வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (30/10/2017)

கடைசி தொடர்பு:15:29 (30/10/2017)

என் மகள் வாழ்ந்தால் போதும்!: கதறி அழும் தாய் (Sponsored Content)

"டாக்டர், ஏன் என்னோட தலையிலருந்து முடியெல்லாம் கொட்டிடுச்சு?" என என் மகள் ஹரிணி கேட்கும்போது நான் நிலைகுலைந்து போகிறேன். "அது ஒண்ணுமில்ல ஹரிணி, மருந்து போட்ரோம்ல, அதான். மொதல்ல வீக்கா இருக்குற முடியெல்லாம் கொட்டி, சீக்கிரமே உனக்கு உடம்பு சரியானப்புறம் நீளமா அழகா புது முடி முளைக்கும்" என்று டாக்டர் ஆறுதல் கூறுவார். அதைக்கேட்டு "அம்மா, உன்ன மாறியே எனக்கு எப்ப அழகா நீளமா முடி முளைக்கும்? இதுக்காகவே நான் சீக்கிரமா வளரனும்" என்று சொல்லுவாள். அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாள் தனக்குக் காய்ச்சல், அதனால்தான் இந்த மருந்து, மாத்திரை, மருத்துவமெல்லாம் என. அவளுக்கு நான் எப்படிச் சொல்வேன், உனக்கு வந்திருப்பது காய்ச்சலல்ல, உயிரையே கொள்ளக் கூடிய "கேன்சர்" என்று? 9 வயதுக் குழந்தைக்கு இரத்தப் புற்றுநோய் பற்றி விளக்கினால்தான் புரியுமா. இப்படித்தான் நான் தினம் தினம் செத்துப்போகிறேன்.

ஹரிணிக்கு உதவ க்ளிக் செய்க...

ஹரிணிக்கு உதவ க்ளிக் செய்க...

22 தடவை கீமோதெரப்பி பண்ணிட்டோம், இந்தக் கொடியநோய் அவள் உடலை விட்டபாடில்லை. இன்னும் 8 தடவை இதேபோல் சிகிச்சை செய்ய வேண்டுமாம், இந்த நோய் போக. ஆனால் அதற்கு 10 இலட்ச ரூபாய் வேண்டுமே, வச்சிருந்த காசு மொத்தமும் சிகிச்சைக்கு போய்விட்டது, மேற்படிக்கு நாங்கள் எங்கே போவது என யோசிக்கிறேன், மீதியுள்ள பத்து ரூபாயை கையில் வைத்துக்கொண்டு. ஹரிணிதான் என் உயிர், உலகம், எல்லாமும். நம் ஒரே குழந்தை நம் கண்முன்னரே இறப்பதை எந்தத் தாயாலும் தாங்க முடியுமா? இதைத் தடுக்கவோ எனக்குத் தேவை நிதியுதவி. கண்ணீருடன் கேட்கிறேன்... எங்கள் ஹரிணியைக் காப்பாற்றுங்கள்.

நான் ஹரிணியின் அம்மா, ஜெனிஃபர். நான், கணவர், ஹரிணி - மூவர்தான், பெங்களூரில் வசிக்கிறோம். சில மாதங்களுக்கு முன்புவரை என் கணவர் டாக்சி ஓட்டி மாதம் ருபாய் 8000 சம்பாதித்துவந்தார். ஆனால் இப்போது அவருக்கு வேலையில்லை. அவர் ஓடி ஓடி ஹரிணிக்காக மருந்து வாங்குவதற்கும், பில் கட்டுவதற்கும், கடன் வாங்குவதற்கும் அலைவதால் அவருக்கு வேலை போனது. கடந்த 7 மாதங்களில், எங்களின் சேமிப்பு, உற்றார் உறவினர்களிடமிருந்து வாங்கிய கடன் என அனைத்தையும் ஹரிணியின் சிகிச்சைக்காக செலவழித்துவிட்டோம். இப்போது எங்களிடம் இருப்பது உயிர் மட்டும்தான். எதிர்காலம் இருட்டாக இருக்கிறது. எங்கள் மகளை பணத்தைக் காரணம் கூறி சாக விடுவதா?

ஹரிணிக்கு உதவ க்ளிக் செய்க...

ஹரிணிக்கு உதவ க்ளிக் செய்க...

இதெல்லாம் ஆரம்பித்தது 2017 ஏப்ரல். அவளுக்குத் தொடர்ந்து கடும் காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துவந்தது. அன்றே பயந்துபோனோம், ஆனால் இப்போது அப்படியல்ல. நொடிப்பொழுதும் விடாத சோகம் தாக்கி, அதுவே பழகிப்போய் உயிரற்ற ஜடம்போல் ஆகிவிட்டோம் நானும் என் கணவரும். எலும்பு மஜ்ஜை சோதனைக்குப் பின், அவளுக்கு இரத்தப் புற்றுநோய் இருப்பது உறுதியானதைக் கேட்டு நான் மயக்கம் போட்டு கீழ சரிந்துபோனேன்.

