோ, அதைவிட அது குறித்த வதந்திகளே அதிகமாகப் பரவியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, `நிலவேம்புக் குடிநீரில் மருத்துவ குணங்கள் ஒன்றும் இல்லை. அது மலட்டுத்தன்மை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகளை உண்டாக்கக்கூடியது. இதை அருந்தினால் ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், காய்ச்சல் தீரும் என்பதற்கான ஆய்வுகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’ என்கிற கருத்தும் பரவலாகிவருகிறது. `எனவே, அந்தக் குடிநீரைப் பொதுமக்களுக்குக் கொடுக்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக, அதைக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தக் கூடாது’ என்கிறார்கள் பல மருத்துவர்கள்.

நிலவேம்பு

இதை முன்வைத்து தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் விவாதங்களும் சர்ச்சைகளும் நடப்பது அன்றாட வழக்கமாகவே ஆகிவிட்டது. பதில் சொல்லவேண்டிய அரசோ, இந்தச் சந்தேகங்களைத் தீர்க்க முயற்சி செய்யாமல், `நிலவேம்புக் குடிநீரைத் தாராளமாகக் குடிக்கலாம்’ என்று மட்டும் கூறுகிறது.

இதனால், பொதுமக்களிடையே நிலவேம்பு குறித்த குழப்பம் மட்டுமே நீடித்துவருகிறது. எனவே, இதைப் பற்றிய சந்தேகங்களைத் தீர்க்கவும், இது குறித்த உண்மை நிலையை அறியவும் நிலவேம்பை ஆதரிப்பவர்களையும், தீவிரமாக எதிர்ப்பவர்களையும் சந்தித்துப் பேசினோம்.

நிலவேம்புக் குடிநீர்

நிலவேம்பின் மருத்துவக் குணங்கள் தொடங்கி, காய்ச்சலுக்கு அது எப்படிப் பயன்படுகிறது, அதன் சாதக பாதகங்கள் அனைத்தையும் குறித்து நிபுணர்களிடம் பேசினோம். நிலவேம்புக் குடிநீர் எப்படித் தயாராகிறது, அதில் உள்ள மூலப்பொருள்கள் எவை, அவற்றின் மருத்துவக் குணங்கள் என்னென்ன, அது குறித்து நடைபெற்றுள்ள ஆராய்ச்சிகள் என்னென்ன, எந்த அடிப்படையில் அது மருந்தாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என ஆதி முதல் அந்தம் வரை அத்தனை சந்தேகங்களையும் கேள்விகளாக்கி, துறைசார்ந்த வல்லுநர்களிடம் விளக்கம் பெற்றோம். அவற்றை விரிவாக இங்கு பார்க்கலாம். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்