உயிரைக் கொடுத்தாவது எங்களின் ஒரே மகளைக் காப்பாற்ற நாங்கள் தயார். ஆனால், உயர்சிகிச்சைக்குத் தேவை பண உதவியல்லவா? அதற்கு என்ன செய்வது? யார் யாரிடமோ பிச்சை கேட்டுவிட்டோம். இதுவரை அப்படித்தான் அவளைக் காப்பாற்றியுள்ளோம். ஆனாலும் இன்னும் அதிகமாக எங்களுக்கு நிதியுதவி தேவைப்படுகிறது - எங்கள் கதையைப் படிக்கும் உங்களைப் போன்றவர்களின் உதவியைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம்.

அவள் படும் அவஸ்தை எனக்குமானது. ஒவ்வொரு முறை ஊசி போடும்போதும், பைப் நுழைக்கும்போதும் என் உடலும் சேர்ந்து வலியால் துடிக்கிறது. ஒவ்வொரு வாரமும் அவளின் இரத்த எண்ணிக்கையை எங்களைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்போதெல்லாம், பரிசோதனைக்கு அவளே கைகளை நீட்டுகிறாள், அவளுக்கு ஊசியெல்லாம் பார்த்து இப்போது பயமில்லை. இப்படி கேன்சர் அவளை தைரியமாக்கியுள்ளதை நினைத்து ஆச்சர்யமடைவதா அல்லது அழுது புலம்புவதா?

கீமோதெரப்பி அவளை வாட்டி வதைத்துவிட்டது. நெஞ்சில் இரு துளைகள் மூலம் நேரடியாக அவளுக்கு மருந்து கொடுக்கிறார்கள். சிகிச்சையின் போது வலியைக் குறைக்க மயக்க மருந்து கொடுக்கலாம். ஆனால், எங்களுக்கு அந்த வசதியில்லையே! இதைச் சொல்லும்போது அவமானம் என் தொண்டையை அடைக்கிறது, ஒவ்வொரு முறையும் சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுக்க 8000 ருபாய் அதிகமாகத் தேவைப்படும். காசைக் காரணம் காட்டி நாங்களே எங்கள் குழந்தையை இந்த நரக வேதனைக்கு உள்ளாக்குகிறோமே என நினைக்கும்போதே நெஞ்சு பதைபதைக்கிறது, கண்ணீர் பெருக்கெடுக்கிறது.

ஒவ்வொரு முறையும் சிகிச்சை முடியும்போது, மேலும் அவளின் முடி உதிர்ந்துவிடும், சாப்பிடும் உணவைக்கூட வாந்தியெடுத்துவிடுவாள். ஒரு காலத்தில் எல்லாக் குழந்தைகள் போலும் சிரித்து விளையாடிய அவள், இப்போது பற்களெல்லாம் பழுப்பேறி, வயிறு உப்பி, எப்போதும் களைத்து காணப்படுகிறாள். தான் ஏன் இப்படியிருக்கிறோம் எனத் தெரியாத அந்தக் குழந்தை, "அம்மா, நான் ஏன் இப்படி அசிங்கமா ஆயிட்டேன், சொல்லும்மா?", என கேட்கும்போது "நீ எப்பவும் அழகுதான் இராஜாத்தி", எனக்கூறி அவளைக்கட்டி அணைத்துக்கொள்வேன்.

ஹரிணிக்கு உதவ க்ளிக் செய்க...

ஹரிணிக்கு உதவ க்ளிக் செய்க...

ஒவ்வொரு சிகிச்சைக்கும் 5 மில்லி மருந்து தேவையாம், அதன் விலையோ ரூபாய் 49,400. இதைப்போல், இன்னும் 8 பாட்டில்கள் மருந்து இப்போது தேவைப்படுகிறது. இதுவரை 14 இலட்ச ரூபாய் செலவழித்துவிட்டோம். வெக்கம் வீட்டுக் கூறுகிறேன் இதற்குமேல் சல்லிக் காசு கையில் இல்லை.

ஆனால், எனக்கு இருப்பதோ, ஒரே மகள். எங்களின் சந்தோஷமே அவள்தான். அவள் உயிருடன் இருந்தால் அது எங்களுக்குப் போதும். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்களேன் - காலம் முழுக்க உங்களுக்குக் கடமையாக இருப்போம்!

இறுக்கமான மனத்தோடு , வெறித்த கண்களுடன் யோசிக்கிறேன், நாளை அவளை இரத்தப் பரிசோதனைக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். என்ன செய்வது? இந்தப் புற்றுநோயிற்கு எதிராக எப்படித்தான் போராடுவது?

ஹரிணி உயிருடன் வாழ உங்களால் உதவ முடியுமா? இங்கு சென்று நிதியுதவி செய்யலாம் - KETTO 

பொறுப்புத் துறப்பு: மேற்கண்ட கட்டுரை கீட்டோ-வின் விளம்பரதாரர் பகுதி. இதில் கூறப்பட்டுள்ள உண்மைத்தன்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் விகடன் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். நன்கொடை செய்வதற்கு முன்னர் வாசகர்கள் உண்மைத்தன்மையை சுயாதீனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்